150 ஜீப் ரேங்கலர் எஸ்.யூ.வி-களும், 30 திருடர்களும்; டிஜிட்டல் மயமாகி வரும் கார் திருட்டு சம்பவங்கள்!

Written By:

ஸ்கூரு டிரைவர், சுத்தியல் போன்ற உபகரணங்களால் கார்களை திருடுவது எல்லாம் அந்த காலம். காலத்திற்கு ஏற்றார் போல கார் திருட்டு சம்பவங்களும் மிக மிக அட்வான்ஸ் ஆகி விட்டன.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் கார்களை திருட திருடர்கள் டிஜிட்டல் வழிமுறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை தான் பின்பற்றுகிறார்கள்.

இந்தியாவில் இந்த நடைமுறை பெரியளவில் இல்லை என்றாலும், இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாது.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

டிஜிட்டல் துறை அமெரிக்காவில் எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அதன்மூலம் நடக்கும் திருட்டு சம்பவங்களுக்கும் அதிகரித்துள்ளன.

கணினியில் இருக்கும் தகவலை பெற

ஹேக்கிங் செய்யப்படுவது போல் கார்களை ஹேக்கிங் செய்து திருடிய ஒரு திருட்டுக்கும்பலை அமெரிக்காவின் FBI கையும் களவுமாக பிடித்துள்ளது.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

லத்தின் அமெரிக்கா நாடான மெக்சிகோவின் டிஜூஹனா பகுதியை சேர்ந்த 30 பேர், கலிஃபோர்னியா மாகாணத்தில் பல ஜீப் ரேங்லர் எஸ்.யூ.வி கார்களை ஹேக் செய்து திருடி வந்தனர்.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

'டர்ட்டி 30' என்ற பெயரில் இந்த கும்பல் களவாடிய ஜீப் ரேங்லர் கார்களின் என்ணிக்கை மட்டும் சுமார் 150 தாண்டும் என்கின்றனர் எஃப்.பி.ஐ.

திருடப்பட்ட கார்களை ஏதேனும் எல்லைப்பகுதிகளுக்கு கொண்டு சென்று பல்வேறு பாகங்களாக பிரித்து விற்றுவிடுவது இந்த கும்பலின் வாடிக்கை.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

150 ஜீப் ரேங்கலர் எஸ்.யூ.வி கார்களை அநாயசமாக திருடி 'டர்ட்டி 30' கும்பல் விற்றதன் மதிப்பு சுமார் ரூ.45 லட்சத்தை தாண்டும் என்கிறது எஃப்.பி.ஐ.

ஜகஜால கில்லாடியான இந்த திருடர்கள் தங்களுக்குள் சில படிநிலைகளை உருவாக்கி அதன் அடிப்படையிலே செயல்பட்டு வந்துள்ளனர்.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

எல்லா கேங் போல ’டர்ட்டி 30’ குழுவுக்கும் ஒரு தலைவன் உள்ளான். அவனுக்கு கீழ் ஒரு ஒற்றன், தகவல் தொடர்பாளன், திட்டத்தை செயல்படுத்துவன் மற்றும் சாவி உருவாக்குபவன் என நால்வர் கூட்டணி ஒன்று உள்ளது.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

திருடலாம் என முடிவுசெய்யப்பட்ட ஜீப் ரேங்லர்கு குறித்த தகவலை தகவல் தொடர்பாளர்திரட்டுவார் . அதன்மூலம் அவருக்கு வண்டியின் வாகன அடையாள எண் (VIN) கிடைத்துவிடும்.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

வாகன அடையாள எண்ணை வைத்து காரின் டாஷ் போர்டு உட்பட ரேங்லர் எஸ்.யூ.வி-யின் பல்வேறு அமைப்புகளும் தெரியவரும்.

இந்த தகவல் அனைத்தும் சாவி தயாரிப்பவனுக்கு அனுப்பப்படும். அவன் அந்த தரவுகளை வைத்து சாவி செய்வான்.

வாகன அடையாள எண்ணை வைத்து வாகனத்திற்கான டூப்ளிகேட் சாவியை தயாரித்து விடமுடியுமா என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

இதுப்பற்றி அமெரிக்காவின் உளவுத்துறையான FBI அதிகாரிகள், இதுவரை ’டர்ட்டி 30’ திருடர்கள் செய்த எல்லா திருட்டு சம்பவங்களும் டிஜிட்டல் மூலமே செய்யப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

ரேங்லர் வாகனத்திற்காக ஜீப் நிறுவனம் தயாரிக்கும் கணினி தரவுகளை திருடும் அளவிற்கு ’டர்ட்டி 30’ கும்பல் கை தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

டிஜிட்டல் தரவுகளைக் கொண்டு VIN எண்ணை கண்டறிந்து, பிறகு அதற்கு ஏற்றவாறு சாவி தயாரிக்கும் அளவிற்கு இவர்கள் கில்லாடிகள் என கூறுகிறது அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

தரவுகளை பெற்றபின்,’டிரட்டி 30’ திருடர்கள் தங்களிடம் இருக்கும் கணினியை ஜீப்பின் உள்கட்டமைப்புடன் (Onboard Diagnostics System (OBD)) இணைத்துவிடுவர்.

இதன்மூலம் புதிய புரோகிராம் ஒன்றை உருவாக்கி வாகனத்திற்கான புதிய திரவுகோளை தயாரித்து விடுவார்கள். பிறகு வாகனம் இவர்கள் என்ன சொன்னாலும் செய்யும்.

இதற்கு ஆதாரமாக ’டர்ட்டி 30’ திருட்டு கும்பல் ஒரு ஜீப் ரேங்லரை 2 நிமிடங்களுக்குள் திருடும் காணொளியை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

இப்படிதான் ’ட்ரட்டி 30’ கும்பல் செயல்பட்டுள்ளது. 30 பேர் கொண்டுள்ளதால் தங்களுக்குள் குழுக்களை உருவாக்கி, அமெரிக்கா, மெக்சிகோ உட்பட பல்வேறு பகுதிகளில் 150 ரேங்கலர் கார் வாகனங்களை திருடியுள்ளனர்.

ஜீப் ரேங்லர் கார்களை ஹேக் செய்து திருடிய திருடர்கள்..!

அனைத்து திருட்டு சம்பவங்களிலும் இவர்கள் செயல்படுத்தும் திட்டம், செயல்படும் முறை போன்றவை ஒன்றாகவே இருந்துள்ளது.

இதில் கிடைத்த துணுக்குகளை வைத்துதான் அமெரிக்கன் எஃப்.பி.ஐ ‘டர்ட்டி 30' திருட்டுக் கும்பலை காத்திருத்து, வலைப்போட்டு பிடித்துள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
America FBI arrests Motorcycle Gang Hackers Arrested After Stealing Over 150 Jeep Wranglers. Click for Details...
Story first published: Saturday, June 3, 2017, 12:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark