இத எதிர்பார்க்கவே இல்ல.. செம்ம டுவிஸ்டு.. மோட்டோஜிபி பாரத் 2023 பந்தயத்தில் முதல் இடத்தை பிடித்தவர் இவரா!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோட்டோஜிபி பாரத் 2023 போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் தொடங்கியது. இன்றுடன் இந்த போட்டி நிறைவுற்றிருக்கின்றது. இந்த போட்டிகளின் இறுதி சுற்று முடிவே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோட்டோஜிபி பாரத் 2023 போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) அன்று இந்தியாவில் தொடங்கியது. உபி மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் யமுனா விரைவுச்சாலைக்கு அருகே அமைந்துள்ள புத் சர்வதேச பந்தய களத்திலேயே இந்த போட்டிகள் நடைபெற்றன.

Motogp

இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் அமர்ந்து பயணிக்க முடியும். இந்தியாவில் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதேவேளையில், இந்த போட்டி ஏதோ ஒரு நாட்டில் நடைபெறும் போட்டி என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

மாதக் கணக்கில் பல்வேறு நாடுகளில் நடைபெறக் கூடிய போட்டியே இதுவாகும். அந்தவகையில், கடந்த மார்ச் மாதத்திலேயே மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவில் இந்த போட்டி வெள்ளிக் கிழமை தொடங்கியது. இந்த போட்டி நடைபெறும் 13 ஆவது நாடே இந்தியா ஆகும்.

Motogp bharat pecco bagnaia

Image credits: indianOil Grand Prix Of India/MotoGP இந்தியாவில் நடைபெற்ற இந்த போட்டியில், முதல் இடத்தை மூனி விஆர்46 ரேசிங் டீமைச் சேர்ந்த மார்கோ பெஸ்ஸச்சி (Marco Bezzecchi)-யும், இரண்டாம் இடத்தை பிரைமா பிரமக் ரேசிங் குழுவைச் சேர்ந்த ஜோர்கே மார்டின் (Jorge Martin - Prima Pramac Racing)-ம், மூன்றாவது இடத்தை யமஹா ஃபேக்டரி ரேசிங் டீமைச் சேர்ந்த ஃபேபியோ குவார்டரேரோ (Fabio Quartararo - Yamaha Factory Racing Team) பிடித்திருக்கின்றனர்.

இந்த போட்டியின் டிக்கெட்டுகள் ரூ. 800 தொடங்கி 40 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த டிக்கெட்டுகளில் 800 ரூபாய் டிக்கெட்டுகள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே முழுமையாக விற்று தீர்ந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த போட்டி ஸ்போர்ட்ஸ் 18 டிவி மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் நேரடியாக ஒளிபரப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதற்கு முன்னராக பல்வேறு மோட்டார் பந்தயங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இனி வரும் நாட்களில் இதுபோன்று இன்னும் பல சர்வதேச போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 24, 2023, 18:54 [IST]
English summary
Motogp bharat 2023 result marco bezzecchi wins first place
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X