சுற்றுலாத் தலமாக மாறிய உலகின் அபாயகரமான விமான ஓடுபாதை... !!
ஏற்கனவே நாம் வழங்கிய உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகளில் ஒன்றாக மாஹோ கடற்கரை அருகிலுள்ள விமான ஓடுபாதையை குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில், இந்த அபாயகரமான பகுதி தற்போது பரபரப்பான சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.
கடற்கரையின் மிக அருகாமையில் அமைந்திருக்கும் இந்த ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வரும் விமானங்கள் மிக தாழ்வாக இந்த இடத்தில் பறப்பதை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கரீபியன் தீவு
சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற கரீபியன் தீவு கூட்டங்களில் அமைந்திருக்கும் மாஹோ பீச்தான் இப்போது பரபரப்பான சுற்றுலா தலமாக மாறியிருக்கிறது. சர்வதேச அளவில் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

குவியும் மக்கள்
ஒருபுறம் பீச்சில் காற்றுவாங்கியபடியும், சூரிய குளியல் போட்டபடியும், தலையில் இடித்துச் செல்வது போன்று தரையிறங்கும் விமானங்களை கண்டு மகிழ்வதற்காக இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

சர்வதேச முக்கியத்துவம்...
பொழுதுபோக்குவதற்காக வருபவர்கள் மட்டுமின்றி விமான ஆர்வலர்கள் மற்றும் சாகச விரும்பிகளுக்கான சிறந்த தலமாகவும் இது மாறியிருக்கிறது. இதையடுத்து, சர்வதேச அளவில் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் இந்த இடத்தை குறிவைத்து தற்போது வியாபாரத்தை செய்து வருகின்றன.

சுத்தமான இடம்
மாலத்தீவு, பிலிப்பைன்ஸ் கடற்கரைகளை போன்று தண்ணீர் தெளிவாகவும், கடற்கரை மிகவும் சுத்தமாக இருப்பதும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

த்ரில்...
விமானங்கள் பலத்த சப்தத்துடன் தலையில் இடித்துச் செல்வது போல தரையிறங்குவது புதிய அனுபவத்தையும், த்ரில்லையும் தருவதாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








