அஜித்தை வைத்து அந்த ஹிட் படத்தை கொடுத்தவர் தானே இவர்? ரொம்ப நாளா ஆளே காணமா இருந்தவர் வாங்கிய புதிய கார்!!
சிட்ரோன் (Citroen), பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனம். ஐரோப்பாவின் பிஎஸ்ஏ க்ரூப் (PSA Group)-இல் ஓர் அங்கமாக செயல்படும் சிட்ரோன், இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்பது இந்த நிறுவனத்தின் கார் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை பிராண்ட் தூதராக நியமித்தும் சிட்ரோனுக்கு பெரியதாக பலன் கிடைப்பது போல் தெரியவில்லை. இருப்பினும், இந்த நிறுவனத்தின் கார்களை குறிப்பிட்ட சில விஐபி-கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சிட்ரோனின் சமீபத்திய மாடலான பசால்ட் (Basalt) காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிராண்ட் தூதரான தோனியிடம் பசால்ட் கார் ஒன்று உள்ளது. அந்த வரிசையில், பிரபல திரைப்பட இயக்குனரான உன்னிகிருஷ்ணன் புதியதாக சிட்ரோன் பசால்ட் கார் ஒன்றை வாங்கி உள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை சம்பந்தப்பட்ட சிட்ரோன் டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் பிறந்தவரான இயக்குனர் உன்னிகிருஷ்ணனின் முழு பெயர், உன்னிகிருஷ்ணன் பாஸ்கரன் பிள்ளை ஆகும். 54 வயதான இவர் 1999ஆம் ஆண்டில் இருந்து மலையாள சினிமா (Cinema) துறையில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் சில திரைப்படங்களுக்கு கதையாசிரியராக பணியாற்றி வந்தவர், அதன்பின் 2006ஆம் ஆண்டில் இருந்துதான் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார்.
உன்னிகிருஷ்ணன் கதை எழுத்தாளராக பணியாற்றிய திரைப்படங்களுள் 2004ஆம் ஆண்டில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'ஜனா' திரைப்படமும் ஒன்றாகும். ஆனால், தற்போதுவரையில் உன்னி கிருஷ்ணன் பணியாற்றிய ஒரே தமிழ் திரைப்படம் அது மட்டுமே ஆகும். கடைசியாக 2023இல் நடிகர் மம்முட்டியை வைத்து 'கிறிஸ்டோபர்' (Christopher) என்கிற படத்தை இயக்கிய உன்னிகிருஷ்ணன் சமீப காலமாக சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளார்.

கடந்த 2024 மற்றும் இந்த 2025ஆம் ஆண்டுகளில் இவரது இயக்கத்தில் இதுவரையில் எந்த திரைப்படமும் திரைக்கு வரவில்லை. திரைக்கு வருவது போலவும் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் பிராண்ட்-நியூ சிட்ரோன் பசால்ட் காரை வாங்கி உள்ளார். மகள் உடன் ஷோரூமுக்கு வந்து பசால்ட் காரை உன்னிகிருஷ்ணன் டெலிவிரி பெறும் வீடியோவை சம்பந்தப்பட்ட சிட்ரோன் டீலர்ஷிப் ஷோரூம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் உன்னிகிருஷ்ணன் முற்றிலும் வெள்ளை நிறத்தில் சிட்ரோன் பசால்ட் காரை வாங்கி உள்ளார். இதனை 'போலார் வெள்ளை' (Polar White) என சிட்ரோன் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ நீலம், கார்னெட் சிவப்பு, பேர்ல் நெரா கருப்பு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் பசால்ட் கார் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சிங்கிள்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் சிட்ரோன் பசால்ட் கார் கிடைக்கிறது. கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் டாடா கர்வ் (Tata Curvv) காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோன் பசால்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.12 லட்சத்தில் இருந்து ரூ.17.66 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது பசால்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இருப்பினும், இத்தனை லட்சத்தில் கார் ஒன்றை வாங்குவது எல்லாம் நடிகர் மம்முட்டி, மோகன்லாலை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் உன்னிகிருஷ்ணனுக்கு பெரிய விஷயமாகவே இருக்காது.
Source: la_maison_citroen_kerala (https://www.instagram.com/la_maison_citroen_kerala/)


Click it and Unblock the Notifications








