என்னங்க இந்த மனுசன் இப்படி இருக்காரு! அணிந்திருந்த டி-சர்ட்டால் ரசிகரின் பைக்கை துடைத்த தோனி! இவ்வளவு எளிமையா!
பிரபலங்களை பார்ப்பதே பெரிய விஷயம். அதுவும் மனசுக்கு பிடித்த பிரபலத்தை பார்த்துவிட்டால், கை-கால் ஓடாது. அவர்களிடம் இருந்து நினைவாக குறைந்தபட்சம் ஓர் ஆட்டிகிராஃப்டையாவது வாங்கிவிட வேண்டும் என மனம் அலை பாயும். அவ்வாறு, சமீபத்தில் தல தோனியை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் சந்தித்து இருக்கின்றார்.
அந்த நேரத்தில் அவருடைய பைக்கை காண்பித்து, அந்த பைக்கில் ஆட்டோகிராஃப்ட் போடுமாறு கேட்டு இருக்கின்றார். இந்த நிலையிலேயே, தல தோனி அந்த ஆச்சரியமளிக்கும் செயலை செய்திருக்கின்றார். ஆட்டோகிராஃப்ட்-ஐ பைக்கில் போடும் முன், அந்த இடத்தை அவராகவே சுத்தம் செய்து ஆட்டோகிராஃப்ட் செய்திருக்கின்றார்.

அதுவும், அவர் அணிந்திருந்த டி-சர்ட்டைக் கொண்டு அவர் சுத்தம் செய்து ஆட்டோகிராஃப்ட் போட்டிருக்கின்றார். தல தோனியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒரு சில பிரபலங்கள் மற்றவர்களின் உடைமைகளை தொடவே யோசிக்கும் இந்த காலத்தில் தல தோனி அவர் அணிந்திருந்த டி-சர்ட்டைக் கொண்டு சுத்தம் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.
தல தோனி மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். இதனாலேயே அவர் இவ்வாறு செய்திருக்கின்றார். இவரை வாகன காதலர் என்பதற்கு பதிலாக இருசக்கர தீவிர வெறியர் என கூறலாம். அந்த அளவிற்கு மோட்டார்சைக்கிள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக கிரிக்கெட் வீரர் தோனி காட்சியளிக்கின்றார்.
இதற்கு சான்றாக அவரிடத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஓர் மியூசியம் வைக்கும் அளவிற்கு அவரிடத்தில் மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. மேலும், அவற்றை நிறுத்தி வைப்பதற்கு என்று தனி கராஜை அவர் உருவாக்கி, அதன் வாயிலாக தன்னுடைய பைக் கலெக்சன் அனைத்தையும் அவர் பராமரித்து வருகின்றார்.
சொல்லப்போனால் இந்த கராஜே ஓர் மியூசியத்தைப் போலிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மாபெரும் வாகன ஆர்வலரே தல தோனி ஆவார். இந்த மாதிரியான ஓர் நபராக இருக்கின்ற காரணத்தினாலேயே அவர், தான் அணிந்திருந்த டி-சர்ட்டை வைத்து பைக்கின் முகப்பு பகுதி துடைத்து, அதன் பின்னர் ஆட்டோகிராஃப்ட் செய்திருக்கின்றார்.
தோனி ஆட்டோகிராஃப்ட் செய்த பைக் மாடல் டிரையம்ப் ராக்கெட் ஆர் (Triumph Rocket 3) ஆகும். இந்தியாவில் விற்பனையில் உள்ள மிக மிக உயரிய விலைக் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 19.90 லட்சம் ஆகும்.
இது ஓர் உயரிய வேரியண்ட் கிரெட்டா காரின் விலைஆகும். இத்தகைய அதிகபட்ச விலையிலேயே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், நாம் பார்த்தது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஒட்டுமொத்தமாக டிரையம்ப் ராக்கெட் 3 நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ராக்கெட் 3 ஆர், ராக்கெட் 3 ஜிடி, ராக்கெட் 3 ஜிடி குரோம் எடிசன் மற்றும் ராக்கெட் 3 ஆர் குரோம் எடிசன் ஆகியவையே அவை ஆகும். ராக்கெட் 3 ஜிடி குரோம் எடிசனே மிக மிக உயரிய விலைக் கொண்ட டிரையம்ப் ராக்கெட் 3 மாடலாகக் காட்சியளிக்கின்றது.
அதன் விலை ரூ. 21.40 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் 2500 சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 167 பிஎஸ் மற்றும் 221 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
நீண்ட தூர மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் பயணிக்க ஏற்ற பைக்காக இது காட்சியளிக்கின்றது. இத்தகைய அரிய வகை பைக்கிலேயே தல தோனி ஆட்டோகிராஃப்ட் செய்திருக்கின்றார். அதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, தல தோனியின் செயலின் காரணமாக இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தல தோனி இடத்தில் யமஹா ஆர்டி 350 போன்ற அரிய வகை இருசக்கர வாகனங்கள்கூட பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், கவாஸாகி நிஞ்ஜா எச்2, கான்ஃபெட்ரேட் எக்ஸ்132 ஹெல்கேட், கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-14ஆர், ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களும் தோனியிடத்தில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர சில அரிய வகை கார்களும் தோனியிடத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








