பெரிய மனுஷங்க எல்லாம் டாடா காரை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.. அம்பானியே வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்ல!

பெரிய பெரிய பணக்காரர்கள் மத்தியில் டாடாவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாகவே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. மிகப் பெரிய கோடீஸ்வரரும், ஸ்டாக் மார்க்கெட் தரகருமான மோதிலால் ஓஸ்வால் டாடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு ஒன்றை வாங்கி இருக்கின்றார்.

அவர் வாங்கிய கார் மாடல் என்ன? அந்த டாடா காரின் சிறப்புகள் என்ன? என்ன காரணத்திற்காக இவ்வளவு பெரிய பணக்காரர் டாடாவின் இந்த காரை வாங்கி இருக்கலாம் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. மிக முக்கியமாக டாடாவின் இந்த கார் என்ன விலையில் விற்கப்படுகின்றது என்பது பற்றிய தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Motilal oswal buys tata safari dark edition

இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரே மோதிலால் ஓஸ்வால் ஆவார். இவரே மோதிலால் ஓஸ்வால் ஃபினான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் நிறுவனர் ஆவார். இந்த பெரும் பணக்காரரே டாடாவின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான சஃபாரி கார் மாடலை வாங்கி இருக்கின்றார். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் உலக தரம் வாய்ந்ததாக தயாரிப்புகளில் ஒன்றாகவும் இது இருக்கின்றது. சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் தலை சிறந்த எஸ்யூவி ரக காராகவும் இது காட்சியளிக்கின்றது. இருப்பினும், இதற்கே அப்பனைப் போன்ற அதிநவீன மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த ஆடம்பர கார்கள் பல நம் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Tata safari dark edition

இந்த மாதிரியான சூழலிலேயே மோதிலால் ஓஸ்வால், டாடா சஃபாரி காரை வாங்கி இருக்கின்றார். சாதாரணமாக சிறிய பிசினஸைச் செய்யும் தொழிலதிபர்களே கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஆடி உல்லாச கப்பல் போன்ற கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே, மற்றவர்களை அசர செய்யும் வகையில் டாடா சஃபாரி டார்க் எடிசன் பதிப்பை வாங்கி இருக்கின்றார். அதிக சொகுசு வசதிக்கு மட்டுமல்ல, அதிக பாதுகாப்பு திறனுக்கும் பெயர்போனதே இந்த கார் மாடலே ஆகும். ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் பெற்றிருக்கின்றது.

Motilal oswal tata safari dark edition

இதுமட்டுமில்லைங்க, அதிக கவர்ச்சியான தோற்றத்திற்கு பெயர்போன கார் மாடலாகவும் சஃபாரி காட்சியளிக்கின்றது. இதுபோன்ற காரணத்தினாலேயே இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக சஃபாரி காட்சியளிக்கின்றது. அதிலும், மோதிலால் ஓஸ்வால் வாங்கி இருக்கும் சஃபாரி டார்க் எடிசன் கூடுதல் அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

பெரும்பாலான பாகங்கள் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்த பதிப்பின் சிறப்பாகும். பியானோ கருப்பு நிறத்திலான அலங்காரப் பொருட்களே இந்த காரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. வழக்கமான வேரியண்டுகளில் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்களே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி 'அடுப்பு கறி' நிறத்திலான முன் பக்க க்ரில் மற்றும் அலாய் வீல்களும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், டார்க் எனும் பெயர் பேட்ஜும், குரோம் பூச்சு பிளேட்டும் டெயில் கேட்டில் வழங்கப்பட்டிருக்கும். இவை அனைத்தும்தான் சஃபாரி டார்க் எடிசனுக்கு மிக சிறந்த லுக்கை வழங்கும் வகையில் இருக்கின்றன.

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் உட்பகுதியிலும் அதிகளவில் கருப்பு நிறத்திலான அலங்காரப் பொருட்களை நம்மால் காண முடிகின்றது. பிளாக் ஸ்டோன் மேட்ரிக்ஸ் ரக டேஷ்போர்டு மற்றும் நெப்பா கிராணைட் நிறத்திலான உறைகள் கொண்ட இருக்கை ஆகியவை இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல பிரீமியம் தர அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கை, காற்றை தூய்மைப்படுத்தும் வசதிக் கொண்ட ஏர் ஃபில்டர், ஒய்-ஃபை இணைப்பு வசதி, 8.8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையிலும் கூடுதல் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சிறப்புகளைத் தாங்கிய காரையே இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மோதிலால் வாங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் என்சிஏபி மற்றும் குளோபல் என்சிஏபி இந்த இரண்டும் இந்த கார் அதிக பாதுகாப்பு திறன்மிக்கது என்கிற சான்றை வழங்கி இருக்கின்றன. முன்னதாக, சென்ற ஆண்டில், குளோபல் என்சிஏபி இந்த காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கிய நிலையில், சமீபத்தில் குளோபல் என்சிஏபி-யும் இந்த காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 17, 2024, 19:38 [IST]
English summary
Motilal oswal buys tata safari dark edition
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X