பேச்சு திறனால் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கேரள இளைஞர்.. இவ்ளோ காஸ்ட்லியான காரை வாங்கிட்டாரா..

திறமை இருந்தால் போதும் வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண முடியும். இதற்கு சான்றாகவே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அனில் பாலச்சந்திரன். ஊக்கமளிப்பு பேச்சாளரே இவர் ஆவார். இதில் கை தேர்ந்தவராகவும் அவர் காட்சியளிக்கின்றார். குறிப்பாக, வணிகம் சார்ந்த ஊக்கமளிப்பை வழங்குவதில் பெயர்போனவராக இருக்கின்றார். இவரின் இந்த திறனே அவரை பெரும் செல்வந்தராக மாற்றியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் ஓர் மிகுந்த ஆடம்பர வசதிகள் கொண்ட காரை வாங்கியிருக்கின்றார்.

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலான லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்திய பணக்காரர்கள் மற்றும் பெரும் அரசியல் தலைவர்களின் பிரியமான கார் மாடலாக இந்த வாகனம் காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே தான் வாங்கி இருக்கின்றேன் என அவர் அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி இருக்கின்றார்.

Anil balachandran buys 2025 toyota land cruiser

இதுகுறித்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ஆனால், இந்த காரை அவர் இந்தியாவில் வாங்கவில்லை. துபாயிலேயே வாங்கிலேயே வாங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதிப்படுத்தும் விதமாக துபாயைச் சேர்ந்தவர்கள் அந்த காரை அனில் பாலச்சந்திரனிடம் டெலிவரி கொடுக்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு காலத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ 800 (Maruti Suzuki Alto 800) காரில் பயணித்து வந்த இவர், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை வாங்கும் அளவிற்கு உயர்ந்திருக்கின்றார். இது அவரை போல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற துடிப்பில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

டொயோட்டா நிறுவனம் லேண்ட் க்ரூஸர் காரை 2021-லேயே உலகளவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்தியாவில் 2022 இன் இறுதியிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கம்பீரமான தோற்றம் மற்றும் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் ஆகியவற்றிற்கு பெயர்போன கார் மாடலாக லேண்ட் க்ரூஸர் இருக்கின்றது.

305 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கக் கூடிய 3.3 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் ஆப்ஷனிலேயே டொயோட்டா லேண்ட் க்ரூஸர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், உலக சந்தையில் பன்முக எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அந்தவகையில், அரபு நாடுகளில் புதிய 3.5 லிட்டர், ட்வின் டர்போ பெட்ரோல் வி6 எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்ட ஓர் கார் மாடலே லேண்ட் க்ரூஸர் ஆகும். 4 ஜோன் காலநிலை கட்டுப்பாடு வசதி, எல்இடி மின் விளக்குகள், 12 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல்வேறு அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, இருக்கைகள் விஷயத்தில் மற்றும் இட வசதியில் இந்த கார் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக லேண்ட் க்ரூஸர் காட்சியளிக்கின்றது. இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு வரும் முன்னரே அமைச்சர் கேஎன் நேரு வாங்கிவிட்டார் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடலாக லேண்ட் க்ரூஸர் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் ஒரு யூனிட் மட்டுமே இந்தியாவில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய காரையே துபாயில் கேரளாவைச் சேர்ந்த பேச்சாளர் தற்போது வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2025, 18:35 [IST]
English summary
Motivational speaker anil balachandran expands luxury collection with 2025 toyota land cruiser
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+