புது, புது கார்களில் காட்சி தரும் எம்.எஸ் தோனி!! படத்தில் ஏதேனும் நடிக்கிறாரா? அடுத்தடுத்து வெளியான வீடியோ!!
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீப வாரங்களாக வெவ்வேறான கார்களில் ராஞ்சி நகர சாலைகளில் காட்சி தந்துக் கொண்டு இருக்கிறார். இந்த வகையில் சமீபத்தில், மிக அரிய வகை காரை ராஞ்சியில் தோனி இயக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தவரான எம்.எஸ் தோனிக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் என்றாலே தனி பிரியம் என்பது நம் எல்லாருக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக, பைக்குகளை இயக்க தோனி கூடுதல் ஆர்வம் காட்டக்கூடியவர் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். தோனியிடம் அந்த காலத்து கிளாசிக் பைக்குகளில் இருந்து இந்த காலத்து மாடர்ன் பைக்குகள் வரையில் ஏராளமானவை உள்ளன.

பைக்குகள் மட்டுமின்றி, பல வகையான கார்களும் தோனியிடம் உள்ளன. இந்த பைக்குகள் மற்றும் கார்களை நிறுத்துவதற்காகவே வீட்டிற்கு அருகே பெரியதாக ஓர் கேரேஜை தோனி வைத்துள்ளார். சமீபத்தில் இந்த கேரேஜை பார்வையிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான தோனியின் பைக் & கார் கலெக்ஷன்களை கண்டு ஒரு நிமிடம் வாயடைத்து போய் நின்றார்.
இந்த சம்பவம் நடந்த பின் சில நாட்களில், சொந்த ஊரான ராஞ்சியில் அரிய ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றில் தோனி காட்சித் தந்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஓர் அரிய வகை காரை ராஞ்சியில் தோனி இயக்கி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த அரிய வகை கார் ரோல்ஸ்-ராய்ஸ் கிடையாது. 1973இல் உருவாக்கப்பட்ட பாண்டியக் டிரான்ஸ்-அம் ஆகும்.
இப்படியொரு பெயரிலான காரை பலர் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். இன்னும் சொல்ல போனால், இப்படியொரு கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதே கிடையாது. இதனை தோனி வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்து பெற்றுள்ளார். இதனால்தான், காரில் இடது-கை-டிரைவ் ஸ்டேரிங் உள்ளது. அதாவது வீடியோவில், காரின் இடது பக்கத்தில் அமர்ந்து தோனி டிரைவ் செய்வதை பார்க்கலாம்.
வீடியோவில், காரினுள் எம்.எஸ் தோனியை தவிர்த்து வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த காரில் மஹாராஷ்டிரா மாநில நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளது. சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள தோனியின் பாண்டியக் டிரான்ஸ்-அம் கார் 50 வருடம் பழமையானது என்றால், நம்பவே முடியவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு கார் புத்துணர்ச்சியான தோற்றத்தில் உள்ளது.

அமெரிக்கன் கார் தயாரிப்பு நிறுவனமான பாண்டியக் ஃபயர்பேர்டு இந்த காரை உருவாக்கியது. 1967இல் வெளியான ஃபயர்பேர்டு காரின் மூலமாக இந்த நிறுவனம் அமெரிக்காவில் பிரபலமாகியது. அதன்பின் இந்த பிராண்டில் இருந்து சில மாடல்கள் புதியதாக வெளிவந்தன. இவை அனைத்தும் ஃபயர்பேர்ட் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவையாக இருந்தன. அவற்றுள் ஒன்று தான் டிரான்ஸ் அம் ஆகும். டிரான்ஸ் அம் கார்கள் 1967இல் இருந்து 2002ஆம் ஆண்டு வரையில் உருவாக்கப்பட்டன.
இந்த காலக்கட்டத்தில், டிரான்ஸ் அம் கார்கள் மொத்தம் நான்கு தலைமுறைகளில் வெளிவந்தன. இதில் 1973இல் தயாரிக்கப்பட்ட 2ஆம் தலைமுறை மாடலையே தோனி வைத்துள்ளார். 2ஆம் தலைமுறை டிரான்ஸ் அம் கார்கள் 1981ஆம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டன. அதன்பின், 1982இல் 3ஆம் தலைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. டிரான்ஸ் அம் கார்கள் அனைத்தும் இரண்டு கதவுகளை மட்டுமே கொண்ட கூபே-ஸ்டைல் கார்களாகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியதுபோல், மகேந்திர சிங் தோனி கொஞ்சம் வித்தியாசமான மனிதர் தான். ஏனெனில், அமெரிக்காவில் 1970ஆம் காலக்கட்டங்களில் விற்பனையில் இருந்த ஓர் அரிய வகை காரை தோனி வைத்துள்ளார். அதைவிட ஹைலைட் என்னவென்றால், அத்தகைய பழமையான காரை தோனி இப்போதும் பயன்படுத்தி வருவதுதான்.


Click it and Unblock the Notifications








