230 கார்களை நொறுக்கி அள்ளிய ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7: திரைக்கு பின்னால்...!!

Written By:

கடந்த வாரம் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 ஹாலிவுட் சினிமா வசூலை வாரி குவித்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் நாயகன் பால்வாக்கரின் கடைசி படம் என்பதோடு, மிரட்டலான கார் சேஸிங் காட்சிகளை பார்க்க கூட்டம் அலைமோதி வருகிறது.

தமிழ் சினிமாவில் கார் சேஸிங் காட்சிகள் ஊறுகாய் போல தொட்டுக் கொள்ள க்ளைமேக்ஸில் மட்டும் வைப்பார்கள். ஆனால், இந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை சினிமாக்கள் கார் சேஸிங் காட்சிகளை மையமாக வைத்தே கதைக்கருவும், திரைக்கதையும் உருவாக்கப்படுகிறது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசையின் 7ம் பாகத்திலும் பிரம்மாண்டமான கார் சேஸிங் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. இதற்காக, இந்த படத்தில் 230 கார்களை நொறுக்கி அள்ளியுள்ளனர்.

மொத்த கார்கள்

மொத்த கார்கள்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7ம் பாகத்தில் 350 கார்களை மொத்தமாக பயன்படுத்தியுள்ளனர்.

சேதம்

சேதம்

மொத்தம் பயன்படுத்தப்பட்ட கார்களில் 230 கார்கள் பலத்த சேதமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கார் ஒருங்கிணைப்பாளர்

கார் ஒருங்கிணைப்பாளர்

2006ம் ஆண்டு முதல் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசை சினிமாக்களுக்கு கார்களை ஒருங்கிணைத்து தரும் பணியை டென்னிஸ் மெக்கார்த்தி செய்து வருகிறார். அவர் இந்த படத்தில் கார்களின் பயன்பாடு குறித்து அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உங்களுக்கு விவரிக்கிறார்.

அப்படியா...

அப்படியா...

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 சினிமாவில் விமானத்திலிருந்து கீழே கார்கள் விழுவது போன்ற ஒரேயொரு சீனில் மட்டும் 34 கார்களை பயன்படுத்தினோம். அதில், 6 சுபரு WRX கார்கள், 8 டாட்ஜ் சார்ஜர் கார்கள், 8 சேலஞ்சர்கள், 6 ஜீப்புகள், 6 கமாரா கார்களை பயன்படுத்தினோம்.

போச்சு...

போச்சு...

விமானத்திலிருந்து கார்கள் விழுவது போன்ற சீனில் மட்டும் 4 கார்களை இழந்துவிட்டோம். அவை ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

இது மோசம்...

இது மோசம்...

கொலராடோவின் மோனார்க் கணவாய் பகுதி அருகே, மலையையொட்டிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட கார் சேஸிங் காட்சிக்காக மட்டும் 40க்கும் அதிகமான கார்கள் கடும் சேதமடைந்தன. அந்த கார்களை அப்புறப்படுத்துவதற்கு அங்குள்ள பழைய கார் விற்பனையாளரான ஜான்சன் என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாக மெக்கார்த்தி தெரிவித்தார்.

ஜான்சனின் தகவல்

ஜான்சனின் தகவல்

படப்பிடிப்பின்போது நொறுக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ், ஃபோர்டு கிரவுன் விக்டோரியா, மிட்சுபிஷி மான்டிரோ உள்ளிட்ட கார்களை அப்புறப்படுத்துவதற்கு இரண்டு நாட்கள் ஆனதாக ஜான்சன் தெரிவித்தார்.

24 மணிநேரமும் பிஸி...

24 மணிநேரமும் பிஸி...

இந்த கார்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய கார்களை அடுத்த நாள் ஷூட்டிங்கிற்காக வழங்குவது என 24 மணிநேரமும் பணிபுரிய வேண்டிய சூழல் அதிகம்.

25 கார்கள் சேதம்

25 கார்கள் சேதம்

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் சராசரியாக 25 கார்கள் கடுமையாக சேதமடையும் என்று மெக்கார்த்தி தெரிவித்தார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

படப்பிடிப்பில் சேதமடைந்த கார்களை சரிசெய்து விற்பனை செய்ய வேண்டாம் என்று ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 திரைப்படக்குழுவினர் கேட்டுக்கொண்டதையடுத்து, அனைத்து கார்களையும் உடைக்க முடிவு செய்துள்ளனர்.

என்னென்ன கார்கள்?

என்னென்ன கார்கள்?

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்தில், மஸராட்டி, புகாட்டி வேரான், ஃபெராரி, ஃபோர்டு மஸ்டாங் என ஏராளமான விலையுயர்ந்த கார்கள் பயன்படுத்தப்பட்டன. அதில், பெரும்பாலான கார்கள் தற்போது காயலாங்கடைக்குத்தான் சென்றுள்ளதாம்.

சொகுசு பஸ்

சொகுசு பஸ்

இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட சொகுசு பஸ் ஒன்றும் பலத்த சேதமடைந்துவிட்டதாம்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் கார்கள்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் கார்கள்

இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட 10 விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
According to reports, A huge amount of sports cars were used and destroyed for the “Fast & Furious” 7 cinema.
Story first published: Friday, April 10, 2015, 9:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark