மெழுகு சிலை மாதிரி இருக்காங்க! கோடி ரூபாய் காரில் வந்தது அவங்களா! அழகுல ரம்பை, ஊர்வசியை ஓரங்கட்டிட்டாங்க!

திரைப்பட நடிகைகள் (Actresses) சொகுசு கார்களில் பயணம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இதற்காக கோடி கோடியாய் கொட்டி கொடுப்பதற்கும் நிறைய நடிகைகள் தயாராக இருக்கின்றனர். இந்த சூழலில் 2 பிரபலமான நடிகைகள், தங்கள் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகை மௌனி ராயை (Mouni Roy) நம்மால் முதலில் பார்க்க முடிகிறது. அவர் பயன்படுத்தியது ரேஞ்ச் ரோவர் வெளார் (Range Rover Velar) ஆகும். இந்த வீடியோவில் நாம் காணும் மற்றொரு நடிகை அலியா பட் (Alia Bhatt).

Range Rover Velar

அவர் பயன்படுத்தியது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Land Rover Range Rover Autobiography) ஆகும். இந்த காரை அலியா பட் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாகவும் பல இடங்களுக்கு அவர் இந்த காரில் வந்து சென்றுள்ளார். இந்த 2 நிகழ்வுகளும் மும்பை (Mumbai) நகரில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை மௌனி ராயின் ரேஞ்ச் ரோவர் வெளார் காரை பொறுத்தவரையில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 250 பிஹெச்பி பவர் மற்றும் 365 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். இதனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Alia Bhatt Spotted In Land Rover Range Rover

மற்றொன்று 204 பிஹெச்பி பவர் மற்றும் 430 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.0 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜினை போல், டீசல் இன்ஜின் உடனும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) ரேஞ்ச் ரோவர் வெளார் கார் கிடைக்கிறது. இந்த 2 வேரியண்ட்களின் விலையும் (Price) 94.30 லட்ச ரூபாய்தான். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை தோராயமாக 1.20 கோடி ரூபாய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் நிறைய வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் அலியா பட் வாங்கியிருப்பது ஆட்டோபயோகிராபி வேரியண்ட் ஆகும். அலியா பட்டின் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு இன்லைன்-6 டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 350 பிஎஸ் பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப விலையே 2.39 கோடி ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 4.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். மௌனி ராய் மற்றும் அலியா பட் ஆகியோரிடம் இந்த கார்கள் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரேஞ்ச் ரோவர் வெளார் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி ஆகிய 2 கார்களுமே சொகுசான பயணத்தை உறுதி செய்ய கூடியவை. இதன் காரணமாகவே மௌனி ராய் மற்றும் அலியா பட் ஆகியோர் இந்த கார்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2023, 14:40 [IST]
English summary
Mouni roy spotted in range rover velar viral video price all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+