இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான விபத்துக்கள்! 3.5 நிமிடத்திற்கு ஒருவர் மரணம் என தகவல்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக விபத்துக்கள் நடந்துள்ளது. மத்திய அரசு 2021ம் ஆண்டு நடந்த விபத்துக்கள் குறித்து வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்
சாலைகளில் விபத்து என்பது இன்று தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிவிட்டது. ஏராளமான மக்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். அரசும் சாலை விபத்துக்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் எச்சரிக்கைகளைச் செய்து வருகிறது. சாலை விதிகளை மீறுவதால் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலை விதிகளை மதிக்கச் சொல்லி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து சாலை விபத்துகள் நடந்து வண்ணமே இருக்கிறது.

இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை கடந்த 2021ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களின் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டில் நடந்த சாலை விபத்தை விட 2021ம் ஆண்டு விபத்தின் எண்ணிக்கை 8.1 சதவீதமும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை14.8 சதவீதமும் குறைந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
கொரோனா காலகட்டம் 2020-2021ம் ஆண்டை பெரிய அளவில் தாக்கியதால் சாலைகளில் போக்குவரத்து வெகுவாக குறைந்தது. இதனால் விபத்தின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் 2021ம் ஆண்டு அறிக்கையை கொரோனாவிற்கு முந்தைய காலமான 2019ம் ஆண்டு தகவல்களுடன் ஒப்பிடப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் 4,12,432 விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். இது ஒரு நாளுக்குச் சராசரியாக 1130 விபத்துக்களும், 422 மரணங்கள் எனவும், ஒரு மணி நேரத்திற்கு 47 விபத்துக்கள் 18 மரணங்கள் எனவும் எனக் கணக்கிடலாம். 2020ம் ஆண்டுக் காலத்தில் லாக்டவுன் காரணமாக வெகு குறைவான எண்ணிக்கையிலான விபத்துக்களும், மரணங்களுமே நிகழ்ந்துள்ளது.
2021ம் ஆண்டு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 18 முதல் 45 வரையிலான வயதை உடையவர்கள் 67.6 சதவீதமும் இருக்கின்றனர். இதுவே 18-60 சதவீதமானவர்களின் பட்டியலைப் பார்த்தால் மொத்த விபத்தில் 84.5 சதவீதம் இருக்கின்றனர். மொத்தம் பதிவான 4,12,432 விபத்துக்களில் 1,28,825 விபத்துக்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளது.96,382 விபத்துக்கள் மாநில நெடுஞ்சாலையிலும், 1,87,225 விபத்துகள் மற்ற சாலைகளிலும் நிகழ்ந்துள்ளது.
மொத்தம் நடந்த விபத்தில் மரணம் நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை 1,42,163 ஆகும் அதில் தேசிய நெடுஞ்சாலையில் 50,953, மாநில நெடுஞ்சாலைகளில் 34,946, மற்ற சாலைகளில் 56264 விபத்துக்கள் நடந்துள்ளது. மரணம் நிகழ்ந்த விபத்துக்கள் 2020ம் ஆண்டு 1,20,806 விபத்துக்களும், 2021ம் ஆண்டு 1,42,163 விபத்துக்களும் நடந்துள்ளது. இது 17.7 சதவீதம் உயர்வாகும். 2021ம் ஆண்டு மொத்தம் நிகழ்ந்த விபத்தில் 34.5 சதவீத விபத்துக்களில் மரணம் ஏற்பட்டுள்ளது.
மாநில வாரியாக பார்க்கும் போது தமிழ்நாட்டில் தான் ஏராளமான சாலை விபத்துக்கள் நடந்துள்ளது இந்த பட்டியலில் முதலிடத்தில் தமிழ்நாடு தான் உள்ளது. அதே நேரத்தில் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உத்திர பிரதேச மாநிலம் தான் நம்பர்1 இடத்தில் இருக்கிறது. 2021ம் ஆண்டு சாலை விபத்துக்களை மீறுவது மற்றும் அதிக வேகம் ஆகிய 2 காரணங்கள் தான் விபத்திற்கு முக்கியமான காரணங்கள். மொத்த விபத்துக்களில் 69.6 சதவீதம் அதிக வேகத்தினாலும், ராங் சைடு டிரைவிங் காரணமாக 5.2 சதவீத விபத்துகளும் நடந்துள்ளது.
மொத்தம் நடந்த விபத்துக்களில் 46.9 சதவீத விபத்துக்களும், 54.2 சதவீத மரணங்களும், 46.9 சதவீத காயங்களும் திறந்த வெளியில் நிகழ்ந்துள்ளது. அதாவது மனித நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் நடந்துள்ளது. சாலைகளை வைத்துப் பார்க்கும் போது 67.5 சதவீத விபத்துக்களில் நேரான ரோடுகளிலும், வளைவுகள், குழிகள், வளைவிற்கு முந்தைய பகுதிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 13.9 சதவீத விபத்துக்களுமே நடந்துள்ளன.
மொத்தம் நடந்த விபத்துக்களில் இருசக்கர வாகனங்கள் அதிகமான விபத்துக்களில் சிக்கியுள்ளன. இருசக்கர வாகனங்கள் இதில் முதலிடம் பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இரண்டாவது இடத்தில் இலகு ரக வாகனங்களான கார், ஜீப், டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. 2021ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் மரணமடைந்தவர்களில் 18.9 சதவீதம் பேர் சாலைகளில் ஓரமாக நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதி பலியானவர்கள்.
2021ம் ஆண்டு நடந்த விபத்துக்களில் 16.3 சதவீத விபத்துக்களும், 9.9 சதவீத மரணத்தை ஏற்படுத்தும் விபத்துகளும் நகர்ப்புற பகுதியில் நடந்தான் நடந்துள்ளது. சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில் தான் அதிகம் ஏற்படுகிறது.
இது போக மொத்தம் நடந்த விபத்துக்களில் மரணமடைந்தவர்கள் 21.2 சதவீதம் பின்புறமாக வந்து மோதியது அதாவது ஒரு வாகனத்தின் பின்புறமும், மற்றொரு வாகனத்தின் முன்புறமும் மோதிய விபத்தாக இருக்கிறது. நேருக்கு நேர் மோதிய விபத்தில் மரணமடைந்தவர்கள். 18.6 சதவீதமாக இரக்கிறது. பக்கவாட்டு பகுதியில் மோதியது 11.9 சதவீதமும், விபத்தை ஏற்படுத்திவிட்டு ஒரு வாகனம் தப்பியோடிய சம்பவம் 16.8 சதவீதமும் இருக்கிறது.
இந்தியாவில் நடந்த மொத்த விபத்துக்களில் 100க்கு 37.3 சதவீதமான விபத்துக்களில் மரணம் நிகழ்ந்துள்ளது. இதுவே இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டு 36 சதவீதமாக மட்டும் தான் இருக்கிறது. இதை மாநில வாரியமாகப் பிரித்தால் மிசோரம் மாநிலத்தில் மொத்தம் நிகழ்ந்த விபத்தில் 81 சதவீதம் மரணத்தைக் கொண்ட விபத்தாகவும், பீகார் மாநிலத்தில் 80 சதவீதமும், பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீதமும் இருக்கிறது தேசிய சராசரியைவிட 60 சதவீதமான மாநிலங்களில் அதிகமான விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளது. எனக் கூறுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








