2 கோடி ரூபாய் காரில் பிரபல நடிகரின் வீட்டுக்கு வந்த அழகு தேவதை! இளசுகளை எல்லாம் தவிக்க விட்டுட்டாங்க!

யூடியூப் (YouTube) தளத்தில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இதில், 2 இளம் நடிகைகளை (Actresses) நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் சுஹானா கான் (Suhana Khan) மற்றும் மிருணாள் தாகூர் (Mrunal Thakur) ஆகியோர் ஆவர்.

இதில் சுஹானா கானுக்கு நடிகை என்பதையும் கடந்து, ஷாருக்கானின் (Shah Rukh Khan) மகள் என்ற அடையாளமும் உள்ளது. மும்பை (Mumbai) நகரில் உள்ள மற்றொரு பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) வீட்டிற்கு அவர் காரில் வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Suhana Khan Spotted In Mercedes-Benz S-Class

மறுபக்கம் மிருணாள் தாக்கூர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கூட மிகவும் பிரபலமாக இருக்கிறார். இதற்கு சீதா ராமம் (Sita Ramam) திரைப்படம்தான் மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஐதராபாத் (Hyderabad) செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport) அவர் காரில் வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 2 நிகழ்வுகளையும் இணைத்து ஒரே வீடியோவாக யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். சுஹானா கான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகிய 2 நடிகைகளுமே பயன்படுத்தியது மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class) கார்தான் என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

Mrunal Thakur Spotted In Mercedes-Benz S-Class

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் ஆரம்ப விலை (Price) 1.71 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 2.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் பல லட்ச ரூபாய் கூடுதலாக வரும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்படுகின்றன. இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் பொருத்தப்பட்டிருப்பது, 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். மறுபக்கம் டீசல் வேரியண்ட்களில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உடனும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது. இது திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு கார் ஆகும். ஏனெனில் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) கூட மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ளார். அவரது மருமகளும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் (Abhishek Bachchan) மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பச்சனிடமும் தனியாக ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் உள்ளது.

இவர்களுடன் பாலிவுட் நடிகை கரீனா கபூர் (Kareena Kapoor) கூட, மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை வைத்துள்ளார். இந்த காரில் அவர் வலம் வந்த வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூட, இது தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு வழங்கியிருந்தது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, உல்லாச கப்பலில் மிதப்பது போன்ற சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். அத்துடன் ஏராளமான அதிநவீன வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவேதான் திரையுலகினர் பலரும் இந்த காரில் பயணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 13:50 [IST]
English summary
Mrunal thakur suhana khan spotted in mercedes benz s class viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+