அவங்க பைய பாக்கறதுக்காகவே இந்த வீடியோவ எத்தன தடவ வேணாலும் சலிக்காம பாக்கலாம்! செதுக்கன சிலை மாதிரி இருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் (Mercedes Benz S-Class S450 4Matic). இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் 1.86 கோடி ரூபாய் என்ற விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 2.10 கோடி ரூபாய் வரும்.

இந்த விலை உயர்ந்த காரை, பிரபல நடிகை ஒருவர் பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) ஆகும்.

Mrunal Thakur Spotted In Mercedes Benz S-Class S450 4Matic

ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் மிர்ணாள் தாகூர், சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் உள்பட அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமானார். மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மிருணாள் தாகூர் வந்து சென்றபோதுதான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலுக்கு சென்று வர அவர் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் காரில், 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 362 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Mercedes Benz S-Class S450 4Matic

64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், நப்பா லெதர் உடன் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் மற்றும் பின் பகுதியில் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்களாக உள்ளது. எனவே சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவை என இந்த காரை குறிப்பிடலாம்.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 740ஐ எம் ஸ்போர்ட் (BMW 7 Series 740i M Sport) உள்ளிட்ட கார்களுடன், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் கார் போட்டியிட்டு வருகிறது. இவை இரண்டுமே தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வீடியோவில் நாம் பார்க்கும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்450 4மேட்டிக் கார் மிருணாள் தாகூருடையதுதான். இதுதவிர டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஹோண்டா அக்கார்டு (Honda Accord) போன்ற கார்களையும் மிருணாள் தாகூர் வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் மற்றொரு ஹைலைட் உள்ளது. அது மிருணாள் தாகூர் கையில் வைத்திருக்கும் பை ஆகும். இந்த பையின் மதிப்பு சுமார் 31 ஆயிரம் ரூபாய் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விலை உயர்ந்த பைகள் அரிதான ஒரு விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

மிருணாள் தாகூர் வைத்திருந்த பை, கோச் அவென்யூ (COACH Avenue) என்று இந்த வீடியோவில் பேசும் நபர் கூறுகிறார். இந்த பை சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கிறார். இந்த பையின் விலை 31 ஆயிரம் ரூபாய் என்றாலும் கூட, அதிக 'டிமாண்ட்' காரணமாக உடனடியாக விற்று தீர்ந்து விட்டதாக அவர் கூறுவதையும் கேட்க முடிகிறது. இப்படிப்பட்ட ஒரு பையை மிருணாள் தாகூர் வைத்திருந்தது கவனம் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2024, 23:58 [IST]
English summary
Mrunal thakur spotted in mercedes benz s class s450 4matic viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+