பைக் சேகரிப்பில் மாஸ் காட்டும் தல தோனி.. அவரு வாங்கி இருக்கும் இந்த பைக்கோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?
மிகப் பெரிய இருசக்கர வாகன காதலர் எம்எஸ் தோனி என்பது நம்மில் பலர் அறிந்ததே. கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்ல வாகன சேகரிப்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இவர் இருக்கின்றார். இதற்கு சான்றாக தோனி இடத்தில் ஏகப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. சொல்லப் போனால், ஓர் மியூசியம் வைக்கின்ற அளவிற்கு அவரிடத்தில் டூ-வீலர்கள் கலெக்சன்கள் இருக்கின்றன.
இருசக்கர வாகன காதலர்கள் பலர் தங்கள் கராஜில் சேர்த்துக் கொள்ள விரும்பும் மிக மிக அரிய வகை இருசக்கர வாகனங்கள்கூட தல தோனி இடத்தில் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே தோனி புதிதாக மற்றுமொரு புதுமுக பைக் ஒன்றை சேர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தல தோனி அந்த பைக்கை டெலிவரி பெறும் வீடியோக் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. தோனி வாங்கி இருப்பது ஜாவா 42 பாப்பர் (Jawa 42 Bobber) இருசக்கர வாகன மாடல் ஆகும். இதை தனுக்கு பிடித்த டேஸ்ட்டில் அவர் கஸ்டமைஸ் செய்து பெற்றிருக்கின்றார்.
பொதுவாக இந்தியாவில் வாகனங்களை கஸ்டமைஸ் செய்வது மோட்டார் வாகன சட்டத்தின் தண்டனைக்குரிய செயல் ஆகும். அதேவேளையில், ஒரு சில கஸ்டமைசேஷன்களுக்கு மோட்டார் வாகன சட்டம் அனுமதியளிக்கின்றது. இதன் அடிப்படையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஜாவா 42 பாப்பர் பைக்கையே எம்எஸ் தோனி தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார்.

சிறப்பு கஸ்டமைசேஷனால் அந்த பைக் வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறி இருக்கின்றது. குறிப்பாக, பைக்கிற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கும் பச்சை நிறம் பார்ப்போரின் மனதைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த லுக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக தங்க நிர கோடுகள் ஃப்யூவல் டேங்க், சைடு பேனல், முன் மற்றும் பின் பக்க மட்குவார்டுகள் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இவை அனைத்தும் சேர்ந்து 42 பாப்பர் பைக்கிற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்கி இருக்கின்றன. இதுதவிர, இருக்கையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. வழக்கமான ஜாவா 42 பாப்பர் பைக்கில் வழங்கப்பட்டிருப்பதைப் போல் இல்லாமல் இதன் இருக்கை சற்று தனித்துவமான நிறம் கொண்ட கவரால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இதுபோன்ற கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய மாற்றங்கள் மட்டுமே அந்த பைக்கில் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுதவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவில்லை. இதுகுறித்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. ஆகையால், எஞ்ஜின் மற்றும் மற்ற மெக்கானிக்கள் அம்சங்களில் வழக்கமான ஜாவா 42 பாப்பர் பைக்கைப் போலவே இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஜாவா 42 பாப்பர் மோட்டார்சைக்கிள் ரூ. 2.28 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 334 சிசி கெபாசிட்டி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 29.92 பிஎஸ் பவரையும், 32.74 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் மிக சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது. ஒருவர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் இந்த பைக்கில் இருக்கை வழங்கப்படுகின்றது.
தேவைப்பட்டால் இந்த பைக்கை இருவர் பயணிக்கும் வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் 2023 எடிசன் சமீபத்திலேயே வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பிரத்யேக வசதிகள் கொண்ட பைக்கையே தல தோனி தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார். இவரிடத்தில் யமஹா ஆர்டி 350 போன்ற அரிய வகை இருசக்கர வாகனங்கள்கூட பயன்பாட்டில் இருக்கின்றன.
இதுதவிர, கவாஸாகி நிஞ்ஜா எச்2 (Kawasaki Ninja H2), கான்ஃபெட்ரேட் எக்ஸ்132 ஹெல்கேட் (Confederate X132 Hellcat), கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-14ஆர் (Kawasaki Ninja ZX-14R), ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் (Harley Davidson Fat Boy) உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களும் தோனியிடத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இந்த பைக்குகள் அனைத்தையும் உண்மையில் ஓர் மியூசியம் அமைத்து எம்எஸ் தோனி பராமரித்து வருகின்றார். இவர் அரிய வகை பைக் மட்டுமல்ல கார்கள் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில், நிஸான் ஜுங்கா (Nissan Jonga One-Ton pick up truck) போன்ற வாகனம்கூட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









