டீக்கடைக்காரர் இந்த முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கல!! குழந்தைகளுக்காக இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க!

புதியதாக வாகனம் வாங்குவது யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் வாழ்வில் இந்த மாதிரி ஒரு வாகனத்தை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அந்த வாகனத்தின் அளவும், விலையும் வேண்டுமாயின் வேறுப்படலாமே தவிர்த்து எல்லாருக்கும் ஏதாவது ஒரு கனவு வாகனம் இருக்கும். அதனை சொந்தமாக்கும் போது பலர் பல விதமாக அதனை கொண்டாடுவர். ஒரு சிலர் ஷோரூமில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடுவர். ஒரு சிலர் பட்டாசுகள் வெடிக்க, மேள தாளங்களுடன் வாகனத்தை டெலிவிரி பெற்று சென்றுள்ளதை கூட பார்த்திருக்கிறோம்.

ஆனால், இங்கு ஒருவர் தனது புதிய டிவிஎஸ் எக்ஸ்.எல் (TVS XL) பைக்கை வெகு விமர்சையாக வரவேற்று உள்ளார். எந்த அளவிற்கு என்றால், டீ விற்பனையாளரான இந்த நபர் புதியதாக டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் மற்றும் அதற்கான நிகழ்ச்சிக்கு என மொத்தமாக ரூ.60,000 செலவு செய்து எல்லாரையும் பிரம்மிக்க வைத்துள்ளார்.

mp man celebrates dj party

அதாவது, பைக் அறிமுக நிகழ்ச்சிகாக மட்டும் ஏறக்குறைய ரூ.5,000இல் இருந்து ரூ.10,000 வரையில் செலவு செய்துள்ளார். டீக்கடை வைத்து நடத்திவரும் இந்த நபரது பெயர் முராரி லா குஷ்வாஹா ஆகும். புதியதாக டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கை இவர் டிஜே பார்ட்டி மற்றும் ஆடல், பாடல்களுடன் டெலிவிரி பெற்றுள்ளார். முக்கியமாக, தனது புதிய எக்ஸ்.எல் பைக்கை அனைவருக்கும் ஜேசிபி வாகனத்தின் மூலம் மேலே தூக்கி காட்டியுள்ளார்.

இதனால், முராரி லா குஷ்வாஹா புதியதாக டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் வாங்கும் நிகழ்வானது ஒரு சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பைக் அறிமுக நிகழ்ச்சியை திருவிழா போல் நடத்தியுள்ள இந்த நபர் தனது புதிய டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கை முழு தொகை கொடுத்து வாங்கவில்லையாம். ரூ.20,000 முன்தொகை மட்டுமே கொடுத்து வாங்கியுள்ளாராம்.

mp man celebrates dj party

அதாவது மீதி பணத்தை மாதத்தவணை முறையில் செலுத்த வேண்டியிருக்கும். மற்ற குடும்பத் தலைவர்களை போல குடும்பத்திற்கு உழைக்க மிகவும் விரும்பக்கூடியவரான முராரி, தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இவ்வாறு செலவு செய்து பைக் அறிமுக நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக கூறுகிறார். மத்திய பிரசேதம் மாநிலத்தை சேர்ந்தவரான முராரி லா குஷ்வாஹாவுக்கு சிவ்புரி என்கிற நகரத்தில் டீக்கடை ஒன்று உள்ளது.

முராரி லா குஷ்வாஹாவின் இந்த செயல் சுற்றியிருந்தவர்களுக்கு ஜாலியானதாகவும், புதுமையானதாகவும் இருந்தாலும் போலீசாருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பொது இடத்தில் இரைச்சலை ஏற்படுத்தியதற்காக முராரி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட டிஜே மியுசிகல் பொருட்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

mp man celebrates dj party

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளுள் ஒன்று டிவிஎஸ் எக்ஸ்.எல் ஆகும். குறிப்பாக, முராரி லா குஷ்வாஹாவை போன்ற சிறு தொழில் செய்பவர்களின் உற்ற தோழனாக டிவிஎஸ் எக்ஸ்.எல் விளங்குகிறது. ஆரம்ப காலக்கட்டத்தில், 50சிசி என்ஜின் உடன் எக்ஸ்.எல்50 அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது 100சிசி என்ஜின் உடன் மட்டுமே எக்ஸ்.எல் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹெவி ட்யூட்டி மற்றும் கம்ஃபர்ட் என இரு விதமான எக்ஸ்.எல் பைக்குகள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் டீக்கடைக்காரர் முராரி எதை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இரண்டிலும் 99.7சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 4.3 பிஎச்பி மற்றும் 3,500 ஆர்பிஎம்-இல் 6.5 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய பைக்கை வாங்கியிருப்பதை கொண்டாடியது ஒன்றும் குற்றமில்லை. ஆனால், அதனை மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் செய்திருக்க வேண்டும். டீக்கடைக்காரர் முராரி லா குஷ்வாஹா இவ்வாறு விசித்திரமான செயல்களில் ஈடுப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 3 வருடங்களுக்கு முன்பு 12,500 ரூபாய் மொபைல் போனை வாங்கியதற்காக ரூ.25,000ஐ செலவு செய்திருந்தார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 16, 2024, 20:49 [IST]
English summary
Mp man celebrates dj party for his new tvs xl bike introduction check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X