உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

உல்லாச கப்பல்கள் பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சிகரமான உண்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

உல்லாச கப்பல்களை நவீன அற்புதங்கள் என்று கூறினால் மிகையல்ல. விடுமுறையை உற்சாகமாக கழிக்க உல்லாச கப்பல்கள் சரியான தேர்வு. ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு கோடி பேர் உல்லாச கப்பல்களில் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. உல்லாச கப்பல்களில் கிடைக்கும் சொகுசு, ஆடம்பரம் ஆகியவை பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

உல்லாச கப்பல்களில் பல்வேறு ஆச்சரியமான விஷயங்களுடன், ஒரு சில அதிர்ச்சிகரமான விஷயங்களும் பொதிந்து கிடக்கின்றன. பலருக்கும் தெரியாத இந்த உண்மைகளை இந்த செய்தியின் வாயிலாக நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம். இந்த தகவல்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

ரகசிய வார்த்தைகள்!!

ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவர்களை போல், உல்லாச கப்பல்களின் பணியாளர்களும் தங்களுக்குள் பேசி கொள்வதற்கு சீக்ரெட் கோட் வேர்ட்ஸ்-களை பயன்படுத்துகின்றனர். இதன்படி 'ஆல்பா' என்ற ரகசிய சொல் மெடிக்கல் எமர்ஜென்ஸியை குறிக்கிறது. அதே சமயம் 'பிராவோ' என்ற வார்த்தை தீயை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

தலை சுற்ற வைக்கும் கட்டணம்!!

தற்போது சில உல்லாச கப்பல் நிறுவனங்கள், பல மாதங்களை உள்ளடக்கிய பயணங்களை பயணிகளுக்கு வழங்குகின்றன. இதன் மூலம் அவை கடலில் 100 நாட்களுக்கும் மேல் செலவழிக்கின்றன. இதில், Viking Cruises எனும் நிறுவனம் வழங்கும் Ultimate World Cruise குறிப்பிடத்தக்கது. இந்த பயணமானது உங்களை சுமார் 59 நாடுகளுக்கு கூட்டி செல்கிறது.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

இதற்கு தோராயமாக 245 நாட்கள் வரை ஆகும். ஆனால் கிட்டத்தட்ட இதன் மூலமாக நீங்கள் உலகையே சுற்றி வந்து விடலாம். இதில், நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் பணத்தை சேமித்து வைத்து கொள்வது நல்லது. ஏனெனில் இதற்கான கட்டணம் சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 72 லட்ச ரூபாய்!!

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

நங்கூரத்தின் எடை தெரியுமா?

உல்லாச கப்பல்களின் நங்கூரத்தின் எடை சுமார் நான்கு யானைகளுக்கு சமமானது. அவை மிக பெரியதாக இருக்கும். உல்லாச கப்பல்களின் நங்கூரத்தின் எடை சுமார் 20,500 பவுண்டுகள். அதாவது இது தோராயமாக நான்கு ஆப்ரிக்க காட்டு யானைகளின் எடைக்கு சமமானது.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு!!

உல்லாச கப்பல்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்குகின்றன. ஜெர்மனியை சேர்ந்த நபு எனும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், ஒவ்வொரு உல்லாச கப்பல்களும் சராசரியாக ஒரு நாளைக்கு 150 டன் எரிபொருளை பயன்படுத்துவது தெரியவந்தது. இதன் மூலம் 10 லட்சம் கார்கள் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டை ஒரு உல்லாச கப்பலே ஏற்படுத்தி விடுகிறது.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

காற்று மாசுபாடு மட்டுமா?

சொகுசு, ஆடம்பரம் என உல்லாச கப்பல்களின் ஒரு பக்கத்தை பற்றிய தகவல்களை மட்டும் கேட்டு கேட்டு லயித்து போயிருந்தவர்களுக்கு அது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் காற்று மாசுபாடு மட்டுமல்லாது, மற்றொரு விஷயத்திலும் உல்லாச கப்பல்கள் பிரச்னையை உண்டாக்குகின்றன.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

ஆம், உல்லாச கப்பல்கள் அதிகப்படியான கழிவு நீரை உற்பத்தி செய்கின்றன. அதாவது ஒரு சராசரி உல்லாச கப்பல் ஒரு ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் கேலன் கழிவுநீரை உற்பத்தி செய்கிறது. இதில், அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த கழிவு நீர் அனைத்தும் நேரடியாக கடலில்தான் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம்.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

மீட்பு பணி!!

உல்லாச கப்பல்கள் மீட்பு பணிகளிலும் ஈடுபடும் என்பது ஆச்சரியமான விஷயம்தான். மீனவர்கள் யாராவது ஆபத்தில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்வதற்காக கூட உல்லாச கப்பல்கள் நிறுத்தப்படும். நீங்கள் நினைப்பதை விட அடிக்கடி இது நடக்கும் என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயம்தான். உல்லாச கப்பல்களுக்கு சில சமயங்களில் அவசர அழைப்புகள் வரும்.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

எனவே மீட்பு பணியை முடிக்க வேண்டியதாக இருக்கும். மற்றபடி உல்லாச கப்பல்கள் வழக்கம் போல தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் மீட்பு பணிகளில் நாமும் பங்கேற்க வேண்டுமோ? என கவலைப்பட வேண்டாம். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எப்படி கையாள்வது? என்பது தொடர்பாக உல்லாச கப்பல் பணியாளர்களுக்கு முழுமையாக பயிற்சி வழங்கப்பட்டிருக்கும்.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

டாப்லெஸ்ஸாக சூரிய குளியல் எடுப்பதற்கான தளம்!!

உண்மையில் டாப்லெஸ்ஸாக சூரிய குளியல் எடுக்க பெரும்பாலான உல்லாச கப்பல்கள் அனுமதிப்பதில்லை. ஆனாலும் ஐரோப்பாவை சேர்ந்த ஒரு சில உல்லாச கப்பல்களில் இதற்கென தனியாக தளம் உள்ளது. அதுவும் ஒரு சில உல்லாச கப்பல்களில் நிர்வாணமாக சூரிய குளியல் எடுப்பதற்கு என பிரத்யேகமான தளம் வழங்கப்படுகிறது.

நடுக்கடலில் நிர்வாணமாக... உல்லாச கப்பல்களில் நடக்கும் அதிர வைக்கும் சமாச்சாரம்... என்னனு தெரியுமா?

கடற்கரையில் நிர்வாணமாக படுத்து கொண்டு சூரிய குளியல் எடுப்பது போன்ற உணர்வு இந்த தளங்களின் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் அவர்கள் கடலின் நடுவே இருப்பீர்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Most Interesting Facts About Cruise Ships. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X