எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒவ்வொரு பைக்கிற்கும் செயின் கார்டு ஏன் மிகவும் அவசியம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பைக்குகளுக்கு செயின் கார்டு (Chain Guard) மிகவும் அவசியமானது. இதை யாராலும் மறுக்க முடியாது. பைக் ரைடர்களை பல்வேறு பிரச்னைகளில் இருந்து செயின் கார்டுகள் காப்பாற்றுகின்றன. அத்துடன் பைக் ரைடர்கள் பயணத்தை நன்றாக அனுபவிக்கவும் செயின் கார்டுகள் உதவி செய்கின்றன. ஆனால் செயின் கார்டுகளின் முக்கியத்துவம் பலருக்கும் தெரிவதில்லை.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனவே பைக்குகளுக்கு செயின் கார்டு ஏன் மிகவும் முக்கியமானது? என்பதை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம். நீங்கள் பைக் ரைடர் என்றால் இந்த செய்தியை மிகவும் கவனமாக படியுங்கள். உங்களுக்கு இந்த தகவல்கள் பல்வேறு விதங்களில் பயனுள்ளதாக இருக்கும். சரி, வாருங்கள் இனி செய்திக்குள் செல்வோம்.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

முதலில், செயின் கார்டுகள் பைக்கின் அழகை அதிகரிக்கும். ரைடர்கள் அனைவருக்கும் தங்களது பைக் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சாலையில் பயணிக்கும்போது தங்களது பைக்கை அனைவரும் திரும்பி பார்க்க வேண்டும் என ரைடர்கள் விரும்புவார்கள். அத்தகைய நபர்களுக்கு செயின் கார்டுகள் மிகவும் ஏற்றது.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அடுத்தபடியாக பைக் ரைடரின் உடை, குறிப்பாக பேண்ட் அழுக்கு ஆவதில் இருந்து செயின் கார்டுகள் காப்பாற்றுகின்றன. நமது இந்தியாவில் சாலைகள் எப்படி இருக்கும்? என்பது நமக்கு மிகவும் தெளிவாக தெரியும். சில இடங்களில் சாலை சேறும், சகதியுமாக இருக்கும். மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும்.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் சாலைகளில் குப்பைகளும் நிரம்பியிருக்கும். இத்தகைய சாலைகளில் பைக்கை ஓட்டும்போது ரைடரின் உடையில் அழுக்கு படிந்து விடும். இந்த அழுக்குகளில் இருந்து செயின் கார்டு ரைடரை பாதுகாக்கும். இதுதவிர பைக் செயின்களில் ஆயில் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய தேவையும் நமக்கு இருக்கிறது.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுவும் கூட பைக் ரைடர்களின் உடைகளை அழுக்கு ஆக்கி விடும். இதில் இருந்தும் செயின் கார்டு ரைடர்களை பாதுகாக்கிறது. அதேபோல் பைக்கில் செயின் கார்டு இல்லாவிட்டால், ரைடரின் காலில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. செயினுக்கு பக்கத்தில் காலை கொண்டு சென்றால், காயம் அடையும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் பேண்ட் போன்ற உடைகள் கிழிந்தும் போகலாம். மேலும் செயினில் ஏதேனும் பொருட்கள் சிக்கி கொண்டு பிரச்னையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உங்கள் பைக்கில் செயின் கார்டு இருப்பது மிகவும் அவசியம்.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

செயின் கார்டு உங்கள் கால்கள் மற்றும் உடைகளை செயினிடம் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, உங்களது லக்கேஜையும் பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயின் ஆயில் போன்றவை பைக்கின் மற்ற பகுதிகளுக்கும் பரவுவதையும் இது தடுக்கும். இதன் மூலம் உங்கள் பைக்கை நீங்கள் சுத்தமாக பராமரிக்க முடியும்.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் உடைகள் மற்றும் உடைமைகள் உடன் பைக்கையும் செயின் கார்டு தூய்மையாக வைத்திருக்க உதவும் என்பது சிறப்பான விஷயம் என்பதில் சந்தேகமில்லை. ஸ்டைலான செயின் கார்டு மூலம் நீங்கள் உங்கள் பைக்கை கஸ்டமைஸ் செய்ய முடியும். பல்வேறு வடிவங்கள், மெட்டீரியல்கள் மற்றும் வண்ணங்களில் ஆஃப்டர் மார்க்கெட் செயின் கார்டுகள் வருகின்றன.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எனினும் உங்கள் பைக்கை ஆஃப்டர் மார்க்கெட் ஆக்ஸஸெரீஸ்கள் மூலம் கஸ்டமைஸ் செய்வதற்கு முன்பாக விதிமுறைகள் என்ன சொல்கின்றன? என்பதை தெரிந்து கொள்வது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் நீங்கள் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எல்லார் பைக்கிலும் செயின் கார்டு கண்டிப்பா இருக்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

செயின் கார்டுகளின் அவசியம் தற்போது உங்களுக்கு முழுமையாக புரிந்திருக்கும் என நம்புகிறோம். பைக்குகளில் செயின் கார்டின் முக்கியத்துவம் குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கமெண்ட் பாக்ஸ் மூலமாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most important benefits of motorcycle chain guard
Story first published: Wednesday, September 8, 2021, 19:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X