புதுசா கார் வாங்க குழந்தை போல் அவரே ஷோரூமுக்கு வந்துட்டாரா? எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இதை அடக்க முடியல

உணவு பொருட்கள், வெளிநாட்டு ஏற்றுமதி & இறக்குமதி, வேளாண்மை, சில்லறை வணிகங்கள் மற்றும் தொண்டு அறக்கட்டளை என பல்வேறு விதமான தொழில்களை செய்து, கேரளாவின் முன்னணி தொழில் நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பது, மூலன்ஸ் க்ரூப் (Moolans Group) ஆகும். பெயருக்கேற்ப, இந்த க்ரூப் ஆனது மூலன் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்த க்ரூப்பின் கீழ் பல்வேறு கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் லக்சரி கார்களும் அடங்குகின்றன. இருப்பினும், புதியது புதியதாக விலையுயர்ந்த கார்களை வாங்கிவரும் மூலன் குடும்பத்தினர் தற்போது புதியதாக விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை வாங்கியுள்ளனர்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை மேலும் அதிகரித்து பசுமையான போக்குவரத்துக்கு வித்திட வேண்டும் என நம் மத்திய அரசில் இருந்து உலக நாடுகளை சேர்ந்த பல அரசாங்கங்கள் வரையில் முயற்சித்து வருகின்றன.

moolans group buys bmw ix

இதன் ஒருபகுதியாக எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் சார்பில் மானியங்கள் வழங்கப்படுவதால், சமீப காலங்களில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே, மூலன்ஸ் க்ரூப் வரையில் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். மூலன்ஸ் க்ரூப் சார்பில் புதியதாக வாங்கப்பட்டு இருப்பது, பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ் (BMW iX) எலக்ட்ரிக் கார் ஆகும்.

மூலன்ஸ் க்ரூப்பின் தலைவர் ஜோஸ் மூலன் அவர்கள் குடும்பத்துடன் தங்களது ஷோரூமுக்கு வந்து கேக் வெட்டி பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றதை வீடியோவாக காட்சிப்படுத்தி சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

moolans group buys bmw ix

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக விளங்கும் பிஎம்டபிள்யூவில் இருந்து தற்சமயம் 5 விதமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், தற்போது ஜோஸ் மூலன் வாங்கியிருக்கும் ஐ.எக்ஸ் ஆகும்.

ஐ.எக்ஸ் ஆனது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ்யூவி தோற்றத்தை கொண்ட லக்சரியான எலக்ட்ரிக் கார் ஆகும். எக்ஸ்.டிரைவ் 40 மற்றும் எக்ஸ்.டிரைவ் 50 என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.21 கோடி மற்றும் ரூ.1.40 கோடியாக உள்ளன.

moolans group buys bmw ix

மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரை ஜோஸ் மூலன் அவர்கள் முழுவதும் அடர் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். இதனை 'பிளாக் சாப்பையர் மெட்டாலிக்' என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது. விற்பனையில் ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.இ (EQE) எலக்ட்ரிக் கார் போட்டியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ் எலக்ட்ரிக் காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது, காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் 1 கோடி ரூபாய் வரையில் கூட அதிகமாக வரலாம். இவ்வளவு விலைமிக்க எலக்ட்ரிக் காரை மூலன்ஸ் க்ரூப்பின் தலைவர் ஜோஸ் மூலன் தனது சொந்த பயன்பாட்டிற்காகவும், குடும்ப பயன்பாட்டிற்காகவும் வாங்கியிருப்பார் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2025, 18:34 [IST]
English summary
Moolans group chairman jose buys bmw ix electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X