Just In
- 57 min ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
- 1 hr ago
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!
- 1 hr ago
யமஹா ஆர்15 பைக்கின் விலை மீண்டும் அதிகரிப்பு!! ஆரம்ப எக்ஸ்.ஷோரூம் விலை ரூ.1.5 லட்சத்தை கடந்தது...
- 2 hrs ago
பொது சாலையில் சாகசம் செய்த இளைஞர்... அதிரடியாக பாடம் புகட்டிய காவல் துறை... வைரல் வீடியோ...
Don't Miss!
- News
பாமக தேர்தல் அறிக்கையில் மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆல் பிரசன்ட்.. முரசு ஆப்சன்ட்.. என்ன காரணம்?
- Finance
எதிர்பாராத சர்பிரைஸ்.. காக்னிசண்ட் சொன்ன செம விஷயம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..!
- Movies
ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை.. தளபதி 65 இயக்குநர் வெளியிட்ட சூப்பர் பிக்ஸ்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை!!
- Lifestyle
இனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
- Sports
சொல்லாமல் அடித்த கில்லி... சிஎஸ்கேவுக்கு முன்னதாகவே பயிற்சியை துவங்கிட்டாங்க ஆர்சிபி!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயன்படுத்தவுள்ள 'கேடிலாக் ஒன்' கார் பற்றிய பிரம்மிப்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல்வேறு பிரச்னைகளை கடந்து ஜோ பைடன் ஒரு வழியாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ளார். ஜோ பைடனுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ரசனையான கார்கள் பலவற்றை ஜோ பைடன் வைத்துள்ளார். ஆனால் தற்போது அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று கொண்டுள்ளதால், கேடிலாக் லிமோசின்தான் இனி அவரது அதிகாரப்பூர்வ வாகனமாக இருக்கும்.

'தி பீஸ்ட்' என்ற செல்லப்பெயரில் இந்த கார் அழைக்கப்படுகிறது. தற்போதைய மாடல் 'தி பீஸ்ட்' (கேடிலாக் ஒன் மற்றும் ஃபர்ஸ்ட் கார் எனவும் அழைக்கப்படுகிறது) கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டிரக்/எஸ்யூவி சேஸிஸ் அடிப்படையில், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை தயாரிக்கிறது. ஒரு காரின் விலை 1.50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய். இந்த காரை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அமெரிக்க ரகசிய ஏஜென்சி, இந்த கார் பற்றிய பல்வேறு தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பயணிக்கும் கார் என்பதால், ஏராளமான பாதுகாப்பு வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.

5 இன்ச் தடிமனில் புல்லட் புஃரூப் கண்ணாடிகளை இந்த கார் பெற்றுள்ளது. மேலும் காருக்குள் ஆக்ஸிஜன் சப்ளை வசதி வழங்கப்பட்டிருப்பதுடன், துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் வைக்கப்பட்டிருக்கும். வெடிக்காத மற்றும் ஒரு வேளை விபத்தில் சிக்கி நேரிட்டால் தீப்பற்றாத வகையிலான எரிபொருள் டேங்க்கை இந்த கார் பெற்றுள்ளது.

மேலும் அமெரிக்க அதிபரின் ரத்த வகையை சேர்ந்த ரத்தமும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த காரில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும். இந்த காரில் ஓட்டுனர் கேபின், பயணிகள் கேபினில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். 2 பகுதிகளையும் பிரிக்க பயன்படுத்தப்பட்டுள்ள பார்ட்டீஷியனை, அமெரிக்க அதிபரால் மட்டுமே கீழே இறக்க முடியும்.

இதற்காக தனியே ஸ்விட்ச் வழங்கப்பட்டிருக்கும். மேலும் தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் உள்ளிடட வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது. இதுதவிர அமெரிக்க துணை அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுடன் நேரடி தொடர்புடன் சாட்டிலைட் டெலிபோனும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த காரின் எடையும் மிகவும் அதிகம். இந்த காரின் எடை 6,800 கிலோ முதல் 9,100 கிலோ வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நமக்கு நன்கு அறிமுகமான ஹெட்லேம்ப்கள் மற்றும் முன் பக்க க்ரில் ஆகியவற்றின் மூலம் இது கேடிலாக் கார் என்பதை உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

அதே சமயம் இந்த காரை ஓட்டக்கூடிய நபர் பல்வேறு விதமான பயிற்சிகளை பெற்றுள்ளார். பொதுவாக அமெரிக்க அதிபரின் கான்வாயில், 2 கேடிலாக் ஒன் கார்கள் வரும். இதில், ஒரு காரில் அமெரிக்க அதிபர் இருப்பார். அவருடன் அதிகபட்சமாக 3 பேர் அந்த காரில் வருவார்கள். மற்றொரு கார் அவசர சூழல்களில் பயன்படுத்துவதற்காக கூடவே வரும். இந்த 2 கார்களுடன் இன்னும் பல்வேறு கார்கள் அணிவகுத்து வரும்.