இந்தியாவுக்கே பாடம் நடத்தும் தமிழ்நாடு! ஸ்டாலினை அண்ணாந்து பாக்கும் மற்ற மாநிலங்கள்! நாடே இதை பத்திதான் பேசுது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) தலைமையில் செயல்பட்டு வரும் திமுக (DMK) அரசு, கலைஞர் மகளிர் உரிமை தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். தமிழ்நாட்டை பின்பற்றி இன்னும் பல்வேறு மாநில அரசுகளும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இதில், கர்நாடகாவும் (Karnataka) ஒன்றாகும். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா (Siddaramaiah) தலைமையிலான காங்கிரஸ் (Congress) ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை போல், அங்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இதற்கு கிரகலட்சுமி திட்டம் (Gruha Lakshmi Scheme) என பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டை விட, கர்நாடகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் தொகை அதிகம் ஆகும். அங்கு குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டை போலவே, கர்நாடக மாநில பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.
இந்த சூழலில் பெலகாவி (Belagavi) பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கிரகலட்சுமி திட்டத்தின் மூலம் கிடைத்த தொகையை சேர்த்து வைத்து கொண்டே வந்துள்ளார். தற்போது அந்த தொகையை முன்பணமாக செலுத்தி தனது மகனுக்கு புத்தம் புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

பாகவா நீலப்பா சானகி என்பதுதான் அந்த பெண்ணின் பெயர் ஆகும். அவரது மகன் பெயர் ரமேஷ். இதற்காக பாகவா நீலப்பா சானகி மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு, கர்நாடக மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் (Lakshmi Hebbalkar) வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதற்காக கடிதம் ஒன்றையும், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்து கொடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாகவா நீலப்பா சானகி தனது மகன் ரமேசுக்கு வாங்கி கொடுத்திருப்பது ஹோண்டா எஸ்பி160 (Honda SP160) பைக் ஆகும். இந்த பைக்கில் 162.71 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 13.46 பிஎஸ் பவர் மற்றும் 14.58 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா எஸ்பி160 பைக்கானது, சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், சிங்கிள் டிஸ்க் வேரியண்ட்டின் விலை 1,18,951 ரூபாய் ஆக உள்ளது.
அதே நேரத்தில் டபுள் டிஸ்க் வேரியண்ட்டின் விலை 1,23,351 ரூபாய் ஆக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இன்ஜின் ஸ்டாப் ஸ்விட்ச், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில்லேம்ப் என ஹோண்டா எஸ்பி160 பைக்கில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற, அதிக பராமரிப்பு செலவு இல்லாத ஒரு நல்ல பைக்கைதான் பாகவா நீலப்பா சானகி தனது மகனுக்கு வாங்கி கொடுத்துள்ளார் என நாங்கள் கருதுகிறோம். சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என்பதும், ஹோண்டா எஸ்பி160 பைக்கின் மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








