பெண்கள் முன்னேற்றத்திற்காக மைக்ரோலைட் விமானத்தில் 80 நாட்கள் 50,000 கி.மீ பயணிக்கும் தாய் - மகள்...!

பெண்கள் முன்னேற்றத்திற்காக மைக்ரோலைட் விமானத்தில் 80 நாட்கள் 50,000 கி.மீ பயணிக்கும் தாய் - மகள்...!!

By Azhagar

பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த தாய், மகள் இருவரும் மைக்ரோலைட் விமானம் மூலம் உலகளவிலான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆட்ரி தீபிகா மேபென், இவருடைய 19 வயது மகள் ஏமி மேத்தா உடன் இணைந்து பெண்கள் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

Recommended Video

This McLaren 720S Costs Only 30 Bitcoins While Others Cost $285,000
மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட மற்றும் பெண்கள் சுயமுன்னேற்றத்தை வலியுறுத்தி ஆட்ரி தீபிகா மேபென் விரைவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

தனது மகள் ஏமி மேத்தா உடன் இணைந்து பல உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டு, அங்கு பெண்கள் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளார் ஆட்ரி தீபிகா.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

80 நாட்களில் சர்வதேச அளவில் சுமார் 50,000 கி.மீ பயணித்து பல நாடுகளுக்கு சென்று இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை இவர்கள் செய்யவுள்ளனர்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

அதற்காக சிங்கிள் பிரப்பல்லர் எஞ்சின் கொண்ட மைக்ரோலைட் விமானத்தில் ஆட்ரி தீபிகா மற்றும் ஏமி மேத்தா தங்களது சாதனை பயணத்தை மேற்கொள்கின்றனர்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

ஆட்ரி மற்றும் ஏமி-யின் இந்த திட்டம் வெற்றிக்கரமாக அமைந்தால், இந்தியாவில் இப்படி ஒரு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்கள் என்ற புதிய சாதனையை அவர்கள் படைப்பார்கள்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் அதன் விமானிகளுக்கு பயிற்சிகளை வழங்க, சுமார் 200 மைக்ரோலைட் விமானங்களை வாங்கியது.

அதுபோன்ற ஒரு விமானத்தில் தான் ஆட்ரி தீபிகா மற்றும் ஏமி மேத்தா இருவரும் தங்களது சாதனை பயணத்தை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

இவர்கள் பயணிக்கும் இந்த விமானம் மஹி என்ற பெயர் கொண்டது. இது பிபிஸ்ட்ரில் எஸ்.டபுள்யூ 121 மாடலாக உள்ளது.

பெங்களூரு ஜக்குர் விமான மையத்தில் பல வருடங்களாக பயிற்சி பெற்ற விமானியாகவும் ஆட்ரி தீபிகா உள்ளார்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

சமூக செயல்பாடு மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு பிறகு ஆட்ரி தீபிகா தனக்கு இருந்த ஆர்வமிகுதியால், ஜக்குர் விமான மையத்தில் விமானிக்கான பயிற்சியை பெற்றிருக்கிறார்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

மஹி பிபிஸ்ட்ரில் எஸ்.டபுள்யூ 121 விமானத்தில் சிறிய அளவிலான எரிவாயு டேங்க் உள்ளது. இந்த டேங்கை முழுவதுமாக நிரப்பினால் சுமார் 4.5 மணிநேரம் பறக்க முடியும்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

அதாவது தங்களது 80 நாட்கள் பயண தேவைக்காக தாய், மகள் இருவரும் உலகளவில் பல நாடுகளில் விமானத்தை இறக்கி எரிவாயுவை நிரப்பிக்கொள்ள வேண்டி வரும்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

2018 புத்தாண்டிற்கு பிறகு இந்தியாவில் பகல் நேரத்தில் ஆரம்பிக்கும் இவர்களது பயணம், முதற்கட்டமாக தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் தொடங்கும்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

பிறகு ஜப்பான், ரஷ்யா, அலாஸ்கா வழியாக வட அமெரிக்காவை சென்றடைவார்கள். அதை தொடர்ந்து கிரீன்லேண்டு, ஐஸ்லேண்டு என சில ஐரோப்பிய நாடுகளுக்கும் இவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஆரேபியாவின் முக்கிய நாடுகள், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் என இறுதிக்கட்டத்தை அடையும் இந்த பயணம், இந்தியாவில் முடிவடைகிறது.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

சமூகநலன் சார்ந்த இதுபோன்ற செயல்பாடுகள் பலருக்கும் ஊக்கமாக அமைவதுடன், பெண்கள் நலன் சார்ந்த தேவைகளுக்கு பெரிய தளம் அமைக்கும்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

இன்று ஆசியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியாவிற்கு மிகப்பெரிய இடமுண்டு. பெண்களுக்கான முன்னேற்றத்தை வலியுறுத்தி ஒரு சாகச பயணம் செய்யும் இந்த இரு இந்திய பெண்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

மைக்ரோலைட் விமானத்தில் இந்திய பெண்களின் சாகசப்பயணம்..!!

2018 புத்தாண்டிற்கு பிறகு பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி தாய், மகள்களான ஆட்ரீ தீபிகா மற்றும் ஏமி மேத்தா மேற்கொள்ள உள்ள இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறது டிரைவ்ஸ்பார்க்.

More from DriveSpark

Article Published On: Friday, December 15, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: Indian Mother-Daughter Duo To Fly Around The World Creating Awareness For Women Empowerment. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+