வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

ஏழு-முறை மோட்டோஜிபி சாம்பியனான வாலண்டினோ ரோஸ்ஸி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக இன்று (அக்.15) தெரிவித்துள்ளார்.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

கடந்த வாரம் லே மேன்ஸ் ஜிபி போட்டியில் கலந்த கொண்டு வந்த பிறகு யமஹா மோட்டோஜிபி தொழிற்சாலை ரைடரான ரோஸ்ஸி ‘விரைவு பிசிஆர் சோதனை'-இல் தன்னை உட்படுத்தி கொண்டார். இந்த சோதனையின் முடிவு எதிர்மறையாக வந்தது.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

இருப்பினும் அவர் சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்து ஜிபி அமைப்பாளர்களால் வழங்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்கு தொடர்ந்து சிறு சிறு காய்ச்சல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. குறிப்பாக இன்று (அக்.15) காய்ச்சல் அதிகமாகவே மருத்துவர்கள் வந்து பார்த்துள்ளனர்.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

அதன் பிறகு முன்பு மேற்கொண்ட சோதனையை இரண்டாவது முறையாக மேற்கொள்ள ரோஸ்ஸி அறிவுறுத்தப்பட்டுள்ளார். முதல் சோதனை எதிர்மறையாக வந்திருந்தாலும், இரண்டாவது சோதனையில் உலக ஜிபி மோட்டார்சைக்கிள் சாம்பியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

இதுகுறித்து வாலண்டினோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், இன்று காலை நான் (ரோஸ்ஸி) விழித்தப்போது, துரதிர்ஷ்டவசமாக, எனக்கு உடல்நிலை சரியில்லை. என் எலும்புகள் வலி உணர்வுடன் இருந்தன மற்றும் எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. எனவே, உடனடியாக என்னை இரண்டாவது முறையாக பரிசோதிக்க மருத்துவரை அழைத்தேன்.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

செவ்வாயன்று (அக்.13) நான் மேற்கொண்ட 'விரைவான பி.சி.ஆர் சோதனை' முடிவு எதிர்மறையாக வந்தது. இரண்டாவது சோதனையின் முடிவு இன்று பிற்பகல் 4 மணிக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக நேர்மறையாக (positive) அமைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் வாலண்டினோ ரோஸ்ஸி ஸ்பெயினில் நடைபெறவுள்ள அரகோன் ஜிபி போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை. அதுமட்டுமில்லாமல் இதே ட்ராக்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள டெரூல் ஜிபி போட்டியினையும் தவறவிடவுள்ளார்.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

இதுகுறித்தும் பதிவிட்டுள்ள ரோஸ்ஸி, "நான் அரகோனில் நடக்கும் பந்தயத்தை இழக்கவுள்ளேன் என்பதில் மிகவும் ஏமாற்றமடைகிறேன். ஆனால் அரகோனில் நடக்கும் இரண்டாவது சுற்றும் எனக்கு வேண்டாம் என்றே இப்போது நினைக்கிறேன்" என கூறியுள்ளார். அரகோன் ஜிபி போட்டி 2015ஆம் ஆண்டிற்கு பிறகு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள் பந்தயமாகும்.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

இவ்வாறான பெரிய போட்டிகளில் வாலண்டினோ ரோஸ்ஸிக்கும், ஹோண்டா நிறுவனத்தின் சார்பில் போட்டியிடும் டேனி பெட்ரோசாவிற்கும் இடையே தான் பலத்த போட்டி நிலவும். ஆனால் இம்முறை ரோஸ்ஸி இல்லாமல் இந்த போட்டி நடைபெறவுள்ளது, ஜிபி மோட்டார்சைக்கிள் பந்தய பிரியர்களுக்கு பெரிய ஏமாற்றமே.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

இதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ள ரோஸ்ஸி, தான் இந்த சூழ்நிலையில் இருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என நம்பிக்கையாக உள்ளார். நீண்டகால அனுபவமிக்க இத்தாலி ரேஸரான 41 வயது வாலண்டினோ ரோஸ்ஸி கடைசி மூன்று ஜிபி போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று 13வது உலக சாம்பியனாக உள்ளார்.

வாலண்டினோ ரோஸ்ஸிக்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் ஜிபி மோட்டார்சைக்கிள் பிரியர்கள்...

இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தற்போதைய கொரோனா சூழ்நிலையில், போட்டிகளை தொடர்ந்து நடத்த ஐரோப்பிய ட்ராக்குகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க மோட்டோ ஜிபி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Valentino Rossi Tests Positive For Covid-19: To Miss Aragon Grand Prix
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X