காரில் இது ஒன்னு இருந்தா போதும்... பெட்ரோல் பங்க் போற வேலையே இருக்காது! இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!
உங்கள் காரில் கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் இருந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் பலன் அளிப்பதாக இருக்கும்.

இந்தியாவில் ஆஃப்டர் மார்க்கெட் கார் உதிரிபாகங்களின் (Aftermarket Car Parts) விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இதில், கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டமும் (Cold Air Intake System) ஒன்று. கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டமை பொருத்தி கார்களை மேம்படுத்துவது என்பது தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் மூலம் உங்கள் காரின் செயல்திறனை அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு நன்மைகளும் இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த நன்மைகள் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. உண்மையை சொல்வதென்றால், ஒரு சில மெக்கானிக்குகள் மற்றும் கார் ஆர்வலர்களுக்கு கூட, கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டத்தின் மூலம் கிடைக்க கூடிய பலன்கள் தெரிவதில்லை.

கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் உங்கள் காருக்கு அப்படி என்னென்ன நன்மைகளை வாரி வழங்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கே பலருக்கும் தெரியாத, கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டத்தின் நன்மைகளை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதிக குதிரைத்திறன் (More Horsepower)
உங்கள் காரின் குதிரைத்திறனை (Horsepower - HP) கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் அதிகரிக்கும். இது கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டத்தின் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். உங்கள் காரின் இன்டர்னல் காம்பூசேஷன் இன்ஜின் எனப்படும் ஐசி இன்ஜினுக்கு (Internal Combustion Engine - IC Engine) குளிர்ச்சியான காற்றை கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் கொண்டு வருகிறது.

இதன் காரணமாக எரிபொருளை எரிக்கும் நிகழ்வு (Fuel Burning) மிகவும் திறன்மிக்கதாக நடைபெறும். இதன் மூலம் ஆக்ஸிஜன் எரிப்பு விகிதம் அதிகரித்து, உங்கள் காரின் குதிரைத்திறன் உயரும். எவ்வளவு குதிரைத்திறன் அதிகமாக கிடைக்கும்? என்ற சந்தேகம் இங்கே உங்களுக்கு வரலாம். 5 முதல் 12 ஹெச்பி பவர், அதாவது 5 முதல் 12 குதிரைத்திறன் அதிகமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிறப்பான ஆக்ஸலரேஷன் (Better Acceleration)
ஆக்ஸலரேஷன் மேம்படும் என்பது கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டத்தின் மற்றொரு முக்கியமான நன்மையாகும். கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் இருந்தால் உங்கள் காரின் ஆக்ஸலரேஷனில் நீங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்வீர்கள். சூடான காற்றை காட்டிலும் குளிர்ச்சியான காற்று அடர்த்தியானது என்பதுதான் இதற்கு காரணம்.

எரிதல் நிகழ்விற்கு செல்வதற்கு அதிக காற்று உள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம். நீங்கள் நினைக்கும் வேகத்தை வெகு விரைவாகவே எட்டுவதற்கு இது உதவி செய்கிறது. இதன் மூலம் உங்களுக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கும் என்பதும் உறுதி. குறிப்பாக வேகமாக சென்றாக வேண்டிய கட்டாயம் உள்ள நெடுஞ்சாலைகளில் இது உங்களுக்கு பலன் அளிக்கும்.

சிறப்பான மைலேஜ் (Better Mileage)
உங்கள் கார் இன்ஜினின் காற்று/எரிபொருள் விகிதத்தை (Air To Fuel Ratio), கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் மேம்படுத்துகிறது. இதன் காரணமாக உங்கள் காரின் மைலேஜ் அதிகரிக்கும். கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் இருந்தால், பெட்ரோல் பங்க்கிற்கு செல்வது குறைந்து விட்டதே என்ற உணர்வு உங்களுக்கு நிச்சயமாக ஏற்படும்.

இன்றைய சூழலில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே எரிபொருளுக்காக செலவிடும் தொகையை கட்டுப்படுத்தியாக வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. கார் அதிக மைலேஜை வழங்கினால், எரிபொருளுக்காக செலவிடும் தொகையை நன்றாகவே குறைக்க முடியும்.

எனவே இந்த வகையிலும் கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் உங்களுக்கு பயன் அளிக்கும். அத்துடன் கூல்டு ஏர் இன்டேக் சிஸ்டம் மூலமாக உங்கள் கார் எழுப்பும் சத்தமும் மேம்படும். அதாவது உங்கள் காரில் இருந்து வெளிப்படும் சத்தம் நன்றாக இருக்கும். கார் எழுப்பும் சத்தத்தை விரும்ப கூடியவர்கள் இங்கே நிறைய பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








