பிரபல மோட்டார்சைக்கிள் சாகச வகைகள்: சிறப்புத் தொகுப்பு

Posted By:

மோட்டார்சைக்கிள் சாகசங்கள் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. தற்போது தொழில்முறை அந்தஸ்திலான விளையாட்டாக மாறி வருகிறது.

மோட்டார்சைக்கிள் கண்காட்சிகளில் தற்போது மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் நிகழ்வாக உள்ளன. இந்த நிலையில், உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மோட்டார்சைக்கிள் சாகச வகைகள் பற்றி ஸ்லைடரில் காணலாம்.

01.தி வீலி [The Wheelie]

01.தி வீலி [The Wheelie]

பலராலும் செய்யக்கூடிய, செய்ய விரும்பும் சாகசம்தான் இது. முன்சக்கரத்தை மேலே தூக்கி செல்வதுதான் பேஸிக் வீலி. இன்றைக்கு சைக்கிள் ஓட்டும் சிறுவர்கள் கூட அனாயசமாக வீலி செய்வதை காண முடியும். ஆனால், இது பொது சாலைகளில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் விஷயமாக மாறி வருவது கவலைக்குரியது.

9. தி ஸ்டாப்பி [The Stoppe]

9. தி ஸ்டாப்பி [The Stoppe]

ஸ்டாப்பி, என்டோ அல்லது ப்ரண்ட் வீலி இதனை அழைக்கின்றனர். வீலி சாகசத்தின் மிகவும் அபாயகரம் நிறைந்த சாகச விளையாட்டு இது. பிரேக்கை அடித்து பின்சக்கரத்தை மேலே தூக்குவதுதான் இதன் சாரம்சம். இதற்கு அதிக பயிற்சி தேவை.

03. சர்க்கிள் [Circle]

03. சர்க்கிள் [Circle]

ஒரு வட்டத்திற்குள் வீலி செய்வதே சர்க்கிள் என்று அழைக்கின்றனர்.

04. 12 ஓ க்ளாக் [12 O' clock]

04. 12 ஓ க்ளாக் [12 O' clock]

முன்சக்கரத்தை முடிந்தவரையில் மேலே தூக்கி செய்வதுதான் இது. இது பைக்கின் அதிகபட்ச பேலன்ஸ் பாயிண்ட்டைவிட்டு கூடுதலாக செய்யும் வீலி என்பதால் இதுவும் ஆபத்துக்கள் நிறைந்தது.

 05. ஹை சேர் [High Chair]

05. ஹை சேர் [High Chair]

வீலி செய்து கொண்டே கால்களை பைக்கின் ஹேண்டில்பார் மீது வைத்துக் கொண்டு ஓட்டுவதே ஹை சேர் என்று அழைக்கின்றனர்.

 06.ஸ்பிரெடர் [Spreader]

06.ஸ்பிரெடர் [Spreader]

வீலி செய்து கொண்டே பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கால்களை அகல விரித்துக் கொண்டே செல்வதே ஸ்பிரெட்டர்.

08.சீட் ஸ்டான்டர் [Seat Stander]

08.சீட் ஸ்டான்டர் [Seat Stander]

மோட்டார்சைக்கிள் இருக்கை மீது நின்றுகொண்டே செய்யும் வீலிதான் சீட் ஸ்டான்டர்.

08. சூசைடு பர்ன்அவுட் [Suicide Burnout]

08. சூசைடு பர்ன்அவுட் [Suicide Burnout]

பைக்கின் முன்புறத்தில் நின்றுகொண்டு ஆக்சிலேட்டர் பிரேக் கன்ட்ரோல் மூலம் மோட்டார்சைக்கிளின் பின்புற டயரை சுழல விட்டு பர்ன்அவுட் செய்யும் முறையை சூசைடு பர்ன் அவுட் என்று அழைக்கின்றனர்.

09.ஜீசஸ் க்றைஸ்ட் [Jesus Christ]

09.ஜீசஸ் க்றைஸ்ட் [Jesus Christ]

பைக் ஓடிக்கொணடிருக்கும்போது சீட் அல்லது பெட்ரோல் டேங்கில் நின்றுகொண்டே கைகளை அகல விரிய வைத்து செல்வது ஜீசஸ் க்றைஸ்ட் வீலி.

பேக் ஃப்ளிப் [Back Flip]

பேக் ஃப்ளிப் [Back Flip]

பைக் ஓடிக்கொண்டிருக்கும்போது ஹேண்டில்பாரில் கையை வைத்து குட்டிகர்ணம் அடித்து இறங்குவதை பேக் ஃப்ளிப் என்கின்றனர். கிறிஸ் பைஃபர் இந்த சாகசத்தில் மிகவும் பிரபலமானவர்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

ப்ராக் வீலி [Frog Wheelie],ஸ்விட்ச்பேக் [Switchback],பிஸ்கட் ஈட்டர் [Biscuit Eater],க்ளிஃப் ஹேங்கர் [Cliff Hanger], ஏப் ஹேங்கர் [Ape Hanger] போன்ற இதர வகைகளும் உள்ளன. பைக் வீலி செய்யும்போது முறையான ஆலோசனை மற்றும் பயிற்றுனர் உதவியுடன் பயிற்சி பெறுவது அவசியம். தேவையான பாதுகாப்பு கவசங்களையும் அணிவதுடன், பொது இடங்களில் பைக் வீலி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary
We compiled the most insane motorcycle stunts in the world. Have a look.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark