ரோட்டோர பூக்கடையில் வந்து நின்ற ரெண்டரை கோடி ரூபா கார்! உள்ளே இருந்து இறங்கியவரை பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class). தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 1.79 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.90 கோடி ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த காரை, இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ள இந்திய திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை தயாரித்தால், அது அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்லும்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aishwarya Rai Bachchan) மற்றும் கரீனா கபூர் கான் (Kareena Kapoor Khan) போன்ற நடிகைகளிடம் எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மற்றொரு பிரபல நடிகையான மிருணாள் தாக்கூரிடமும் (Mrunal Thakur), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் உள்ளது.
அவர் தன்னுடைய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. Instant Bollywood இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் பூக்கடை ஒன்றில் மிருணாள் தாகூர் நின்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவருக்கு பின்னால் அவருடைய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் நிற்பதை நாம் பார்க்கலாம். இந்த வைரல் வீடியோ மும்பை நகரில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார், சாலையோர பூக்கடை முன்பு வந்து நின்றதை பார்த்ததும், அங்கிருந்த மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பின்னர் அந்த காரில் இருந்து மிருணாள் தாகூர் இறங்கியதை கண்டதும், அவர்களின் ஆச்சரியம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. மிருணாள் தாகூரிடம் இருப்பது, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் எஸ்450 4மேட்டிக் (S450 4Matic) வேரியண்ட் ஆகும். இதுதான் இந்த காரின் டாப் வேரியண்ட் ஆகும்.
அதாவது இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், 1.90 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை சுமாராக 2.40 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். மிருணாள் தாகூரிடம் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 5,500 - 6,100 ஆர்பிஎம்மில் 362.07 பிஹெச்பி பவரையும், 1,600 - 4,500 ஆர்பிஎம்மில் 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு 9ஜி-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வேரியண்ட் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளிலேயே எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது. அத்துடன் இந்த காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
இதில், பனரோமிக் ஸ்லைடிங் சன்ரூஃப், டிஜிட்டல் லைட், சாய்த்து கொள்ள கூடிய வகையிலான மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கை, பர்ம்ஸ்டர் 3டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், நப்பா லெதர் உடன் கூடிய மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
மேலும் முன் மற்றும் பின் பகுதியில் மொபைல் டிவைஸ்களுக்கான வயர்லெஸ் சார்ஜர், 32.5 செமீ (12.8 இன்ச்) சென்ட்ரல் டிஸ்ப்ளே, MBUX என்டர்டெயின்மெண்ட் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) ஆகிய வசதிகளும், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிருணாள் தாகூரை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காருடன் பார்ப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களிலும் பல முறை அவரை இந்த காரில் பார்க்க முடிந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார், சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது. இதன் காரணமாகவே மிருணாள் தாகூர் போன்ற பிரபலங்கள், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








