மைக்கேல் ஜாக்ஸன் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தும் அசத்தல் காவலர்...!! வாவ்.......!!

Written By:

டிராஃபிக்கில் வாகனத்துடன் பல நேரங்கள் காத்திருப்பதற்கு பொறுமை வேண்டும். அதற்குரிய பொறுமை நம்மில் பலருக்கு இல்லை.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

சிக்னல் சிவப்பு விளக்கிலிருந்து மஞ்சளுக்கு மாறினால், வாகனத்தை மெதுவாக ஓட்டுவதற்கு பதிலாக, அப்போது நாம் அதை இன்னும் வேகமாக செலுத்துவோம்.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

எப்போதும் டிராஃபிக்கில் மாட்டாமல் சென்றுவிட வேண்டும் என்பது தான் உலகளவில் வசிக்கும் வாகன ஓட்டிகளின் மனநிலை.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகர வாகன ஓட்டிகளுக்கு டிராஃபிக்கில் நிற்பது ஒரு பொழுதுபோக்காக மாறியிருக்கிறது.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

ஆம், இந்தூரின் பெரும்பாலான டிராஃபிக் சிக்னல்களில் பச்சை விளக்குகள் விழுந்தும் வாகன ஓட்டிகள் அங்கேயே அப்படியே நிற்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

இதுக்கெல்லாம் காரணமாக இருப்பவர் ரஞ்சித் சிங் என்ற போக்குவரத்து காவலர். இவர் ஒரு சினிமா நட்சத்திரம் கிடையாது. ஆனால் மத்திய பிரதேச மாநிலம் முழுக்க இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Trending On Drivespark:

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

இந்தியாவில் பிரையோ மாடலை பின்பற்றி மின்சார கார் வெளியிடும் ஹோண்டா நிறுவனம் ..!!

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

ரஞ்சித் சிங் டிராஃபிக் சிக்னலில் இருந்தால், வாகன ஓட்டிகளுக்கு பெரிய கொண்டாட்டம் தான். டிராஃபிக்கை கட்டுபடுத்த இவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் அதற்கு காரணம்.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

38 வயதான இந்த போக்குவரத்து காவலர், புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸனின் தீவிர ரசிகர். இதனால் அவர் பணியாற்றும் டிராஃபிக் சிக்னல்களில் ஜாக்ஸனின் நடன அசைவுகளை பின்பற்றி, பணி செய்து வருகிறார்.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

இதனால் இவருக்கு என்று பல ரசிகர்கள் இந்தூர் உட்பட மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வருகின்றனர்.

காவலர் ரஞ்சித் சிங்கின் நடனத்தை ரசிக்கவே பல வாகன ஓட்டிகள் அவர் பணியாற்றும் சிக்னல்கள் வழியாக வந்து செல்கின்றனர்.

கலக்கலாக நடனமாடி போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தும் ’ஜாக்ஸன்’ ரஞ்சித் சிங் வீடியோ:

இதுப்பற்றி கூறிய ரஞ்சித் சிங் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நடனம் ஆடி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி வருவதாகவும், டிராஃபிக்கை மதிக்காமல் சென்ற பலரும், தனது இந்த மாற்றத்திற்கு பிறகு போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாகவும் கூறினார்.

குறிப்பாக ரஞ்சித் சிங் பணியாற்றும் டிராஃபிக் நிறுத்தங்களில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான குற்ற வழக்குகள் பதிவாவது குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending On Drivespark:

நிஸான் மற்றும் டட்சன் கார்களுக்கு ரூ.77,000 வரை தள்ளுபடி ஆஃபர்!

மின்சார வாகன தயாரிப்பிலிருந்து பின்வாங்கிய டொயோட்டா... காரணம் இதுதான்...!!

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

இதுதவிர இந்திய பல்கலைக்கழகங்கள் சிலவற்றில், இவருடைய பணியாற்றும் சிந்தனைகள் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

மைக்கேல் ஜாக்ஸனை பின்பற்றி போக்குவரத்து நிறுத்தங்களில் பணியாற்றும் ரஞ்சித் சிங்கை அவருடன் பணியாற்றும் பல காவலர்கள் முதலில் பகடி செய்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் புகழும் ’மைக்கேல் ஜாக்ஸன்’ காவலர்..!!

ஆனால் குற்ற சம்பவங்கள் குறைந்த புள்ளிவிவரங்கள் வெளியான நிலையில், தற்போது இவரது ஸ்டலை பின்பற்றி பல காவலர்கள் சிக்னலில் பணி செய்வதாக தெரியவந்துள்ளது.

Picture credit: Ruptly

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Moon Walking Traffic Cop Turns A National Sensation. Click for Details...
Story first published: Saturday, December 30, 2017, 13:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark