4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்!

By Arun

தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

மகேந்திர சிங் டோனி... தலைக்கனமற்ற இந்த தலைவனின் பெயரை கேட்டால், அவரை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு கணம் மயிர்க்கால்கள் கூச்செரியும். மகேந்திர சிங் டோனி என்ற அந்த பெயரில் அப்படி ஒரு கம்பீரம், மிடுக்கு.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாக கொண்டாடப்படும் ஒரே தலைவன் மகேந்திர சிங் டோனி. ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்ற உலகின் ஒரே கேப்டனுக்கு ரசிகர்களுக்கு செலுத்தும் மரியாதை அது.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை சொந்தம் கொண்டாடினாலும், தமிழக ரசிகர்கள் மேல் ஒரு படி அதிக அன்பு கொண்டவர் மகேந்திர சிங் டோனி. பல சந்தர்ப்பங்களில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

அவருக்கு அதிர்ஷடம் என குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும். மகேந்திர சிங் டோனி தொட்டதெல்லாம் பொன்தான். இந்திய அணியுடன் சேர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி வரலாறும் அதை இந்த உலகிற்கு பறை சாற்றுகிறது.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

இப்படிப்பட்ட தன்னிகரற்ற தலைவனுக்கு இன்று (ஜூலை 7ம் தேதி) பிறந்தநாள். கிரிக்கெட்டும், ராணுவமும் டோனிக்கு எவ்வளவு விருப்பமோ, அதற்கு ஈடான விருப்பம் பைக் மற்றும் கார்களின் மீதும் அவருக்கு உள்ளது. அவரது அரிய பைக் மற்றும் கார் கலெக்ஸனை பார்க்கலாம்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

கான்பெடரேட் X132 ஹெல்கேட்

மஹியின் கேரேஜில் உள்ள விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்று கான்பெடரேட் X132 ஹெல்கேட். இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர், V-டிவின் இன்ஜின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்தியாவில் இந்த பைக்கின் விலை 60 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

கவாஸகி நின்ஜா H2

டோனியின் பைக் கலெக்ஸனில் அதிக ஹைலைட்டான ஒரு பைக் கவாஸகி நின்ஜா H2. இதனை கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஹி வாங்கினார். இதன்மூலம் கவாஸகி நின்ஜா H2 பைக்கின் முதல் இந்திய உரிமையாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

கவாஸகி நின்ஜா H2 பைக்கில், சூப்பர்சார்ஜ்டு 1.0 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்தியாவில் இந்த பைக்கின் விலை 33 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

கவாஸகி நின்ஜா ZX-14R

மஹியின் கேரேஜில் நிற்கும் மற்றொரு ஹைப்பர் பைக் கவாஸகி நின்ஜா ZX-14R. எச்2 பைக் வரும்வரை, கவாஸகி நிறுவனத்தின் நின்ஜா ரேஞ்ஞில் அதிக விலை கொண்ட பைக்காக இருந்தது ZX-14Rதான். இந்திய மார்க்கெட்டில் இதன் விலை 16.4 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

கவாஸகி நின்ஜா ZX-14R பைக்கில், 1.4 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 162.5 என்எம் என்ற டார்க் திறனுடன் இணைந்து 197 பிஎச்பி பவரை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

ஹார்லி டேவிட்சன் பேட் பாய்

மஹியிடம் உள்ள ரியல் க்ரூசியர் மோட்டார் சைக்கிள் என்றால், அது ஹார்லி டேவிட்சன் பேட் பாய்தான். இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 1,690 சிசி V-டிவின் இன்ஜின், 61 பிஎச்பி பவரையும், 132 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்தியாவில் இந்த பைக்கின் விலை 18.11 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

நார்டான் ஜூப்ளி 250

கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம், நார்டான் ஜூப்ளி 250 வின்டேஜ் மோட்டார் சைக்கிளை மஹி வாங்கினார். இந்த பைக்கில் 250 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரை உருவாக்கும்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

யமஹா ஆர்டி 350

மகேந்திர சிங் டோனி என்ற தலைவனாக உருவெடுப்பதற்கு முன்பாக அவர் வைத்திருந்த பைக் யமஹா ஆர்டி 350. மஹியின் முதல் பைக் இதுதான். இந்த பைக்கை அவர் வெறும் 4,500 ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் பல லட்சத்தில் வாங்கப்பட்ட பைக்குகளை விட இந்த பைக் மீதுதான் டோனிக்கு அக்கறை அதிகம்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார்

மஹியின் வின்டேஜ் கலெக்ஸனின் கீழ் வரும் பைக் இது. லெஜண்டரி பிரிட்டீஷ் மோட்டார் சைக்கிளான பிஎஸ்ஏ கோல்டுஸ்டாரில், 500 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடிய முதல் பிரிட்டீஷ் பைக்குகளில் இதுவும் ஒன்று.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

யமஹா FZ1

சென்னைதான் டோனிக்கு 2வது தாய் வீடு. சென்னையில் இருக்கும் சமயங்களில் யமஹா FZ1 பைக்கை டோனி அடிக்கடி பயன்படுத்துவார். இந்த பைக்கில், சென்னை சாலைகளில் டோனி வலம் வந்ததை பார்த்திருக்க கூடும்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

யமஹா FZ1 பைக்கில், 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்தியாவில் யமஹா FZ1 பைக்கின் தோராயமான விலை 11.36 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

ஹீரோ கரிஸ்மா ZMR

ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் தொடர் நாயகன் விருது வென்றதற்காக டோனிக்கு பரிசாக கிடைத்த பைக் ஹீரோ கரிஸ்மா ZMR.இந்த பைக்கில் 223 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை தோராயமாக 1 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

ஹம்மர் H2

பைக்குகளை போல டோனிக்கு கார்களையும் மிகவும் பிடிக்கும்தான். ஆனால் எஸ்யூவி கார்கள் என்றால் டோனிக்கு கொள்ளை பிரியம். இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு கவர்ச்சியான கார் ஹம்மர் H2.ஹம்மர் H2 காரை, டோனி தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்து கொண்டார்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

ராஞ்சியில் ஊர் சுற்றவும், ஏர் போர்ட்டுக்கு வரவும் ஹம்மர் H2 காரைதான் டோனி அடிக்கடி பயன்படுத்துவார். ஒரு முறை பஸ்ஸில் சென்று கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்களை ஓவர் டேக் செய்து டோனி வாய் பிளக்க வைத்தது இந்த காரில்தான்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

மெர்ஸிடிஸ் பென்ஸ் GLE

டோனியின் கேரேஜூக்கு வந்துள்ள புதிய எஸ்யூவி கார் மெர்ஸிடெஸ்-பென்ஸ் GLE. இந்த காரை டோனி, மகாராஷ்டிராவில் வைத்து பயன்படுத்துகிறார். மகாராஷ்டிரா செல்லும் போதெல்லாம், டோனியின் சாய்ஸ் மெர்ஸிடிஸ்-பென்ஸ் GLEதான். மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

லேண்ட் ரோவர் ப்ரீலேண்டர் 2

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் லேண்ட் ரோவர் எஸ்யூவி இதுதான். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜின், 148 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் விலை சுமார் 52 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

பெராரி 599 GTO

பெராரி 599 GTO காரை எடுத்தால், ரேஸில் பறப்பது போல்தான் ஓட்டவே தோன்றும். பெராரி 599 GTO காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 8,250 ஆர்பிஎம்மில் 661 பிஎச்பி பவரை உருவாக்கும். இதன் விலை சுமார் 3 கோடி ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

ஆடி Q7

ஆடி Q7 கார் டோனியிடம் உள்ளது. இந்த காரை அவரேதான் ஓட்டி செல்வார் என்பது மற்றொரு சிறப்பம்சம். டோனியிடம் இருப்பது ஆடி Q7 காரின் பழைய மாடல். இதில், பொருத்தப்பட்டுள்ள V12 டர்போஇன்ஜின், 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் ஆன்ரோடு விலை கிட்டத்தட்ட 90 லட்ச ரூபாய்.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

போர்ஸே 911

2.50 கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஸே 911, 22 லட்ச ரூபாய் மதிப்பிலான புகழ்பெற்ற எஸ்யூவி காரான பஜீரோ, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான ஜிஎம்சி சியரா, 21 லட்ச ரூபாய் மதிப்பிலான மிட்சுபிசி அவுட்லேண்டர் உள்ளிட்ட கார்களும் டோனியின் கேரேஜை அலங்கரிக்கின்றன.

4,500க்கு வாங்கிய முதல் பைக்! 'பர்த்டே பாய்' தல டோனியின் பைக், கார் கலெக்ஸன் குறித்த சுவாரசிய தகவல்கள்!

மஹிந்திரா ஸ்கார்பியோ

இவ்வளவு விலை உயர்ந்த கார்களுடன் சேர்த்து சில சாதாரண கார்களையும் கூட டோனி வைத்திருக்கிறார். டோனியின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுசூகி SX4, டொயோட்டா கோரெல்லா உள்ளிட்ட கார்களும் டோனியிடம் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
MS Dhoni birthday special-bikes and cars collection. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X