பைக், ஆட்டோக்களுக்கு இங்கு அனுமதி இல்ல! வாழ்க்கைல ஒரு முறையாச்சும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே-ல பயணிச்சிடனும்!

நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலையாக டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே உள்ளது. இதன் முதல் கட்டத்தை கடந்த 12 ஆம் (பிப்ரவரி) தேதி நாட்டிற்காக பிரதமர் மோடி அர்பணித்தார். டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே-வின் முதல் கட்டம் 246 கிமீ நீளம் கொண்டது.

இது தலைநகரை ராஜஸ்தானின் முக்கிய நகரமான ஜெய்பூர் உடன் இணைக்கும். ஜெய்பூரில் மிக முக்கியமான சுற்றுலா தளங்கள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனுடைன் இணைக்கும் வகையிலேயே நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலையின் முதல் கட்டம் உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த பகுதிகளையும் இணைத்தவாறு இந்த எக்ஸ்பிரஸ்வே மும்பை வரை அழைத்து செல்ல இருக்கின்றது.

எக்ஸ்பிரஸ்வே

இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்திருப்பது அந்த பகுதி (பிராந்தியங்)-களின் பொருளாதார வளர்ச்சியைக் கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பயண நேரத்தை பாதி அளவில் இந்த சாலை குறைக்கும். முன்னதாக டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை பயணிக்க வேண்டும் எனில் ஐந்து மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு இருக்கும் இந்த எக்ஸ்பிரஸ் சாலையை பயன்படுத்தி ஜெய்ப்பூர் பயணித்தால் வெறும் மூன்று அல்லது மூன்றரை மணி நேரங்களே போதுமானதாக இருக்கின்றது.

பயணத்தை பெரும் அளவில் இந்த சாலைக் குறைக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்யங்களையும், சிறப்புகளையும் இந்த பாதை உள்ளடக்கி இருக்கின்றது. இதுகுறித்த விபரங்களையும், டோல் கட்டணம் மற்றும் வேக வரம்பு பற்றிய முக்கிய விபரங்களை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எக்ஸ்பிரஸ்வே

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்-வே-வின் ஒட்டுமொத்த தூரம் மற்றும் மதிப்பு:

சுமார் 200 கிமீ தூரம் வரை இந்த எக்ஸ்பிரஸ்வே குறைக்க இருக்கின்றது. டெல்லி - மும்பை இடையேயான பயண தூரம் 1,424 கிமீட்டரில் இருந்து 1,242 கிலோமீட்டராக குறைய இருக்கின்றது. ஒரே நீளமான பாதையாக இது உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்த அளவு மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே நாட்டிலேயே வேறு எங்குமே இதுவரை கட்டமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. 98 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த எக்ஸ்பிரஸ்வே உருவாக்கப்படுகின்றது. இந்த அளவு மிக பெரிய தொகையே மத்திய அரசு எக்ஸ்பிரஸ்வேவிற்காக ஒதுக்கி இருக்கின்றது.

டோல் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும்?

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, எக்ஸ்பிரஸ் வே-வின் தொடக்கத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள காலிபூருக்கு பயணிக்க இலகு ரக பயணிகள் வாகனங்களுக்கு ரூ. 90-ம், இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கு ரூ 145-ம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகின்றது.

எக்ஸ்பிரஸ்வே

பர்கபரா பகுதிக்கு செல்ல வேண்டும் எனில் இலகு ரக வாகன ஓட்டிகள் ரூ. 500 வரை சுங்க கட்டணத்திற்காக மட்டுமே ஒதுக்கி வைக்க வேண்டி இருக்கும். அதுவே, இலகுரக வர்த்தக வாகனமாக அது இருக்கும் எனில் அந்த வாகனங்கள் ரூ. 805 வரை கட்டணம் செலுத்த வேண்டும். கனரக வாகனங்களுக்கு ரூ. 1,680 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தெரிகின்றது.

அதேவேளையில் ஏழு ஆக்சில்கள் கொண்ட வாகனம் இந்த எக்ஸ்பிரஸ்-வேவின் ஆரம்ப புள்ளியில் இருந்து பர்காபாரா வரை பயணிக்க வேண்டும் எனில் அதற்கான சுங்க கட்டணம் ரூ. 3,125 வரை வசூல் செய்யப்பட இருக்கின்றது. தனி நபர் வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக புது டெல்லியில் இருந்து ஜெய்பூர் வரை பயணிக்க ரூ. 585 வரை கட்டணம் வசூலிக்கப்படும். எக்ஸ்பிரஸ்வே-வின் ஆரம்பு புள்ளி குருகிராமில் உள்ள அலிபூரில் இருந்து தொடங்குகின்றது. இதனை சோஹ்னாவின் உயர்த்தப்பட்ட சாலை வாயிலாக சென்றால் அடைந்துவிட முடியும்.

எக்ஸ்பிரஸ்வே

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் வே-வின் பயண நேரம்

இப்போதைய நிலவரப்படி டெல்லி - மும்பை இடையே பயணிக்க வேண்டும் எனில் சுமார் 24 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இது, தேசத்தின் தலைநகரான டெல்லிக்கும், இந்திய பொருளாதாரத்தின் தலைநகரான மும்பைக்கும் இடையில் பெரிய அளவில் இடைவெளி ஏற்படுத்துகின்றது. இதனை குறைக்கும் வகையிலேயே புதிய எக்ஸ்பிரஸ்வே உள்ளது. இதன் வாயிலாக பயணிக்கும் பட்சத்தில் வெறும் 12 மணி நேரங்களிலேயே டெல்லியில் இருந்து மும்பையை வந்தடைந்துவிடலாம்.

இந்த எக்ஸ்பிரஸ்வே பல்வேறு முக்கிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்க இருக்கின்றது. அந்தவகையில், கோடா, இந்தூர், ஜெய்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் ஆகிய நகரங்களை இணைக்க இருக்கின்றது. டெல்லி, ஹர்யானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையே டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே இணைக்கும். 1,386 கிமீ நீளம் கொண்டதே இந்த எக்ஸ்பிரஸ்வே ஆகும்.

எக்ஸ்பிரஸ்வே

எவ்வளவு வேகத்தில் பயணிக்கலாம்?

இது ஓர் விரைவு சாலை ஆகும். ஆகையால், வாகனங்கள் அதிக வேகத்தில் இயங்கிக் கொள்ள அனுமதி உண்டு. அதிக வேகத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாதையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும். இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் சில பொறுமையாக நகரக் கூடிய வாகனங்கள் எக்ஸ்பிரஸ்-வேயில் பயணிக்க அனுமதி கிடையாது. மணிக்கு 120 கிமீ வேகம் வரை இந்த பாதையில் வாகனங்களால் பயணிக்க முடியும்.

ஒவ்வொரு பத்து கிமீ தூர இடைவெளியிலும் ஸ்பீடு கேமிராக்கள் நிறுவப்பட்டு இருக்கும். இது வாகனங்களின் வேகத்தைக் கண்டறியும். இதுதவிர, ஒவ்வொரு கிமீட்டருக்கும் ஓர் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இருக்கும். இரண்டும் வாகனங்களின் போக்குவரத்தைக் கண்கானிக்கும் விதமாக பயன்படும்.

Article Published On: Wednesday, February 22, 2023, 14:20 [IST]
English summary
More details about delhi mumbai expressway
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X