கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி, டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் பாதிப் பேருக்குக் கண்ணில் பிரச்சனை இருப்பதாகச் சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்

இந்தியாவில் தான் தினமும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வாகனங்களில்தான் இந்தியாவில் சரக்குகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது. இதனால் தான் இந்தியப் பொருளாதாரம் தொய்வில்லாமல் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் நேரும் விபத்துக்களில் அதிகமாக இப்படியான லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது.

கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சாலையில் கனரக வாகனங்கள் தான் அதிகமாகச் செல்கிறது. இதனால் அந்த வாகனங்கள் தான் விபத்தில் அதிகமாகச் சிக்கும் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படியாகக் கனரக வாகனங்களில் டிரைவர்களை கவனித்தால் அவர்கள் பெரும்பாலும் கண்ணாடி அணியாதவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழக்கக் கண்ணாடி அணிய வேண்டியதன் தேவை பலருக்கு இருக்கிறது. ஆனால் டிரக் டிரைவர்கள் அநேகமாக கண்ணாடி அணியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் நொய்டாவில் உள்ள ஐகேர் கண் மருத்துவமனை மற்றும் என்ஜிஓ அமைப்பான சைட் சேவர்ஸ் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தியாவில் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள், அதாவது லாரி, டிரக் ஓட்டுநர்களின் கண்களை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக நாடு முழுவதும் பயணித்து ஆங்காங்கே கேப்பைகளை நடத்தி லாரி ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்களை நடத்தினர்.

இந்த ஆய்வில் மொத்தம் 34 ஆயிரம் டிரக் டிரைவர்கள் நாடு முழுவதும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த ஆய்வில் முடிவுகள் தான் பெரும் அதிர்ச்சியான முடிவுகளைத் தந்தது. இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களில் கண்ணாடி அணியாதவர்களில் 38 சதவீதமானோருக்குக் கிட்டத்துப் பார்வையில் பிரச்சனை இருக்கிறது 8 சதவீதமானவர்களுக்குத் தூரத்துப் பார்வையில் பிரச்சனை இருக்கிறது. 4 சதவீதமானோருக்குக் கிட்டத்துப் பார்வை மற்றும் தூரத்துப் பார்வை ஆகிய இரண்டிலும் பிரச்சனை இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது 36-50 வயதிற்குப்பட்டவர்கள் தான். இவர்களில் பெரும்பாலானோருக்குக் கிட்டத்துப் பார்வையில் பிரச்சனை இருக்கிறது. இதுவே 18-35 வயதுடையவர்களில் பலருக்குத் தூரத்துப் பார்வையில் பிரச்சனை இருக்கிறது.

இது குறித்து ஐகேர் கண் மருத்துவமனையின் சிஇஓ செளரப் ரெளத்திரி கூறும் போது : " ஒரு கண் மருத்துவராக எங்களுக்கு இந்தியாவில் நடக்கும் அதிகமான விபத்துக்கள் கண் பிரச்சனை காரணமாகத் தான் நடக்கிறது என்பதை அறிகிறோம். பல டிரைவர்கள் கண்களில் பிரச்சனையுடனேயே வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனால் அதிகமான விபத்து நடக்கிறது. இவர்களுக்கு தங்களுக்குக் கண்ணில் பிரச்சனை இருப்பதே தெரியவில்லை. தெரிந்தும் அதற்கான சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்தியச் சாலையில் மொத்தம் 90 லட்சம் லாரி ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். நாங்கள் வெறும் 34 ஆயிரம் பேரிடம் தான் சாம்பிள் எடுத்துள்ளோம். இதில் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது மொத்தம் 90 லட்சம் டிரைவர்களில் பாதிப் பேருக்கும் மேல் கண்ணில் பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் கண்ணாடி இல்லாமல் வாகனம் ஓட்டவே தகுதியற்றவர்கள்.

இந்த ஆய்விற்காக நாங்கள் நடத்திய பரிசோதனை முகாம்களில் டிரைவர்களுக்கான பிரச்சனைகளைக் கண்டறிந்து அவர்களுக்கான கண்ணாடிகளை வழங்கினோம். உடனடியாக வழங்க முடியாதவர்களுக்கு அவர்கள் பாதையில் அடுத்து எங்கள் முகாம் எங்குச் சந்திக்கிறதோ அங்கு அவர்களுக்குக் கண்ணாடிகளை வழங்க ஏற்பாடுகளைச் செய்தோம். இதனால் மூலம் அவர்கள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்க முடியும். "

இந்தியாவில் லாரி டிரைவர் தொழில் முறைப்படுத்தப்படாத அமைப்பாக இருப்பதால் அவர்களைக் கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது. இதனால் அவர்களுக்கான உடல் ரீதியிலான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதில் சிரமம் இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் அல்லது நகருக்கு வெளிப்பகுதிகளில் மட்டுமே இருக்கின்றனர். இதனால் கண் சிகிச்சை முகாம்களை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் சிரமம் இருக்கிறது.

இந்தியச் சாலையில் வாகன ஓட்டுகளுக்கு நீண்ட நேரம் பணி நேரம் மற்றும் முறையான சுகாதார வசதிகள் இல்லாததால் அவர்களுகஅக அதிகமாக டிரை கண்கள் மற்றும் க்ரானிக் அலர்ஜி ஆகிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதை அரசு முறைப்படுத்தி இந்தியச் சாலைகளில் லாரிகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான கண் பரிசோதனையைக் கட்டாயப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் பலர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
More than half of the Indian truck drivers have eye sight issues
Story first published: Monday, January 23, 2023, 12:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X