புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

புதிதாக பைக் வாங்க நினைபவர்கள் அவர்களுக்கான பைக்கை எப்படி தேர்ந்தேடுப்பது, அந்த பைக்கை எப்படி பாதுகாப்பாக ஓட்டுவது என்ற டிப்ஸ்களை இச்செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம்.

ரைடிங் செல்ல விரும்புபவர்கள் காரில் செல்வதை விட பைக்கில் தான் அதிகம் செல்ல விரும்புவர். சிலு சிலு வென வரும் காற்று, சிறிய சிறிய இடங்களிலும் பயணிக்கும் வாய்ப்பு என அனைத்தையும் தாண்டி பைக்கில் தான் த்ரில் அதிகம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

பைக் ரைடிங்கில் த்ரில் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் ஆபத்துக்களும் அதிகமாக உள்ளது. கார் விபத்துக்களை விட பைக் விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கை 30 சதவிதம் வரை அதிகமாக உள்ளதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

புதிதாக பைக் வாங்குபவர்கள் தாங்களுக்கான பைக்கை எப்படி தேர்ந்தேடுக்க வேண்டும். பைக்கில் எவ்வாறு பாதுகாப்பாக பயணிக்க வேண்டும், என்பது குறித்த சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

பைக்கை தேர்ந்தெடுப்பது எப்படி

நீங்கள் பைக் வாங்கும் போது உங்களது உடல் வாகுக்கு ஏற்ற பைக்கை தேர்ந்தெடுப்பது முக்கியம். நீங்கள் பைக்கில் உட்காந்தவுடன் உங்களது இரண்டு கால்களும் தரைக்கு எட்ட வேண்டும். பாதங்கள் முழுமையாக தரையில் பட வேண்டும். காலின் முன் பகுதி மட்டும் படும் மாதிரியான பைக்குகளை தேர்தேடுக்காதீர்கள்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

நீங்கள் பைக்கில் உட்காந்திருக்கும் போது பைக்கில் கைப்பிடிகள் உங்களுக்கு வசதியாக அமைந்திருக்க வேண்டும். உயரம் குறைவாக இருப்பவர்கள் உயரம் அதிகமாக உள்ள பைக்கை தேர்ந்தேடுப்பதை தவிர்க்கலாம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

தொடர்ந்து உங்களால் அந்த பைக்கிற்கு சென்டர் ஸ்டாண்ட் போட முடிய வேண்டும். அப்பொழுது தான் அந்த பைக்கை கையாள உங்களுக்கு போதுமான வலு உள்ளதாக கருதிக்கொள்ளலாம். உயர் ரக பைக்கிலும் குறைந்த உயரமுடைய பைக்குகள் வருகின்றன. குறைவான உயரம் உள்ளவர்கள் உயர் ரக பைக்கை வாங்க விரும்பினால் அந்த பைக்குகளை தேர்தேடுத்து கொள்ளலாம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

ஏ.பி.எஸ்.

தற்போது பைக்குகளுக்கான ஏ.பி.எஸ். சில மாடல் பைக்குகளுடன் ஷோரூமில் இருந்தே வருகிறது. பல மாடல்களுக்கு வருவதில்லை. ஆனால் நீங்கள் எவ்வளவு நல்ல ரைடராக இருந்தாலும் ஏ.பி.எஸ். உங்களுக்கு ஒரு படி மேல் போய் மிக உதவியாக இருக்கும். அதனால் நீங்கள் ஏ.பி.எஸ். உள்ள பைக்குகளை தேர்தேடுப்பது நல்லது.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் விபத்து நடக்கும் வாய்ப்பை ஏ.பி.எஸ். 37 சதவீதம் வரை தவிர்க்கிறது என தெரியவந்துள்ளது. உதாரணமாக நீங்கள் செல்லும் போது நீங்கள் தவறு செய்யாமல் வேறு யாராவது தீடீர் என குறுக்கே வந்தால் கூட ஏ.பி.எஸ். மூலம் முன்னதாகவே பைக் நிறுத்தப்பட்டுவிடும். இதனால் விபத்து தவிர்க்கலாம். ஆனால் ஏ.பி.எஸ் இல்லாத பைக்குகள் ஸ்கிட் ஆகி பைக்கை விபத்திற்குள்ளாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

பெரும்பாலும் உயர் ரக மாடல்களில் ஏ.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அதை தேர்ந்தேடுப்பது சிறந்தது. ஒருவேலை நீங்கள் செலக்ட் செய்யும் பைக் ஏ.பி.எஸ். இல்லாத பேஸிக் மாடல் பைக் என்றால் அதே விலையில் உள்ள அதற்கு அடுத்த குறைந்த ரக பைக்கின் டாப் வேரியண்ட்டை வாங்குவது தான் சிறந்தது.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

லைசன்ஸ் வாங்குங்க

நீங்கள் பைக் வாங்கும் முன் முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று சரியாக பைக் ஓட்ட கற்றுக்கொள்வது. பைக் ஓட்ட கற்றுக்கொள்வது என்றால் பைக்கை செயல்படுத்த கற்றுக்கொள்ளவதுதில்லை. பைக்கை கற்று கொள்வது என்றால் சாலை விதிகளை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் பைக்கை சரியாக இயக்குவது. இவ்வாறாக இயங்கி பைக் வாங்கும் அந்த பைக்கை ஓட்டுவதற்கான உரிமைத்தை உங்கள் பகுதி ஆர்.டி.ஓ.,விடம் வாங்க வேண்டும்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

ஹெல்மெட் பயன்படுத்தும் போது ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டும் குறைந்த விலை ஹெல்மெட்டை பயன்படுத்துவது அதற்கான அடிப்படை பயனையே வழங்காது. ஹெல்மெட் பைக்கின் ஒரு அங்கமாகவே நாம் கருத வேண்டும். பைக்கில் செல்லும் முன் ஹெல்மெட் அணிந்துள்ளீர்களா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

ரைடிங் கியர்

பைக் ஓட்டும் போது அதற்கான சரியா உடை என்பது அவசியம். நீங்கள் பைக் ஓட்டும் போது அதற்கு உங்கள் ஆடை ஒத்துழைக்கவில்லை என்றால் நீங்கள் விபத்தில் சிக்க நேரிடும். உதாரணமாக ஜீன்ஸ் பேண்ட் போட்டு பைக் ஓட்டுவது சிரமமானது. நீண்ட தூர பயணத்தின் போது பெரும் சிரமத்தை அது கொடுக்கும்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

பைக் ஓட்டுவதற்கு என சில லெதர் ஜாக்கெட்கள் உள்ளன. அதை பயன்படுத்தலாம். வெயில் நேரங்களிலும் நீங்கள் பைக்கில் ரைடு செய்யும் போது போட்டுக்கொள்ள வசதியாக ஜாக்கெட்கள் உள்ளன. அதை நீங்கள் பயன்படுத்தலாம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

தொடர்ந்து கிளவுஸ், பேண்ட், ஷூ என பல பொருட்கள் ரைடிங் கியர்களாக கிடைக்கின்றன. நீங்கள் நெடுதூரம் பைக் பயணம் மேற்கொள்ள நினைத்தால் இதை கட்டாயம் பயன்படுத்துங்கள உங்கள் ரைடிங்கை இது இனிமையாக்கும்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

அலர்ட்டாக இருங்கள்

சமீபத்தில் நடத்தப்பபட்ட ஒரு ஆய்வில் பைக்கும் அதை விட பெரிய வாகனமான கார் உள்ளிட்ட வாகனங்களுடன் ஏற்படும் விபத்துக்களின் 60 சதவீதமான தவறுகள் பெரிய வாகனத்தின் மீதே இருக்கின்றன. அதனால் பைக்கில் செல்பவர்கள் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

சாலை சந்திப்புகள், பெரிய ரோடுகள் ஆகிய பகுதிகளில் உங்களுக்கு எதிரே வரும் வாகனம், உங்களுடன் செல்லும் கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் மீது கவனமாக இருங்கள். இதன் மூலம் பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

மோசமான வானிலை

அதிகமாக மழை பொழிவு இருக்கும் போதும், கடும் பனிப்பொழிவு இருக்கும் போது பைக்கில் பயணம் செய்வதை முடிந்த அளவிற்கு தவிர்க்க பாருங்கள். அதிக மழை இருந்தால் ரோடுகளில் அதிக அளவு வழுக்கலாக இருக்கும். இதனால் அந்த நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்கலாம். அதிகமாக பனிப்பொழிவு இருக்கம் நேரத்திலும் எதிரே வரும் வாகனம் குறித்து தெரியாது. இதனால் விபத்துக்கள் நடக்கலாம். இந்த நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்கலாம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

ரோட்டின் தன்மை

இந்தியாவில் ரோடுகளின் நிலைமை சற்று மோசமாகதான் இருக்கிறது. முறையான பாராமரிப்பு இன்றி ரோட்டில் ஆங்காங்கே மணல் குவியல், கற்குவியல் காணப்படும். நீங்கள் இதை கவனிக்காமல் வேகமாக சென்றால் விபத்தில் சிக்க கூடும். அதனால் இதில் கவனம் கொள்ளுங்கள்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

ரேட்டின் தன்மை

இந்தியாவில் ரோடுகளின் நிலைமை சற்ற மோசமாக தான் இருக்கிறது. முறையான பாராமரிப்பு இன்றி ரோட்டில் ஆங்காங்கே மணல் குவியல், கற்குவியல் காணப்படும். நீங்கள் இதை கவனிக்காமல் வேகமாக சென்றால் விபத்தில் சிக்க கூடும். அதனால் இதில் கவனம் கொள்ளுங்கள்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

மேலும் ரோடுகளில் ஆங்காங்கே குழிகள் மற்றும் மேடுகள் காணப்படும். நீங்கள் வேகமாக செல்லும்போது எதிரே வரும் வாகனத்தின் மீது வைக்கும் கவனம் ரோட்டின் மீது வைக்க வேண்டும் அப்பொழுது தான் விபத்துக்களின் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

பைக்கை எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

நீங்கள் தினமும் முதன் முதலாக பைக்கை எடுக்கும் முன்பு பைக்கில் உள்ள ஹெட்லைட், ஹாரன், சிக்னல் ஆகியன சரியான வேலை செய்கிறதா என்பதை கவனியுங்கள். அதே போல் பைக்கில் உள்ள செயின், பெல்ட், கியர், பிரேக் ஆகியனவும் சரியாக வேலை செய்கிறதா என்பதை கவனியுங்கள். இல்லாவிட்டால் பயணத்தின் போது அவை வேலை செய்யாமல் உங்களை விபத்தில் சிக்க வைத்து விடும்.

புதிய பைக் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு... எப்படி பைக்கை செலக்ட் செய்ய வேண்டும் தெரியுமா?

பைக் டயரில் காற்று அளவு சரியாக இருக்கிறதா?, கைப்பிடிகள் திருப்புதற்கு வசதியாக இருக்கிறதா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள் இதன் மூலம் நீங்கள் எதிர்பாராத விபத்துக்களின் இருந்து தப்பிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Motorcycle safety tips for new riders. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X