மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறிய தோனி! அவர் ஓட்டி வந்த சைக்கிளை பற்றி தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஒரு எலெக்ட்ரிக் சைக்கிள் கம்பெனிக்கான விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்தியில் வெளியான அனிமல் திரைப்படத்தின் காட்சிகளை வைத்து இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் தோனி எந்த எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு விளம்பரம் செய்கிறார்? அந்த சைக்கிளில் அப்படி என்னதான் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம்.
இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரராக இருப்பவர் தோனி. இவர் சமீபகாலமாக பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார். இவர் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் எலெக்ட்ரிக் சைக்கிள் நிறுவனத்திற்கான விளம்பரத்தில் நடித்துள்ளர். இவருடன் இந்தியில் பிரபல இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்காவும் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதில் இந்தியில் வெளியாகி பிரபலமான அனிமல் திரைப்படத்தை வைத்து இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கஃபூர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் பைக்கை வைத்து பல இடங்களில் வரும் முக்கிய காட்சிகளில் தோனி எலெக்ட்ரிக் சைக்கிளை வைத்து நடித்திருந்தார். தோனியும் அந்த படத்தில் ரன்பீர் கஃபூர் வருவது போல நீளமான முடியுடன் காட்சியளித்தார். தோனி ஆரம்ப காலகட்டத்தில் நீளமான முடிவை வைத்திருந்தார். அதை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த கெட்டப் இருக்கிறது.
இந்த விளம்பரத்தில் தோனி ஓட்டி வருவது இ-மோட்டோராட் என்ற நிறுவனத்தின் டூடில் என்ற எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இந்த சைக்கிளை பொருத்தவரை மடித்து வைத்து காரில் எடுத்து செல்லும் அம்சம் கொண்டது. இதை காட்டும் விதமாக காரிலிருந்து துப்பாக்கியை எடுக்கும் காட்சியாக இந்த காட்சி சித்தரிக்கப்பட்டு சைக்கிளாக மாறியது.

இந்த சைக்கிளை பொருத்தவரை 12.75 ஆம்ஸ்ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சைக்கிள் 60 கிமீ தூரம் வரை அழுத்தாமலேயே இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் அதிகபட்சமாக 25 கி.மீ வேகத்தில் பயணக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலையை பொருத்தவரை தற்போது ரூ52,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த சைக்கிள் மடித்து வைக்க கூடிய அலுமினியம் அலாய் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கியர்கள் எல்லாம் ஷிமானோ டூர்னாய் டிஇசட்500 என்ற 7 ஸ்பீடு கியர் உடன் பொகருத்தப்பட்டுள்ளது. இதை முழு திராட்டல் மூலம் 45 கி.மீ இயக்கலாம். பாஸ் மூலம் 60 கி.மீ கூட இயக்க முடியும். இந்த சைக்கிளில் முன்பக்கம் 60 மிமீ சஸ்பென்சன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்பிளேக்காக கிளஸ்டர் சி6 டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சைக்கிள் மொத்தம் 110 கிலோ எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளின் சிறப்பம்சமே இதில் பொருத்தப்ப்டடுள்ள ஃபிரேம் தான். இதற்கு வாழ்நாள் முழுவதும் வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த விளம்பரத்தில் அவர் ஓட்டி வரும் மற்றோரு சைக்கிள் டி-ரெக்ஸ் ப்ரோ சைக்கிள் ஆகும்.
இந்த சைக்கிளை பொருத்தவரை 13 ஆம்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் அலுமினியர் அலாய் ஃபிரேம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 7 ஸ்பீடு கியர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ வரை பாஸ் மூலம் பயணிக்க முடியும் 45 கி.மீ திராட்டல் மூலம் பயணிக்க முடியும். இந்த சைக்கிளுக்கு முன்பக்கம் 100 மிமீ சஸ்பென்சன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிளின் விலை ரூ52,999 ஆகும். இந்த சைக்கிளுக்கும் வாழ்நாள் வாரண்டி வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நவீன காலத்தில் அனைவரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக் என மாறி வரும் நிலையில் எலெக்ட்ரிக் சைக்கிள் தற்போது சைக்கிள் ரைடிங் பிரிவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். தோனி போன்ற பிரபலங்கள் இந்த வாகனங்களுக்கு விளம்பரம் செய்வது நிச்சயம் இந்த சைக்கிள் குறித்த விழிப்புணர்வை பலருக்கு எடுத்து செல்லும் இந்த விளம்பரம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









