அப்படியே ஷாக்காயிட்டேன் சொல்ல வைக்கும் விலையில் விலையுயர்ந்த கார் சாவிகள்
ரிமோட் கீ, ஸ்டார்ட்/ ஸ்டாப் ஆப்ஷன் என பல்வேறு வசதிகளுடன் கார் சாவிகள் தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், இந்த செய்தியில் பல லட்சம் விலை மதிப்பு கொண்ட கார் சாவிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ள போகிறோம்.
பிரத்யேகமான அம்சங்கள், விலை மதிப்பில்லா ஆபரணங்கள் என ஒவ்வொரு வகையில் நம்மை ஆர்ப்பரிக்கச் செய்யும் இந்த கார் சாவிகளில் அதிகபட்ச விலை கொண்ட சாவியின் விலையில் நம்மூரில் விற்பனையாகும் ஒரு சில பட்ஜெட் கார்களையே வாங்கிவிட முடியும். என்ன ஆச்சரியமூட்டுகிறதா?! வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

காஸ்ட்லி கார் சாவிகள்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மிரள வைக்கும் விலையிலான உலகின் காஸ்ட்லி கார் சாவிகளின் விபரத்தையும், சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.

5.பகானி ஹூவைரா கார் சாவி
இத்தாலியை பகானி சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனம் தனது ஹூவைரா காருக்காக பிரத்யே கார் சாவியை வெளியிட்டது. கார் தயாரிக்கப்பட்ட அதே விலையுயர்ந்த ஸ்டீல் பயன்படுத்தப்பட்ட இந்த கார் சாவி சூப்பர் காரின் டிசைனிலேயே வடிவமைத்தது. இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று கார் சாவி செயல்பாடுகளையும், மற்றொன்று ஃப்ளாஷ் டிரைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 1.1 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்ட இந்த காருக்கான சாவியின் விலை 3,700 டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.2.23 லட்சம்.

4.கும்பெர்ட் அப்போலோ கார் சாவி
உயர்தர லெதரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கும்பெர்ட் அப்போலோ காரின் சாவியை இரண்டு பிரிவுகளை கொண்டது. ரிமோட் கன்ட்ரோல் ஆப்ஷன்கள் உள்பட ஆபரணம் போன்று கவரும் இந்த கார் சாவியின் வடிவமைப்புக்காக எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும். இந்த கார் சாவியின் விலை இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம்.

3. பென்ட்லீ வைர சாவி
அலெக்சான்டர் அமோசு நிறுவனத்தின் கைவண்ணத்தில் பென்ட்லீ வெளியிட்ட வைர கார் சாவியும் கார் பிரியர்களை ஏக்கத்தில் ஆழ்த்தும். 100 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட இந்த பிரத்யேக சாவி ரூ.5 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

2.ஃபெராரி கார் சாவி
இந்த ஃபெராரி கார் சாவியில் 1,100 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் வைரக்கற்களின் எடை 7 கேரட்டுகள். தி ஹவுஸ் ஆஃப் கேமல் நிறுவனத்தின் கைவண்ணத்தில் இந்த ஃபெராரி கார் சாவி உருவாக்கப்பட்டது. இந்த ஒரு சாவியின் விலை இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம். அடுத்த 4 ஸ்லைடுகளில் உலகின் மிக விலையுயர்ந்த கார் சாவியின் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

காஸ்ட்லி கார் சாவி
வழக்கமான கார் சாவிகள் போன்று இதனை பாக்கெட்டில் போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. காணாமல் போய்விடுமோ என்ற டென்ஷன் இல்லை. வைப்பதற்கான இடத்தை தேடி தலையை பிய்த்துக் கொள்ள வேண்டாம். அப்படியானால்,,,

கார் சாவி
ஆம், இது ஒரு கைக்கடிகாரம். ஆடம்பர கைக்கடிகாரத்தில்தான் கார் சாவியில் இருக்கும் வசதிகளையும் சேர்த்து கொடுத்துள்ளனர். அஸ்டன் மார்ட்டின் ஆடம்பர கார் நிறுவனமும், ஜேகர் லெகூர்ட் என்ற ஆடம்பர கைக்கடிகார தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இந்த கைக்கடிகாரத்தை தயாரித்து வெளியிட்டன.

வசதிகள்
அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் ஏஎம்விஓஎக்ஸ்2 க்ரோனோகிராப் எடிசன் காருக்கான கைக்கடிகாரமாக இது வெளியிடப்பட்டது. கைக்கடிகாரத்தில் 8 மற்றும் 9ம் எண்ணிற்கு இடையில் விரலால் அழுத்தினால் கதவுகள் திறந்துகொள்ளலாம். 3 மற்றும் 4ம் எண்ணுக்கு இடையில் விரலால் அழுத்தினால் கதவுகள் பூட்டிக் கொள்ளலாம்.

ஃபைன்ட் மீ லேம்ப்
விரலால் கைக்கடிகாரத்தின் குறிப்பிட்ட பகுதியை அழுத்தும்போது காரின் ஹெட்லைட் ஒளிரும். இந்த வசதி மூலம் கார் எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இந்திய மதிப்பில் இந்த கைக்கடிகாரத்தின் விலை 20 லட்ச ரூபாய்க்கும் அதிகம்.


Click it and Unblock the Notifications








