2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

திரைப்பட நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் ஃபகத் பாஸிலும், தங்களது புதிய காருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

மலையாள திரையுலகின் நட்சத்திர தம்பதி ஃபகத் பாஸில் - நஸ்ரியா. இவர்களின் திருமணம் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்றது. 6வது திருமண நாளை அவர்கள் இருவரும் சமீபத்தில்தான் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை, அவர்கள் வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

போர்ஷே 911 கரேரா எஸ் (Porsche 911 Carrera S) காரைதான், ஃபகத் பாஸில்-நஸ்ரியா தம்பதியினர் தற்போது வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே நிறுவனத்தில் இருந்து வரும் மிகவும் பிரபலமான ஒரு மாடல்தான் 911 கரேரா எஸ். இது போர்ஷேவின் 911 லைன் அப்பில் இருக்கும் பெட்ரோல் வேரியண்ட் ஆகும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

போர்ஷே 911 கரேரா எஸ் காரில், 3.0 லிட்டர், 6 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 444 பிஎச்பி பவரையும், 2,300 ஆர்பிஎம்மில் 530 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடிய வல்லமை வாய்ந்தது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான இன்ஜின் ஆகும்.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

செயல்திறன் மிக்க ஸ்போர்ட் கார் என்றாலும் கூட, ஒரு லிட்டருக்கு 11.24 கிலோ மீட்டர் மைலேஜை போர்ஷே 911 கரேரா எஸ் வழங்கும். இது அராய் அமைப்பால் சான்றளிக்கப்பட்ட மைலேஜ் ஆகும். 4 சீட்டர் வெர்ஷனில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 9 வண்ண தேர்வுகளில், போர்ஷே 911 கரேரா எஸ் விற்பனை செய்யப்படுகிறது.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

இதில், பச்சை நிறத்தை ஃபகத் பாஸில்-நஸ்ரியா தம்பதியினர் தேர்வு செய்துள்ளனர். போர்ஷே 911 கரேரா எஸ் கார் பலரிடம் இருந்தாலும், ஃபகத் பாஸில்-நஸ்ரியா தம்பதி தேர்வு செய்துள்ள நிறம் தனித்துவமாக உள்ளது. போர்ஷே 911 கரேரா எஸ் காரில், 64 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

எனவே எரிபொருள் டேங்க்கை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 719.36 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என போர்ஷே நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் நடைமுறை பயன்பாட்டில், இந்த டிரைவிங் ரேஞ்ச் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில், போர்ஷே 911 கரேரா எஸ் காரின் பூட் ஸ்பேஸ் 132 லிட்டர்களாக உள்ளது. இந்த காரின் எடை 1,515 கிலோ ஆகும்.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

எடை குறைவான மாடல் என்பதால், சிறப்பான செயல்திறன் வெளிப்படும். செயல்திறனை போல், பாதுகாப்பு வசதிகளுக்கும் இந்த காரில் பஞ்சமில்லை. 911 கரேரா எஸ் காரில், போர்ஷே நிறுவனம் 6 ஏர்பேக்குகளை வழங்கியுள்ளது. மேலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த போர்ஷே 911 கரேரா எஸ் காரின் விலை 1.84 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. இதன் டெல்லி ஆன் ரோடு விலை தோராயமாக 2.12 கோடி ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஃபகத் பாஸில்-நஸ்ரியா தம்பதியினர் இந்த காரை 2.65 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

ஃபகத் பாஸில்-நஸ்ரியா தம்பதியினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, போர்ஷே 911 கரேரா எஸ் காரில், ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக காரின் விலை இன்னும் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த கார்களிலும் கூட, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இன்னும் ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்து கொள்வதில், சினிமா நட்சத்திரங்கள் பலர் ஆர்வம் காட்டுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

2.65 கோடிக்கு கார் வாங்கிய நஸ்ரியா கணவர்! விலையை விடுங்க... இந்த மேட்டர் தெரிஞ்சா ஜெர்க் ஆயிருவீங்க

இந்த வகையில் போர்ஷே 911 கரேரா எஸ் காரை மாடிஃபிகேஷன் செய்வதற்கு மட்டும் சுமார் 53 லட்ச ரூபாய் தொகையை, ஃபகத் பாஸில்-நஸ்ரியா தம்பதியினர் செலவிட்டுள்ளனர். காரின் விலையை காட்டிலும் இந்த விஷயம்தான் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது. ஃபகத் பாஸில்-நஸ்ரியா தம்பதியினர் தங்களது புதிய காருடன் இருக்கும் படங்களை, Exotics and Imports Spotted in Kerala முகநூலில் பதிவிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Movie Star Fahadh Faasil Buys Porsche 911 Carrera S Worth Rs 2.65 Crore. Read in Tamil
Story first published: Saturday, October 10, 2020, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X