வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

இந்தியாவில் உள்ள பல சாலைகள் அமானுஷ்யங்கள் நிறைந்தவை என நம்பப்படுகிறது. அங்கு வெள்ளை நிற சேலையுடன் பேய்கள் உலாவுவதாகவும், வாகனம் செல்லும் வேகத்திற்கு ஏற்ப பேய்கள் ஓடி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

By Arun

இந்தியாவில் உள்ள பல சாலைகள் அமானுஷ்யங்கள் நிறைந்தவை என நம்பப்படுகிறது. அங்கு வெள்ளை நிற சேலையுடன் பேய்கள் உலாவுவதாகவும், வாகனம் செல்லும் வேகத்திற்கு ஏற்ப பேய்கள் ஓடி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். அப்படி பேய்கள் உலாவுவதாக கூறப்படும் திகிலூட்டும் சாலைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

சத்தியமங்கலம் வன விலங்கு சரணாலயம் வழியாக செல்லும் என்எச்-209

தமிழகத்தின் பசுமை நுரையீரல் என வர்ணிக்கப்படும் சத்தியமங்கலம் வனப்பகுதி ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல நூறு கிலோ மீட்டர்கள் பரந்து விரிந்து காணப்படும் பிரம்மிப்பான சத்தியமங்கலம் காடுகளை பார்த்தாலே தலை சுற்றிப்போகும்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

தமிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன் பதுங்கியிருந்து கோலோச்சிய காடு சத்தியமங்கலம். வீரப்பனுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியதே சத்தியமங்கலம் வனப்பகுதிதான். இதன் உள்ளே செல்பவர்களால் அவ்வளவு எளிதாக வெளியேற முடியாது.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

வீரப்பன் உயிருடன் இருந்தபோது, சத்தியமங்கலம் வனப்பகுதியில் வைத்து பலரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வீரப்பனின் கூட்டாளிகளும் உடந்தையாக இருந்துள்ளார்களாம். அப்படி கொலை செய்யப்பட்டவர்களின் ஆவி சத்தியமங்கலம் வனப்பகுதியில் இன்றும் உலாவி வருவதாக கூறப்படுகிறது.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

இரவு நேரங்களில் திடீர் திடீரென அலறல் சத்தம் கேட்பதாக, சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பழங்குடி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு நேரங்களில் பேய் போன்ற உருவங்களையும் பார்த்துள்ளோம் என பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

எனவே சத்தியமங்கலம் வன விலங்கு சரணாலயத்தின் வழியாக செல்லும் என்எச்-209 சாலையை, இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், மிகுந்த அச்சத்துடன்தான் கடக்கின்றனர். முன்னதாக அங்குள்ள திம்பம் மலைப்பாதையில் ஏறுவதற்கு முன்பாக பண்ணாரி மாரியம்மனை வணங்கி செல்கின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

கண்டோன்மெண்ட் ரோடு, டெல்லி

டெல்லி கண்டோன்மெண்ட் சாலை, இந்தியாவில் மிகவும் பயங்கரமான சாலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் யாரும், எதற்காகவும் தங்கள் வாகனத்தை நிறுத்துவதே இல்லை. இதன் பின்னணியில் திகிலூட்டும் கதை ஒன்று உள்ளது.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

டெல்லி கண்டோன்மெண்ட் சாலையில், வெள்ளை நிற சேலையுடன் பெண் பேய் ஒன்று உலாவுவதை மக்கள் பார்த்துள்ளதாக பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இரவு நேரங்களில் மிகுந்த பயத்துடன்தான், டெல்லி கண்டோன்மெண்ட் சாலையை வாகன ஓட்டிகள் கடக்கின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

வாகன ஓட்டிகள் வேக வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, திடீரென வாகனத்தை நிறுத்துமாறு ஒரு குரல் கேட்கிறதாம். இதனால் பயத்தில் வியர்த்து விறுவிறுத்து போகும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தாமல், வேகத்தை இன்னும் அதிகரித்து அந்த சாலையை கடக்க முயல்கின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

அப்படி வாகனத்தை நிறுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகளின் முன் திடீரென பெண் பேய் ஒன்று தோன்றுகிறதாம். வாகனம் பயணிக்கும் வேகத்திற்கு ஏற்ப அந்த பேயும் உடன் ஓடி வருகிறதாம். வெள்ளை நிற சேலையுடன் அந்த பேயை பல முறை பார்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

டெல்லி கண்டோன்மெண்ட் சாலையில் நடைபெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பெண்தான் இன்னமும் ஆவியாக அங்கு சுற்றி வருவதாக அப்பகுதி மக்களும், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளும் நம்புகின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

ப்ளூ கிராஸ் ரோடு, சென்னை

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பெசண்ட் நகர் அருகே ப்ளூ கிராஸ் ரோடு அமைந்துள்ளது. ஒரே ஒரு லேன் கொண்ட இந்த சாலை முழுவதும் வனாந்திரம் போல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த சாலையில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

எனவே அவர்களின் ஆவி இன்னமும் அங்கே உலாவி கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். எனவே இரவு நேரங்களில் ப்ளூ கிராஸ் சாலையில் செல்வது ஆபத்தானது என்பது அப்பகுதி மக்களின் கருத்து. இரவு நேரங்களில் யாரும் அங்கு செல்ல வேண்டாம் எனவும் மற்றவர்களை அப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

காசெடி காட், மும்பை-கோவா ஹைவே

இந்த பகுதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்களின் முன்பு திடீரென ஒரு உருவம் தோன்றி, வாகனத்தை நிறுத்துமாறு கூறுகிறதாம். இதனால் வாகனத்தை வேகமாக இயக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அந்த உருவத்தை பல முறை பார்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

என்எச்-33, ஜாம்ஷெட்பூர்-ராஞ்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் என்எச்-33 சாலை அமைந்துள்ளது. ஜாம்ஷெட்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை இரவு நேரங்களில் பாதுகாப்பற்றதாக விளங்குகிறது. இது நக்சலைட்டுகள் நிறைந்த பகுதி.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

இந்த சாலையில் வெள்ளை நிறத்தில் பேய் உலாவுவதை பல முறை பார்த்துள்ளதாக வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணிக்க ஏதுவாக, சாலை முழுவதும் ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

பெசன்ட் அவென்யூ ரோடு, சென்னை

சென்னையில் அமைந்துள்ள இந்த சாலையில், பகல் நேரங்களில் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் நள்ளிரவு நேரங்களில் அமானுஷ்யங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளை பேய் அறைவதாக நம்பப்பட்டு வருகிறது.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

கஸரா காட்

மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில், கஸரா காட் அமைந்துள்ளது. இந்த சாலையில் அதிக அளவிலான மரங்களும், புதர்களும் வளர்ந்துள்ளன. நள்ளிரவு நேரங்களில், மரங்களின் உச்சியில் பேய் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளதாக, அப்பகுதி வழியாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

இன்னும் சிலர் தெரிவித்துள்ள தகவல்கள் மிரட்டலான உள்ளன. நள்ளிரவு நேரங்களில் தலையில்லாத மூதாட்டி ஒருவர் வெள்ளை நிற சேலையில் அங்கு உலாவி வருகிறாராம். இதனால் மிகுந்த அச்சத்துடன்தான் இந்த சாலையை வாகன ஓட்டிகள் கடக்கின்றனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்), சென்னை

சென்னை மக்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் பலருக்கும் தெரிந்த சாலை இசிஆர். சென்னை-புதுச்சேரியை இணைக்கும் முக்கியமான சாலைதான் இசிஆர். கேளிக்கை, கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாத இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் பேயை பார்த்திருப்பதாக வாகன ஓட்டிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

மார்வ் & மாத் ரோடு, மும்பை

இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையையும், மார்வ் & மாத் தீவுகளையும் இணைக்கு சாலை இது. இந்த பகுதியில், இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த ஒரு சில மணி நேரங்களில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு விட்டாராம்.

வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

இதனால் அந்த பெண்ணின் ஆவி, திருமண கோலத்தில் இன்னமும் அங்கு சுற்றி வருவதாக நம்பப்படுகிறது. திடீரென வாகனங்களின் முன்பு அந்த ஆவி தோன்றுகிறதாம். திடீரென தோன்றும் உருவம் முன்பு மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்வதாக கூறப்படுகிறது.

Source:Cartoq,India.com

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most dangerous and scariest roads in india: From sathyamangalam to marve & madh road. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X