தனது அம்மாவை கார் ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

தனது மகனின் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பெண்மணி ஒருவர் மிகவும் எளிமையாக இயக்கி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவினை பற்றி இனி பார்க்கலாம்.

தனது அம்மாவை ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகும் வீடியோக்கள் சில பார்ப்போரை அதிர்ச்சியுற செய்யக்கூடியதாக இருக்கும், அதேநேரம் சில வீடியோக்கள் நம் மனதை தொடும் அளவிற்கு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருக்கும். இதில் மனதை தொட்ட வைரல் வீடியோ ஒன்றினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

தனது அம்மாவை ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

பெற்றோர்கள் ஆசைப்பட்டதை பெரியவர்கள் ஆன பின் வாங்கி கொடுக்க வேண்டும் என்பது நிச்சயமாக நம் எல்லாருக்கும் ஓர் கனவாக இருக்கும். குறிப்பாக, தாய்-மகன் இடையேயான பிணைப்பை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது. மகன் என்ன தவறு செய்தாலும் விட்டு கொடுக்காத தாயை பற்றி பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.

தனது அம்மாவை ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

சரி செய்திக்குள் வருவோம். தனது அம்மாவிற்கு காரை பரிசளித்த மகன்கள் சில பேரை இதற்குமுன் நம் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அவர்களில் சில பேர் மகன் பரிசாக வழங்கிய காரை இயக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில், சாய் கிரண் என்ற இளைஞர் தான் வாங்கிய மஹிந்திரா எக்ஸ்யூவி காரை தனது அம்மாவை இயக்க வைத்து அழகு பார்த்துள்ளார்.

மேலும், அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி சாய் கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மிக எளிமையாக தோற்றம் கொண்ட அவரது தாய், எக்ஸ்யூவி700 காரின் சொகுசான கேபினுக்குள் அமர்ந்து கொண்டு காரை மிகவும் எளிதாக அதிவேகத்தில் இயக்கி பார்க்கும் இந்த வீடியோ பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. இதனாலேயே இந்த வீடியோவை சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

தனது அம்மாவை ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

வீடியோவில், அருகில் அமர்ந்திருக்கும் மகனுடன் பேசிக்கொண்டவாறே காரை இயக்கும் அந்த பெண்மணியின் முகத்தில் அவ்வளவு சிரிப்பு வெளிப்படுகிறது. இதில் இருந்து, அவர் இந்த பயணத்தை மிகவும் ரசித்து மேற்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. அதேநேரம், அவர் மிகவும் ஈஸியாக காரை இயக்கியுள்ளார் என்பதையும் கூறியே ஆக வேண்டும்.

தனது அம்மாவை ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

அநேகமாக இவர் கார்களை ஓட்டுவதில் இதற்குமுன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். ஏனெனில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் எந்த அளவிற்கு பெரிய தோற்றம் கொண்டது என்பது அந்த காரை நேரில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அதிலிலும், எக்ஸ்யூவி700 ஆனது எஸ்யூவி ரக உடலமைப்பை கொண்ட கார் என்பதால், அதிகப்படியான நீளம், அகலம் மற்றும் உயரத்தால் பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமானதாக இருக்கும்.

தனது அம்மாவை ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

ஆதலால் இந்த காரை இயக்குவதற்கு நிச்சயமாக கார் ஓட்டுவதில் முன் அனுபவம் இருக்க வேண்டும். இருப்பினும், சற்று வயதான பெண்மணி ஒருவர் இயக்குகிறார் என்றால் எக்ஸ்யூவி700 காரில் எத்தகைய பயண சூழலை மஹிந்திரா வழங்குகிறது என்பதை அறியலாம். வீடியோவில், எக்ஸ்யூவி700 காரின் காஸ்ட்லீயான கேபினையும், அதில் அடங்கி இருக்கும் பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்களையும் காண முடியும்.

தனது அம்மாவை ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

மஹிந்திரா நிறுவனம் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு எக்ஸ்யூவி700 காரை கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த வகையில் பார்க்கும்போது, கிட்டத்தட்ட 1 வருடமாக விற்பனையில் எக்ஸ்யூவி700 மிக முக்கிய அம்சமாக ADAS ஓட்டுனர் உதவி அம்சங்களுடன் மஹிந்திரா பிராண்டின் புதிய லோகோவை பெற்றுவந்த முதல் காராகும்.

தனது அம்மாவை கார் ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

இவ்வாறு மாடர்ன் மஹிந்திரா காராக கொண்டுவரப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 தான் இந்திய சந்தையில் அதிக காத்திருப்பு காலத்தை கொண்ட காராக விளங்குகிறது. குறிப்பாக இதன் டீசல் வேரியண்ட்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. இருப்பினும், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை சமீபத்தில் குறைத்துள்ளது.

தனது அம்மாவை கார் ஓட்ட விட்டு அழகு பார்த்த இளைஞர் - கார் ரொம்ப பெரிசு... இருந்தும் மாஸ் பண்ணிட்டாங்க!!

ஏஎக்ஸ்5, ஏஎக்ஸ்5 (7-இருக்கை) மற்றும் ஏஎக்ஸ்7 என்ற 3 விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.16.49 லட்சத்தில் இருந்து ரூ.22.92 லட்சம் வரையில் உள்ளன. எக்ஸ்யூவி700 காரில் 2.2 லிட்டர் என்ஹாவ்க் டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம் ஃபால்கன் பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mothers desire to drive car his son shared his joy by making his dream come true
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X