2017ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட டாப்- 20 செய்திகள்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட டாப்- 20 செய்திகளின் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.
ஆட்டோமொபைல் துறை நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் உடனுக்குடன் அள்ளிக் கொணர்ந்து வாசகர்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது ஒன் இந்தியா தமிழ் தளத்தின் ஆட்டோமெபைல் பிரிவாக செயல்பட்டு வரும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம்.

இந்த ஆண்டின் இறுதி வாரத்தில் இருக்கும் இந்த வேளையில், இந்த ஆண்டில் வாசகர்களாகிய உங்களால் அதிகம் விரும்பி படிக்கப்பட்ட செய்திகளை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம். முதல் 5 செய்திகள் தலா 10 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான பார்வைகளையும், அடுத்த 15 செய்திகள் தலா 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பார்வைகளையும் பெற்றிருக்கின்றன. அவற்றை அசைபோட ஒரு வாய்ப்பை இங்கே வாசகர்கள் பெறலாம்.

தோற்றத்தை வைத்து எடை போடாதே... !!
அவலட்சணமான தோற்றத்தை வைத்து ஷோரூமில் மதிக்கப்படாத முதியவர் ஒருவர் ரூ.10 லட்சம் மதிப்பில் ஹார்லி டேவிட்சன் வாங்கிய செய்திதான் இந்த ஆண்டின் டாப் 20 பட்டியலில் முதலிடத்தை பெறுகிறது. இந்த செய்தியை முழுமையாக படிக்காதவர்கள் கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கி முழுமையாக படிக்கலாம்.

பல லட்சம் செலவு செய்து எஞ்சினியரிங், எம்பிஏ பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட வேலை கிடைத்தாலும், சொற்ப சம்பளத்தில் காலத்தை ஓட்டும் நிலை இருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டுபவர் வாங்கும் சம்பளம் வியக்க வைக்கிறது. இந்த செய்தி இரண்டாம் இடம் பெறுகிறது. முழுமையாக படிக்க கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. இந்த செய்தி, வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட செய்திகளில் 3வது இடத்தை பிடிக்கிறது.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அபாரத விபரம் குறித்த இந்த செய்தி அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளில் 4வது இடத்தை பிடித்துள்ளது. விரிவான தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் படிக்கலாம்.

தனது அதிரடியால் மூன்றாம் உலகப் போர் பதட்டத்தை ஏற்படுத்தி வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானவர். அவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார்கள், விமானம் மற்றும் ஆடம்பர படகு போன்ற விபரங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பு 5வது இடத்தை பிடித்திருக்கிறது.
Recommended Video


பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, பிஎஸ்-3 வாகனங்களுக்கு கணிசமான அளவு தள்ளுபடியை கொடுத்து இருப்பை தீர்த்து கட்டின வாகன தயாரிப்பு நிறுவனங்கள். இந்த செய்தி மிக அதிக பார்வைகளை பெற்ற செய்திகளில் இடம்பெற்றிருக்கிறது.

மோட்டார் வாகனச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்ட இந்த செய்தியும் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது. முழமையாக படிக்க கீழே உள்ள செய்தி இணைப்பை க்ளிக் செய்யவும்.

இந்தியாவில் சாலைகளில் இடதுபுற போக்குவரத்து முறை பின்பற்றுவது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்களை நிறுத்தி நூதன முறையில் கொள்ளையடிப்பது குறித்த இந்த செய்தியும் மிக அதிக பார்வைகளை பெற்ற செய்திகளில் இடம்பிடிக்கிறது.

நீண்ட தூர பயணங்கள் செல்லும்போது செய்யும் சிறு தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்ட இந்த செய்தியும் மிக அதிக பார்வைகளை பெற்ற செய்திகளின் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.
Picture Credit: Tamil EnaduIndia

புத்தம் புதிய வால்வோ சொகுசு காரில் தவறுதலாக பெட்ரோலுக்கு பதிலாக டீசலை நிரப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்த செய்தித் தொகுப்பும் மிக அதிக பார்வைகளை பெற்றது.

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கார் கலெக்ஷன் குறித்த செய்தித் தொகுப்பும் மிக அதிக பார்வைகளை பெற்றது.

கேரளாவில் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் சென்ற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை தந்தது. இந்த செய்தியும் மிக அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

பஞ்சாபை சேர்ந்த விவசாயி ஒருவர் நிலத்தை உழுவதற்கு மிட்சுபிஷி மான்ட்டேரோ எஸ்யூவியை பயன்படுத்திய செய்தியும் மிக அதிக பார்வைகளை பெற்றது.

பெங்களூரில், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சர்களை பொருத்திய மோட்டார்சைக்கிள்களை பிடித்து, அதிலிருந்த சைலென்சர்களை பிடுங்கி, ரோடு ரோலரை வைத்து போலீசார் நசுக்கிய தகவலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் சாலையில் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டுபவர்கள் செய்யக்கூடாத தவறுகள் குறித்த இந்த செய்தியும் டாப் 20 பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 -ல் வாழ்க்கையில் ஒருமுறையாவது பயணித்து விட வேண்டும் என்பதற்கான காரணங்களை கொடுத்த இந்த செய்தியும் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

இந்தியாவின் மிக விலை உயர்ந்த லம்போர்கினி கார் சென்னையில் டெலிவிரி கொடுக்கப்பட்ட செய்தியும் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.

கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் பற்றிய செய்திகள், புதிய வாகன தொழில்நுட்பங்கள், வழிகாட்டு முறைகள், புதிய வாகனங்களை பற்றி தகவல் களஞ்சிய பிரிவு, ஆட்டோமொபைல் உலகின் சுவாரஸ்யங்களை தினசரி வழங்கும் ஆஃப் பீட் செய்திப் பிரிவு என பல சேவைகளை தமிழில் வழங்கி வருகிறது டிரை்ஸ்பார்க் தமிழ் தளம்.
தொடர்ந்து பல புதுமைகளையும், புதிய சேவைகளையும் தொடர்ந்து வழங்குவோம். பேராதரவு நல்கி வரும் வாசகர்களுக்கு இந்த வேளையில் புத்தாண்டு வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறோம்.


Click it and Unblock the Notifications








