மொத்த தமிழ்நாடும் இவங்க அழகுல மயங்கி கெடக்குது! பக்கத்து வீட்டு பொண்ணு மாரி சாதாரண டிரெஸ்ல கார்ல போனது அவங்களா

இந்தியாவில் திரையுலக நடிகைகளை அடிக்கடி சொகுசு கார்களில் (Luxury Cars) பயணம் செய்வதை காண முடியும். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்கு ஒரு சில நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். எனவே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவது என்பது அவர்களுக்கு மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் எங்கு சென்றாலும் சொகுசு கார்களைதான் பயன்படுத்துகின்றனர். அந்த சமயங்களில் எடுக்கப்படும் அவர்களின் வைரல் வீடியோக்கள் (Viral Videos), சமூக வலை தளங்களில் பரவுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த வரிசையில் சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகையான மிருணாள் தாகூர் (Mrunal Thakur) ஆவார். 32 வயதாகும் இவர் பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளார்.

Mrunal Thakur Once Again Spotted In Luxury Sedan

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து, ஹிந்தி, தெலுங்கு மற்றும் மராத்தி என பல மொழிகளின் திரைப்படங்களிலும் மிருணாள் தாகூர் நடித்து வருகிறார். ஆனால் இன்னும் ஒரு நேரடி தமிழ் படத்தில் கூட மிருணாள் தாகூர் நடித்தது கிடையாது. இருப்பினும் தமிழ்நாட்டில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கு தெலுங்கு திரைப்படமான சீதா ராமம் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இதுநாள் வரையில் நேரடி தமிழ் திரைப்படம் எதிலும் நடிக்கவில்லை என்றாலும் கூட, கூடிய விரைவில் அவர் தமிழில் அறிமுகம் ஆக உள்ளார். சூர்யா (Suriya) நடிப்பில், ஆர்ஜே பாலாஜி (RJ Balaji) இயக்கி வரும் திரைப்படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Mrunal Thakur

இந்த சூழலில் தற்போது வைரலாக பரவி வரும் வைரல் வீடியோவில் மிருணாள் தாகூரை மிகவும் எளிமையான உடையில் நம்மால் பார்க்க முடிகிறது. நடிகைகளுக்கே உரித்தான ஆடம்பர உடையை அணியாமல், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் மிருணாள் தாகூர் வந்து சென்றுள்ளார்.

மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு கஃபேவிற்கு மிருணாள் தாகூர் வந்து சென்றபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் மிருணாள் தாகூர் ஒரு சொகுசு காரில் ஏறுவதை நம்மால் காண முடிகிறது. அவர் காரில் ஏறுவதுடன் இந்த வைரல் வீடியோ முடிந்து விடுகிறது.

அத்துடன் காரின் காட்சிகள் ஒரு சில வினாடிகள் மட்டுமே வருகின்றன. இதன் காரணமாக மிருணாள் தாகூர் பயணம் செய்தது என்ன கார்? என்பதை உறுதியாக கூற முடியவில்லை. எனினும் இது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) காராக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

மிருணாள் தாகூர் கடந்த காலங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் பல்வேறு இடங்களுக்கு வந்து சென்றுள்ளார். அந்த வீடியோ காட்சிகளையும், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ காட்சிகளையும் ஒப்பிட்டு பார்த்ததில், கார் ஒன்று போலவே இருக்கிறது. எனவே தற்போது மிருணாள் தாகூர் பயணம் செய்தது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காராக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் இந்த கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், S-Class S 350d வேரியண்ட்டின் விலை 1.79 கோடி ரூபாயாக உள்ளது. மறுபக்கம் S-Class S450 4Matic வேரியண்ட்டின் விலை 1.90 கோடி ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை முறையே 2.25 கோடி ரூபாய் மற்றும் 2.37 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இதில், மிருணாள் தாகூரிடம் இருப்பது S-Class S450 4Matic ஆகும். அதாவது 2.37 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அவர் பயன்படுத்தி வருகிறார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிருணாள் தாகூரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் மட்டுமல்லாது, ஹோண்டா அக்கார்டு (Honda Accord) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களும் உள்ளன. இதில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரானது, எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

ஆனால் ஹோண்டா அக்கார்டு காரானது, செடான் ரகத்தை சேர்ந்தது ஆகும். மிருணாள் தாகூர் அடிக்கடி பயன்படுத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரும் செடான் ரகத்தை சேர்ந்தது என்பதால், அவர் செடான் ரக கார்களை விரும்ப கூடியவராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 11, 2025, 19:26 [IST]
English summary
Mrunal thakur once again spotted in luxury sedan in mumbai viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+