சென்னைக்கு 4வது முறையாக அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டம்; இம்முறையாவது நிறைவேறுமா..??
சென்னைக்கு 4வது முறையாக அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டம்; இம்முறையாவது நிறைவேறுமா..??
சென்னையில் மோனா ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.

தமிழக சட்டபேரவையில் இன்று பொது போக்குவரத்து துறை கொள்கை தொடர்பான விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.

மறைந்த ஜெயலலித்தா முதல்வராக இருந்த போது 2006-ல் சென்னைக்கு மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என முதன்முதலாக அறிவித்தார்.

பின் திமுக ஆட்சிக்கு வந்து மோனோ ரயிலுக்கு பதிலாக மெட்ரோ ரயில் போக்குவரத்தை அறிவித்தது. 2009ம் ஆண்டில் அதற்கு ஒப்புதல் பெற்று திட்டத்தை செயல்படுத்தியது.

2011ம் ஆண்டில் மீண்டும் ஜெயலலித்தா தமிழகத்தின் முதல்வரானார். அப்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் மோனோ ரயில் திட்டத்திற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அப்போது, மோனா ரயில் பல்வேறு மாநிலங்களில் தோல்வி அடைந்த திட்டமாக கூறி, அதை ஜெயலலித்தா கைவிடவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதற்கு பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டு, அதன் பின் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்த போது, போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சென்னையில் 6403 கோடி செலவில் மோனா ரயில் செயல்படுத்தப்படும் என நான்காவது முறையாக அறிவித்துள்ளார்.

இதன்படி சென்னை மோனோ ரயிலின் முதல் வழித்தடம் பூந்தமல்லி, போரூர், வடபழனி, கத்திபாராவை இணைத்து 20.68 கி.மீ தூரத்திற்கு அமைகிறது.
வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கி.மீ.தூரத்திற்கு மோனோ ரயிலிற்கான இரண்டாவது வழித்தடம் அமைக்கப்படவுள்ளது.

முதல் வழித்தடம் ரூ. 3267 கோடியில்
பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் நிதி திரட்டி, கட்டமைத்து, பராமரித்து, ஒப்படைக்கும் அடிப்படையில் செயல்படுத்தப்படுத்த உள்ளது.

இரண்டாவது வழித்தடம், ரூ.3136 கோடி செலவில் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் இல்லாத வழித்தடங்களில் மோனோ ரயில் போக்குவரத்து செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








