விலை கோடிகள்ல இருந்தாலும் மனுஷன் பாக்குறது இல்ல.. வீடியோ இருந்தும் என்ன காரை வாங்கினாரு கண்டுபிடிக்க முடியல!
கிரிக்கெட் விளையாட்டிற்காக மட்டுமல்ல வாகன சேகரிப்பிற்காகவும் அறியப்படும் நபராக உள்ளார் எம்எஸ் தோனி. இவரிடத்தில் மாபெரும் வாகன கலெக்சன் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, டூ-வீலர்களை மிக அதிக எண்ணிக்கையில் இவர் வைத்திருக்கின்றார். ஓர் மியூசியம் வைக்கும் அளவிற்கே அவரிடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன. இவருடைய கலெக்சனில் அரிய வகை மோட்டார்சைக்கிள்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இதுமட்டுமல்ல, அரிய வகை மற்றும் ஆடம்பர வகை கார்களும் அவரிடத்தில் உள்ளன.
இந்த மாதிரியான சூழலில் எம்எஸ் தோனி மேலும் ஓர் ஆடம்பர காரை தன்னுடைய வாகன சேகரிப்பில் புதிதாக இணைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக எம்எஸ் தோனிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் புத்தம் புதிய கார் ஒன்று ஃபிளாட் வாகனம் வாயிலாக கொண்டு வரப்பட்டு டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீடியோ ஒன்றும் அதனுடன் வெளியாகி இருக்கின்றது. தோனியின் வீட்டிற்கு வந்திருப்பது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி (Land Rover Range Rover Autobiography) கார் மாடல் ஆகும். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
ஆனால், இந்த கார் மாடலைதான் அவர் வாங்கி இருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. காரணம் அந்த வாகனம் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இருப்பினும், அதன் பக்கவாட்டு தோற்றத்தை பார்க்கையில் அது ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி என்பதை நம்மால் கணிக்க முடிகின்றது.
ஆம் கணிப்பின் அடிப்படையிலேயே இது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபியாக இருக்கும் என நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம். ஆனால், இது பார்க்க லேண்ட் ரோவரின் மற்றுமொரு புகழ்பெற்ற கார் மாடலான டிஃபெண்டர் (Defender)ஐப் போலவும் காட்சியளிக்கின்றது. ஆனால், இதையும் உறுதியாக கூறிவிட முடியாது.
எனவே எந்த கார் மாடலை எம்எஸ் தோனி வாங்கி உள்ளார் என்பது துள்ளியமாக கூற முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால், இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றாக மட்டுமே அது இருக்கும் என எங்களால் உறுதியாக கூறிவிட முடியும். இணையத்திலும் இதுகுறித்த வாக்குவாதம் போராட்டாம் போல மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றது. இரண்டு கார்களும் இந்தியாவில் மிகவும் அதீத விலையில் விற்கப்படுகின்றன.
குறிப்பாக, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி இந்தியாவில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதேபோல், டிஃபெண்டர் ரூ. 1.50 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காஸ்ட்லியான கார் மாடலையே தற்போது தல தோனி வாங்கி இருக்கின்றார்.
இரண்டும் மிக அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த வாகனங்கள் ஆகும். இந்தியாவின் கரடு-முரடான சாலைக்கு ஏற்ற வாகனமாக அது காட்சியளிக்கின்றது. அதுமட்டுமல்ல இந்திய பணக்காரர்கள் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த உச்ச நட்சத்திரங்களின் பிரியமான கார் மாடலாகவும் அவை இருக்கின்றன. குறிப்பாக, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி செல்வந்தர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஃபஹத் பாசில் கூட வெகு சமீபத்தில் இந்த கார் மாடலை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








