இந்த காரோட விலைய கேட்டா அம்பானிக்கே தலை சுத்தும்... அப்படிப்பட்ட காரை வாங்கனது அவங்களா... அடையாளமே தெரியல!
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகைகளில் (Bollywood Actress) ஒருவர், மோனா சிங் (Mona Singh). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 3.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் ஆகியவை ஆகும். இதில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 375 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜினானது, அதிகபட்சமாக 362 பிஹெச்பி பவர் மற்றும் 750 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினானது, அதிகபட்சமாக 265 பிஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 இன்ஜின்கள் உடனும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர 4 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் மற்றும் 13 ஸ்பீக்கர்களுடன் கூடிய 590W பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். சொகுசு வசதிகளை போல், இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பை பொறுத்தவரையில், அடாஸ் தொகுப்பு, 9 ஏர்பேக்குகள், டிராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பார்க் அஸிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 96.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.15 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் சில லட்ச ரூபாய் கூடுதலாக வரும்.
இது மிகவும் விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, அதற்கேற்க பல்வேறு அதிநவீன வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன. ஆனால் நடிகை மோனா சிங் இந்த காரின் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார்? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. எனினும் அவர் காரை டெலிவரி எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரானது, சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், நடிகை மோனா சிங்கிற்கு மிகவும் சௌகரியமான பயணத்தை வழங்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். இது பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும்.
கங்கனா ரனாவத் (Kangana Ranaut), ஃபர்கான் அக்தர் (Farhan Akhtar), நேஹா ஷர்மா (Neha Sharma) மற்றும் சோஹா அலி கான் (Soha Ali Khan) போன்றவர்களிடம், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








