ஷாப்பிங் செல்வதற்காக தனது குழந்தைகளை காரின் டிக்கியில் பூட்டி வைத்துச் சென்ற தாய்..!!

Written By:

தாய் ஒருவர் காரின் டிக்கியில் தனது 2 மற்றும் 5 வயது குழந்தைகளை பூட்டி வைத்துவிட்டு ஷாப்பிங் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

தாய் என்பவளைத் தவிர உலகில் உன்னதமான உறவு ஒன்று உலகில் இருக்கமுடியாது என்பது அனைவராலும் உணரப்பட்ட ஒரு உண்மையாகும். கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர் தாய் மட்டுமே.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

ஆனால் இங்கு ஈவு இரக்கம் இல்லாத தாய் ஒருவர் ஷாப்பிங் செல்வதற்காக தனது குழந்தைகளை காரின் டிக்கியில் போட்டு பூட்டி வைத்து விட்டு சென்ற சம்பவம் தாய்மையையே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகானத்தைச் சேர்ந்த டோரி கேஸ்டிலோ (வயது 39) என்ற பெண் ஒருவர் ரிவர்டேல் பகுதியில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்திற்கு தனது 2 மற்றும் 5 வயதுடையை இரண்டு குழந்தைகளுடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

ஷாப்பிங் செய்ய இடையூராக தனது குழந்தைகள் இருப்பர் என எண்ணிய அந்தப் பெண்மனி அந்த கடையின் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு தன்னுடைய குழந்தைகளை காரின் டிக்கியில் போட்டு பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்றுவிட்டார்.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

சிறிது நேரத்தில் காரின் டிக்கியில் பூட்டப்பட்ட குழந்தைகள் இரண்டும் பயத்தில் கதறி அழுக ஆரம்பித்துவிட்டன. 5 வயது குழந்தை பயத்தின் காரணமாக காரை ஓங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டது. இதில் அந்தக் கார் லேசாக அசைந்தவாறே இருந்துள்ளது.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்து வரும் குழந்தைகள் சத்தத்தை கேட்டு அதன் அருகில் சென்ற போது அதில் குழந்தைகளை பூட்டி வைத்திருப்பது தெரியவந்தது.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

இதற்குள் அங்கு வந்த பொதுமக்களில் சிலர் கூடி குழந்தைகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

காரின் டிக்கியில் பூட்டப்பட்ட 5 வயது குழந்தை "அம்மா.. பயமாக இருக்கிறது.. எப்படியாவது இங்கு இருந்து கூட்டிச் செல்லுங்கள்.." என கதறி அழுதது அங்கு இருந்தோரின் மனதை உருகச் செய்வதாக இருந்தது.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

அங்கு கூடி இருந்தவர்கள் அந்த 5 வயது குழந்தையுடன் பேசி அதை ஆறுதல் படுத்தியதோடு, கார் டிக்கியினை திறக்க ஆபத்துகால பட்டனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனையும் அக்குழந்தைக்கு அறிவுறுத்தினர்.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

அவர்கள் அறிவுறித்தியபடியே செயல்பட்ட அந்த குழந்தை ஆபத்துகால பொத்தானை அழுத்தி டிக்கியை திறந்து வெளியே இருந்த ஒரு பெண்மணியிடம் தாவிச் சென்று அவர் மீது ஏறிக்கொண்டது.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

இந்த சமயம் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர், அதே நேரத்தில் அந்த குழந்தைகளின் தாயும் ஷாப்பிங் முடிந்து கடையை விட்டு வெளியே வந்து விவரம் கேட்டார்.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் விளக்கிக் கூறி அந்தப் பெண் மீது புகார் அளித்தனர். இது குறித்து விசாரித்த போது ஷாப்பிங் செய்ய குழந்தைகள் இடையூராக இருப்பர் என்பதால் காரில் பூட்டி வைத்துச் சென்றதாக காவல்துறையினரிடம் கூறியள்ளார் அப்பெண்.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

இதன் காரணமாக அந்தப் பெண் மீது குழந்தைகளை துண்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

தான் பெற்ற குழந்தைகளையே ஷாப்பிங் செல்வதற்கு இடையூறு எனக் கருதி இரக்கம் இல்லாமல் காரின் டிக்கியில் போட்டு பூட்டி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் டிக்கியில் குழந்தைகளை பூட்டிவிட்டு ஷாப்பிங் சென்ற தாய்..!!

டிக்கியில் போட்டு பூட்டி செல்ல அவர்கள் குழந்தைகளா அல்லது வேறு எதுவுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தப் பெண்ணிற்கும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

English summary
Read in Tamil about mother locked her kids in car trunk for going to shopping.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark