டிராக்டரில் முழு விவசாயியாக... தோனிக்கு தெரியாத வேலை எதுதாங்க!! கொல மாஸு...

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும், ஆட்டோமொபைல் துறைக்கும் இடையேயான பிணைப்பை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவிற்கு மோட்டார் வாகனங்களையும் விரும்பக்கூடியவர் தோனி.

இதற்கு உதாரணமாக பல வீடியோக்களையும், படங்களையும் இதற்குமுன் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் தோனி டிராக்டர் ஒன்றை இயக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகேந்திர சிங் தோனி பிறந்து வளர்ந்தது ராஞ்சி என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே. தோனி இந்த பைக்கை ஓட்டினார், இந்த காரை டிரைவ் செய்தார் என வெளியாகும் வீடியோக்களில் பெரும்பாலானவை ராஞ்சியில் இருந்தே வெளியானவை. தோனி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டரை இயக்குவது ஒன்றும் புதியதல்ல. சில முறை டிராக்டர்களை இயக்கும்போதும் தோனி காட்சி தந்திருக்கிறார்.

கிரிக்கெட் மைதானத்தில் புற்களை வெட்ட பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான டிராக்டரை சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்பக்கால கட்டத்தின்போது தோனி மற்ற கிரிக்கெட் வீரர்களை அமர வைத்து இயக்கும் புகைப்படம் உங்களில் பலருக்கு இப்போதும் ஞாபகம் இருக்கலாம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், முதல்முறையாக விவசாய நிலத்தை டிராக்டரை கொண்டு தோனி உழுவதை பார்க்க முடிகிறது.

தோனிக்கு தெரியாத வேலை எதுதாங்க - டிராக்டரில் முழு விவசாயியாக

வெறும் 50 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவில், இந்த நேரத்திற்கு உள்ளாகவே ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலத்தை உழுது, அதன்பின் அதனை தோனி சமன் செய்வது சிறு சிறு க்ளிப்களாக காட்டப்பட்டுள்ளன. பொதுவாக நிலத்தை உழுவதற்கும், பின்னர் அதனை சமன் செய்வதற்கும் டிராக்டரின் பின்பக்கத்தில் வெவ்வேறு விதமான கொக்கிகளை பயன்படுத்துவர். இதனை பஜக் ரோட்டரி என அழைப்பர்.

இந்த பஜக் ரோட்டரிகளை வீடியோவில் தோனியின் டிராக்டரிலும் காண முடிகிறது. உண்மையில், தினந்தோறும் டிராக்டரை கொண்டு நிலத்தை உழும் விவசாயியை போன்று தோனியும் மிகவும் சிறப்பாக டிராக்டரை ஹேண்டில் செய்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவில் தோனி பயன்படுத்தி இருப்பது ஸ்வராஜ் 963 எஃப்.இ டிராக்டர் ஆகும். எந்தவொரு நிலப்பரப்பும் ஏற்ப எளிதாக பொருந்திவிடக்கூடிய இந்த டிராக்டர் விவசாயிகள் மத்தியில் பிரபலமானதாக விளங்குகிறது.

தோனிக்கு தெரியாத வேலை எதுதாங்க - டிராக்டரில் முழு விவசாயியாக

சிறந்த செயல்படுதிறனுக்காக இந்த டிராக்டரில் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்வராஜ் டிராக்டர்கள் அவற்றின் ஆற்றல்மிக்க என்ஜின்களினால் பிரபலமானவை. தோனியிடம் உள்ள ஸ்வராஜ் 963 எஃப்.இ டிராக்டரில் 3-சிலிண்டர், 3478சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 60 எச்பி வரையிலான ஆற்றலை டிராக்டருக்கு வழங்கக்கூடியது.

ட்யூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இடம்பெற்ற இந்த டிராக்டரில் முன்பக்கமாக செல்வதற்கு மொத்தம் 12 கியர்களும், பின்பக்கமாக செல்வதற்கு 2 கியர்களும் இருக்கின்றன. இவற்றின் மூலமாக முன்பக்கமாக மணிக்கு 900 மீட்டர் வேகத்தில் இருந்து 31.70 கிமீ வேகம் வரையிலும், ரிவர்ஸில் 2.8 கிமீ வேகத்தில் இருந்து 10.6 கிமீ வேகத்திலும் பயணிக்கலாம். மேலும், இந்த குறிப்பிட்ட ஸ்வராஜ் டிராக்டரில் ஆயில் மூலமாக செயல்படக்கூடிய டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

Article Published On: Sunday, February 12, 2023, 21:49 [IST]
English summary
Ms dhoni drives tractor at his farmhouse in ranchi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+