உலகின் விலை உயர்ந்த "F1"என்ற கார் நம்பர் பிளேட் ரூ 132 கோடிற்கு விற்பனைக்கு வருகிறது

Written By:

இந்தியாவில் பணக்காரர்கள் கார் வாங்கினால் அந்த காருக்கான நம்பருக்கே ரூ 4 லட்சம் வரை செலவு செய்வார்கள் என கேள்வி பட்டிருப்போம் ஆனால் லண்டனில் ரூ 132 கோடி மதிப்பிலான நம்பர் பிளேட்டை விற்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் விலை உயர்ந்த

இந்தியாவில் நமக்கு பிடித்த மாதிரியான நம்பர்களை வாங்க முடியாது ஆனால் ஆர்.டி.ஓ.க்கள் மூலம் பைக்கிற்கு ரூ 5,000- ரூ 50,000 வரை கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்த நம்பர்களை வாங்கலாம்.

உலகின் விலை உயர்ந்த

அதே காருக்கு ரூ 15,000 -1 லட்சம் வரை செலுத்தி நமக்கு பிடித்த நம்பர்களை வாங்கலாம். அதே ஒரே நம்பருக்கு இரண்டு பேர் போட்டியிட்டால் அந்த நம்பர் பிளேட் ஏலம் விடப்படும். அதில் அதிகமாக கோருபவருக்கு அந்த நம்பர் பிளேட் கிடைக்கும்.

உலகின் விலை உயர்ந்த

இந்நிலையில் உலகில் விலை உயர்ந்த நம்பர் பிளேட்டாக லண்டனில் வழங்கப்படும் F1என்ற நம்பர் பிளேட் தான் பார்க்கப்படுகிறது இந்த நம்பர் பார்முலா 1 என்ற போட்டியை குறிப்பதால் இந்த நம்பருக்கு தான் உலகிலேயே மவுசு அதிகம்.

உலகின் விலை உயர்ந்த

லண்டனில் இதற்கு முன்னர் F1என்ற காரின் எண் இது வரை மெர்சிடியஸ் மெக்லார்ன், கஸ்டம் ரேஞ்ச் ரோவர், புகாட்டி வெரியான் ஆகிய கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008ம் ஆண்டு ரூ 4 கோடிக்கு இந்த எண் விற்கப்பட்டது.

உலகின் விலை உயர்ந்த

இதுவரை எஸ்எக்ஸ் சிட்டி கவுன்சில் என்ற அமைப்பும், கான் என்ற பிரபல கார் கஸ்டம் நிறுவனத்தின் நிறுவனர் அப்சல் கான் ஆகியோர் இந்த நம்பரை வைத்துள்ளனர். தற்போது இன்னொரு காருக்கும் இந்த நம்பரை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் விலை உயர்ந்த

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 132 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நம்பர் பிளேட் தான் உலகில் விலை உயர்ந்த நம்பர் பிளேட்டாக இருக்கிறது.

உலகின் விலை உயர்ந்த

இதுவரை துபாயில் இந்திய தொழிலதிபர் தான் வாங்கிய காருக்கு D5 என்ற நம்பர் பிளேட்டிற்கு இந்திய மதிப்பில் ரூ 67 கோடி வழங்கியுள்ளது. அதேபோல் 1 என்ற எண் கடந்த 2008ம் ஆண்டு ரூ 66 கோடிக்கு விற்பனையானது.

உலகின் விலை உயர்ந்த

இந்தியாவில் இது போன்ற எண்களை வாங்க சட்டத்தில் இடமில்லை, தற்போது சர்வதேச சந்தைகளில் மட்டுமே இது போன்ற எண்கள் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.ஆப்பிள் நிறுனவத்தின் ஐகார் 2020ல் விற்பனைக்கு வருகிறது?

02.மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம்!!

03.அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

04.ரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்குவதை சமாளிக்க ஓட்டுனர்கள் கையாளும் எளிய யுக்தி!!

05.உங்கள் கார் "தள்ளு" மாடல் வண்டியா?; நவீன கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா?

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's Most Expensive Car Number Plate On Sale In UK For Rs 132 Crore!. Read in Tamil.
Story first published: Monday, April 9, 2018, 18:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark