பழைய மாருதி காரில் போகும் அளவுக்கு வாழ்க்கை மாறி போச்சு! ஒரு சமயத்தில் சுற்றியும் கேமரா உடன் வாழ்ந்த பிரபலம்!
ஒவ்வொரு மொழியிலும் சினிமா (Cinema) திரைப்படங்களை விமர்சிப்பதற்காக என்றே சிலர் இருக்கின்றனர். நம் தமிழில் கூட ப்ளூ சட்டை மாறன் போன்றோர் இருப்பதை போல, மலையாளத்தில் திரைப்படங்களை விமர்சித்து அதன் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர், சந்தோஷ் வர்கி (Santosh Varkey) ஆவார். மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டாலே, கூடவே பிரச்சனைகளும் வரும் என சொல்வதற்கு இணங்க, சந்தோஷ் வர்கியை சுற்றிலும் எப்போதுமே சர்ச்சைகளும், கேலி கிண்டல்களும் இருக்க தான் செய்கின்றனர்.
இதில் உச்சமாக, பெண் ஒருவரை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பேசியதற்காக சந்தோஷ் வர்கியை அதிரடியாக போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். கேரளா முழுவதும் வைரலாகிய இந்த சம்பவத்தை வாழ்க்கை முழுவதும் சந்தோஷ் வர்கி மறக்க மாட்டார். இந்த வழக்கிற்காக 12 நாட்கள் சிறைத்தண்டனையை அனுபவித்து பின்னர் முன் ஜாமீனில் சந்தோஷ் வர்கி வெளியே வந்துள்ளார்.

வெறும் 12 நாட்கள் தான் என்றாலும், இந்த சிறைத்தண்டனை இவரை மனதளவிலும், உடலளவிலும் பெரியதாக மாற்றி விட்டது. சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பின் சமூக வலைத்தளங்களில் காட்சி தருவதை பெரிதும் தவிர்த்த சந்தோஷ் வர்கி, இணைய பிரபலம் என்கிற பட்டத்தை விடுத்து சாதாரண மனிதராக வாழ ஆரம்பித்துவிட்டார்.
இதற்கு முக்கிய காரணம், பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் போலீசார் கைது செய்த போது சந்தோஷ் வர்கிக்கு ஊடக துறையை சேர்ந்தவர்களும் சரி, ரசிகர்களும் சரி பெரியதாக எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. சந்தோஷ் வர்கி திரைப்பட விமர்சனங்களை வீடியோவாக போடும்போது அதற்கு கைத்தட்டி விசலடித்தவர்கள், அவருக்கு ஒரு பிரச்சனை என வந்ததும் அப்படியே கலைந்து சென்றுவிட்டனர்.

இந்த விஷயத்தில் பெரிதும் மனம் தளர்ந்த சந்தோஷ் வர்கி சாதாரண வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார் என ஏற்கனவே கூறினோம் அல்லவா... முன்பு எங்கு சென்றாலும் கேமராக்களுடன் சென்றுக் கொண்டிருந்தவர், இப்போது எந்தவொரு ஆடம்பரமும் இன்றி கையில் ஒரு பை உடன் பழைய மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரில் ஏறி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இணையத்தில் 'அரட்டனன்' என அழைக்கப்படும் சந்தோஷ் வர்கி பெரும்பாலும் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) உடன் தான் வெளியே வருவது வழக்கம். ஸ்கூட்டரில் இவர் வருவதை கண்டாலே கூட்டம் கூடிவிடும். ஆனால், தற்போது யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக காரில் மறைவாக செல்வது பார்க்கவே சங்கடமாக உள்ளது.
வெள்ளை நிறத்திலான மாருதி சுஸுகி ஆல்டோ காரில் சந்தோஷ் வர்கி ஏறி சென்றுள்ளார். காரை அவர் ஓட்டவில்லை, முன் இருக்கையில் அமர்ந்து சென்றுள்ளார். ஆல்டோ ஆனது மாருதி சுஸுகி நிறுவனத்தின் தரமான கார்களுள் ஒன்றாகும். இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி இவ்வளவு பெரிய உயரத்தை எட்டுவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் கார்களுள் ஆல்டோவும் ஒன்றாகும்.
ஆனால், வீடியோவில் பார்க்கும் சந்தோஷ் வர்கி ஏறி சென்ற பழைய ஆல்டோ கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. இதில், அளவில் சிறியதான 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டது. இப்போது விற்பனையில் இருக்கும் ஆல்டோ கே10 காரில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.4.23 லட்சத்தில் இருந்து ரூ.6.21 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆல்டோ ஆனது இந்தியர் பலரது கனவு வாகனமாக இப்போதும் உள்ளது. ஆதலால், சிறைத்தண்டனை முடிந்து வந்த பிறகு சந்தோஷ் வர்கிக்கு பயன்படுத்துவதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ போன்ற காராவது உள்ளது. ஆனால், ஏழை, எளியோர் பலருக்கு ஆல்டோ கே10 காரை வாங்குவதே பெரிய இலட்சியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








