மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

Written By:

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான டோணி கார், பைக் பிரியர் என்பது அறிந்ததே. அவரிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்களும், பைக்குகளும் கராஜில் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த நிலையில், அவர் தனது லேண்ட்ரோவர் காரில் மாருதி சர்வீஸ் மையத்திற்கு போன படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி வைரலாகி உள்ளன.

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

மஹேந்திர சிங் டோணியின் லேண்ட்ரோவர் கார் ஏன் மாருதி சர்வீஸ் மையத்திற்கு போக வேண்டும் என்ற ரீதியில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கான விடையை தரும் செய்தியாகி இது அமைகிறது.

Picture credit: Cartoq

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

டோணியிடம் பல சொகுசு கார்களும், சூப்பர் பைக்குகளும் இருந்தாலும், அவரது சொந்த ஊரான ராஞ்சியில் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட நேரடி சர்வீஸ் மையங்கள் இல்லை. மாருதி உள்ளிட்ட சில கார் நிறுவனங்களின் சர்வீஸ் மையங்கள் மட்டுமே அங்கு செயல்பட்டு வருகின்றன.

Picture credit: Team BHP

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

இதனால், தனது சொகுசு கார்களுக்கான வழக்கமான பராமரிப்புப் பணிகளை டோணி மேற்கொள்ள வேண்டுமெனில் நீண்ட தொலைவு அவர் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான கால விரயமும் அதிகம்.

Picture credit: DIKSHA RAJIVA/ Twitter

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

இந்த நிலையில், தன்னிடம் உள்ள சொகுசு கார்களை சர்வீஸ் செய்ய நீண்ட தூரம் எடுத்துச் செல்வதை தவிர்ப்பதற்காக, அவர் ராஞ்சியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில்தான் செய்வது வழக்கமாம்.

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

பொதுவாக, கார் சர்வீஸ் மையங்களில் பிற நிறுவனங்களின் கார்களை சர்வீஸ் செய்து கொடுப்பதில்லை. ஆனால், டோணிக்கு மட்டும் இந்த சர்வீஸ் மையத்தில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டு அவரது சொகுசு கார்கள் இங்கு சர்வீஸ் செய்து தரப்படுகிறது.

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

விலை உயர்ந்த கார்களின் எந்திரங்களும், தொழில்நுட்பங்களும் மிக சிக்கலானதாக இருந்தாலும், இந்த மாருதி சர்வீஸ் மையத்தில் சிறிய அளவிலான ரிப்பேர்களும், சர்வீஸ் பணிகளும் செய்து தரப்படுகிறது.

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

படத்தில் காணப்படும் லேண்ட்ரோவர் காரானது, விபத்தில் சிக்கி ஏற்பட்ட சிறிய சேதத்தை சரி செய்வதற்காக வந்தது தெரிய வந்துள்ளது. அதாவது பாடி ரிப்பேர் பணிகளுக்காக வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி சர்வீஸ் சென்டருக்கு போன டோணியின் லேண்ட்ரோவர்... ஏன் தெரியுமா?

இதே மாருதி சர்வீஸ் மையத்தில் சில மாதங்களுக்கு முன் டோணியின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரும் சர்வீஸ் செய்வதற்காக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
MS Dhoni’s Land Rover Spotted at a Maruti service center.
Story first published: Tuesday, June 6, 2017, 11:42 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark