புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிகுந்த மனிதர்களிடம் பல்வேறு கார்கள் உள்ளன. அவர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்கள் பற்றிய விபரங்களை மட்டும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

எம்.எஸ்.டோனி-ஹம்மர் எச்2-75 லட்ச ரூபாய்...!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான டோனி, இந்த காரை கடந்த 2009ம் ஆண்டு வாங்கினார். இது இரண்டாவது தலைமுறை மாடல். இதில், 6.2 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 393 பிஎச்பி பவரை இது வெளிப்படுத்தும்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

விராட் கோஹ்லி-ரேஞ்ச் ரோவர் வோக்-2.69 கோடி ரூபாய்...!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாஸிடராகவும் உள்ளார். அவரது கேரேஜில் பல ஆடி கார்கள் உள்ளன. எனினும் அவரிடம் உள்ள அதிக விலை மதிப்புமிக்க எஸ்யூவி என்றால் அது ரேஞ்ச் ரோவர் வோக்தான். வோக் காரின் டாப் எண்ட் டீசல் வேரியண்ட்டை விராட் கோஹ்லி பயன்படுத்துகிறார். 4.4 லிட்டர் எஸ்டிவி8 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், அதிகபட்சம் 335 பிஎச்பி பவரை வழங்கும்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

அமிதாப் பச்சன்-ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி எல்டபிள்யூபி

4,367 சிசி திறன் கொண்ட இன்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் இன்டீரியர்கள் அமிதாப் பச்சனின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதுதவிர லேன்ட் க்ரூசர் எல்சி 200 உள்ளிட்ட மேலும் பல எஸ்யூவி கார்கள் அமிதாப் பச்சன் வசம் உள்ளன.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

ஷாருக்கான்-ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்-91 லட்ச ரூபாய்...!

பாலிவுட்டின் கிங் என அழைக்கப்படும் ஷாருக்கானிடம் உள்ள குறிப்பிடத்தகுந்த எஸ்யூவி இதுதான். இதன் விலை 91 லட்ச ரூபாய்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

ரன்பீர் கபூர்-மெர்சிடெஸ் ஜி 63 ஏஎம்ஜி-2.04 கோடி ரூபாய்...!

பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு விருப்பமான கார் மெர்சிடெஸ் ஜி 63 ஏஎம்ஜி. இந்த காரில்தான் பல நிகழ்ச்சிகளுக்கு அவர் வந்துள்ளார். இதில், பொருத்தப்பட்டுள்ள 5.5 லிட்டர் வி8 டர்போசார்ஜ்டு இன்ஜின், 544 பிஎச்பி பவருடன் இணைந்து 760 என்.எம்.டார்க்கையும் வெளிப்படுத்தும்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

அர்ஜுன் கபூர்-மஸரெட்டி லாவண்டே-1.45 கோடி ரூபாய்...!

பாலிவுட் நடிகரான அர்ஜூன் கபூர் சமீபத்தில்தான் இந்த காரை வாங்கினார். 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 271 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ப்ளூ நிற ஷேடிங்களை கொண்ட இந்த கார், காண்பவர்களை திகைக்க வைக்கும்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

ரன்வீர் சிங்-மெர்சிடெஸ் ஜிஎல்எஸ்-86 லட்சம்...!

பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிடம் ஜாக்குவர் எக்ஸ்ஜே லக்ஸரி சீடன் உள்ளிட்ட பல கார்கள் உள்ளன. அவரிடம் உள்ள அதிக சக்திவாய்ந்த எஸ்யூவி என்றால், அது மெர்சிடெஸ் ஜிஎல்எஸ்தான். இது 350டி வேரியண்ட்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

சைப் அலி கான்-ஜீப் க்ராண்ட் செரோகி-1.30 கோடி ரூபாய்...!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த ஜீப் எஸ்யூவி இதுதான். சைப் அலி கானையும், அவரது மனைவி கரினா கபூரையும் பல நிகழ்ச்சிகளில் இந்த காருடன் காண முடியும். இதில், 6.4 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 470 பிஎச்பி பவரை வழங்கும்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

அலியா பட்-ரேஞ்ச் ரோவர் வோக்-1.92 கோடி ரூபாய்...!

இளம் பாலிவுட் நடிகையான அலியா பட்டின் ரேஞ்ச் ரோவர் வோக் காரில் பொருத்தப்பட்டுள்ள வி6 இன்ஜின், 240 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

ஆகாஷ் அம்பானி-பெண்ட்லே பெண்டேகா-3.85 கோடி ரூபாய்...!

பென்ட்லே நிறுவனத்தின் முதல் எஸ்யூவி வகை கார் இதுதான். இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகனுக்கு இந்த கார் நன்றாகவே பொருந்துகிறது. சமீபத்திய ஆடி க்யூ7 ப்ளாட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கார் இது. 6.0 லிட்டர் டபிள்யூ12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், 600 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

ஆனந்த் அம்பானி-ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி-3.47 கோடி ரூபாய்...!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி வெள்ளை நிற வண்ணத்தில் கருப்பு நிற ரூப் கொண்டதாக உள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரை உருவாக்கும்.

 புகழ்பெற்ற நபர்களிடம் உள்ள பவர்ஃபுல் எஸ்யூவி கார்களின் பட்டியல்...

காத்ரினா கைப்-ஆடி க்யூ7

பாலிவுட் நடிகை காத்ரினா கைப்பிடம் ஆடி க்யூ7 கார் உள்ளது. இந்த காரை சல்மான்கான்தான் காத்ரினா கைப்புக்கு பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 12, 2018, 16:47 [IST]
English summary
MOST powerful SUVs of India’s rich & famous: Ambani’s Bentayga to Dhoni’s Hummer H2.read in tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+