டெங்கு கொசுவுக்கு பைக்கில் மருந்து அடித்த எம்.எஸ் தோனிக்கு ‘ஓ’ போடுங்க!! பழைய அரசு பஸ்ஸில் கூட இப்படி நடக்காது

மகேந்திர சிங் தோனி (Mahindra Singh Dhoni) இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு தனது யமஹா ஆர்டி350 பைக்கில் லிஃப்ட் கொடுத்துள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, அந்த இளம் கிரிக்கெட் வீரர் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் என்றாலே கூடுதல் பிரியம் என்பது நமக்கு தெரியும். சமீபத்தில் தோனியின் கேரேஜ் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்று இருந்தது. ஏனெனில், அந்த அளவிற்கு தோனியின் கேரேஜ் பல்வேறு வகையிலான கார்களினாலும், நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்களினாலும் நிரம்பி வழிகிறது.

dhoni gave lift to cricketer

குறிப்பாக, மோட்டார்சைக்கிள்களை தோனி அதிகளவில் விரும்பக்கூடியவர். தோனியிடம் அன்றைய கால கிளாசிக் பைக்குகளில் இருந்து இன்றைய கால மாடர்ன் பைக்குகள் வரையில் ஏகப்பட்டவை உள்ளன. ஆனால், பெரும்பாலும் தோனி பழமையான பைக்குகளிலேயே விரும்பக்கூடியவராக விளங்குகிறார். இதற்கு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஓர் சாட்சியாகும்.

ஏனெனில் இந்த வீடியோவில், தோனி கிளாசிக் மோட்டார்சைக்கிளான யமஹா ஆர்டி350-ஐ ஓட்டுகிறார். இந்த வீடியோவை வெளியிட்டவர், தோனியுடன் கிரிக்கெட் பயிற்சி ஈடுப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆவார். ஜார்க்காண்ட் மாநிலம், ராஞ்சியில் தோனி வசிக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தோனி அவ்வப்போது, அருகில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.

அவ்வாறு, சமீபத்தில் தோனி பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருக்க, அவருடன் சேர்ந்து ஓர் இளம் கிரிக்கெட் வீரரும் பயிற்சி செய்துள்ளார். பின்னர், பயிற்சி முடிந்ததும் தோனியிடம் அந்த இளம் வீரர் லிஃப்ட் கேட்டிருப்பார் போல. தன்னுடைய யமஹா ஆர்டி350 பைக்கில் அந்த நபரை பின்னால் அமர வைத்து தோனி அழைத்து சென்றுள்ளார். இதனை, அந்த இளம் வீரர் தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.

தோனி பைக் ஓட்டுவதை நாம் பலமுறை வீடியோக்களில் பார்த்துள்ளோம். சிலர், நேரில் கூட பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த வீடியோ நமக்கு புதுமையான உணர்வை தருகிறது. ஏனெனில், தோனி தனது பைக்குகளை எவ்வாறு ஓட்டுகிறார் என்பதை மிக அருகாமையில் இருந்து இந்த வீடியோவின் வாயிலாக பார்க்க முடிகிறது. உண்மையில், தோனி மிக ஸ்டைலாகவும், ஆக்ரோஷமாகவும் பைக் ஓட்டுகிறார் என்பதை கூறியே ஆக வேண்டும்.

dhoni gave lift to cricketer

ஓர் நன்கு அனுபவமிக்க பைக் ரைடரின் செயல்பாடுகளை தோனியிடம் காண முடிகிறது. ஆனால், அந்த இளம் வீரர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவினால் ஓர் விவாதமும் இணையத்தில் உருவாகியுள்ளது. அதாவது வீடியோவில், தோனியின் ஆர்டி350 பைக் அளவுக்கு அதிகமாக புகையை கக்குவதை காணலாம். வீடியோவை பார்க்கும் பலரது கவனம் இந்த புகையின் மீதே விழுகிறது. ஏனெனில், இன்றைய கால பைக்குகளில் இந்த அளவிற்கு புகை வெளிவருவது இல்லை.

"அந்த கால அரசு பேருந்துகளில் கூட இவ்வளவு புகை வெளிவரவில்லை" என பலர் இந்த வீடியோவிற்கு கீழ் கமெண்ட் செய்துள்ளனர். அத்துடன், பைக்கில் அமர்ந்து பயணம் செய்துள்ள அந்த இளம் வீரர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதும் கண்டன பேச்சுக்களாக எழுந்துள்ளது. வீடியோவில் முகம் தெரிவதற்காக இவ்வாறு அந்த நபர் ஹெல்மெட் அணியாமல் இருந்திருக்கலாம். ஆனால், எப்படியிருந்தாலும் இது தவறு.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2-வீலர் பயணத்தில் பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிந்திருப்பது அவசியம். இதை விட மோசம், தோனியின் பைக்கில் இருந்து வெளிவரும் அதிகப்படியான புகை. தோனியின் யமஹா ஆர்டி350 பைக் பழமையானது மற்றும் அவ்வப்போது பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இதனால்தான், மத்திய அரசாங்கம் பழமையான வாகனங்களை முடிந்த வரையில் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது.

Article Published On: Saturday, September 16, 2023, 11:08 [IST]
English summary
Ms dhoni gave lift to young cricketer on his yamaha rd350
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+