பொழுதுபோகாமல் பைக்கை பார்ட் பார்ட்டாக கழற்றிய டோணி!

By Saravana

அடாத கிரிக்கெட்டிலிருந்து விடுபட்டு சிறிது ஓய்வெடுத்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணி வரும் 17ல் சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில், வீட்டில் இருந்த டோணிக்கு தனது பழைய ராஜ்தூத் பைக் நினைவு வந்துவிட்டது போலும். உடனே, துருபிடித்து கிடந்த அந்த பைக்கை கிடங்கிலிருந்து எடுத்து வந்து சரிசெய்யும் முயற்சிகளை எடுத்துள்ளார்.

அந்த பைக்கை பார்ட் பார்ட்டாக கழற்றி சரிசெய்ய முயன்ற டோணி அந்த பைக்கை எப்படி ஒன்று சேர்ப்பது என்று தெரியாமல் முழித்தபடி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இப்படி தனித்தனியாக கிடக்கும் பாகங்களை ஒன்று சேர்ப்பது யாரோ? என்று புலம்பியவாறு டிவிட்டியுள்ளார் டோணி.

எஸ்கோர்ட்ஸ் தயாரிப்பு

எஸ்கோர்ட்ஸ் தயாரிப்பு

ராஜ்தூத் 350 அல்லது ஆர்டி 350 என்றழைக்கப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளை யமஹாவிடமிருந்து லைசென்ஸ் பெற்று இந்தியாவின் எஸ்கோர்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

வேடிக்கை

வேடிக்கை

ஜப்பானில் யமஹா ஆர்டி350பி என்று விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை இந்திய நிலைகளுக்கு ஏற்ப சிறு மாறுதல்களை செய்து எஸ்கோர்ட்ஸ் இந்தியாவில் தயாரித்தது. ஜப்பானில் இந்த பைக் மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னைகளால் 1970ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனால், 1983ல் இந்தியா வந்த இந்த மோட்டார்சைக்கிள் அப்போது இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்துடன் வந்த பைக்காக தெரிவிக்கப்பட்டது.

 அபார பிக்கப்

அபார பிக்கப்

7 போர்ட் பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் 0 - 96 கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

1980களில் இந்தியாவின் பவர்ஃபுல் மோட்டார்சைக்கிளாக விளங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350க்கு போட்டியாக இந்த மோட்டார்சைக்கிள் களமிறக்கப்பட்டது. யெஸ்டி ரோட்கிங் 250 பைக்கும் இதற்கு மற்றொரு போட்டியாளராக இருந்தது.

ஃப்ளாப்

ஃப்ளாப்

அதிக விலை, குறைந்த மைலேஜ் போன்ற காரணங்களால் விற்பனையில் சோபிக்க முடியாமல் தடுமாறியது ராஜ்தூத் 350. இதற்கு துணையாகத்தான் 1985ல் பெரும் ரசிக பட்டாளத்தை பெற்ற யமஹா ஆர்எக்ஸ் 100 அறிமுகம் செய்யப்பட்டது.

உற்பத்தி நிறுத்தம்

உற்பத்தி நிறுத்தம்

ராஜ்தூத் 350 மோட்டார்சைக்கிளின் உற்பத்தி 1990ல் நிறுத்தப்பட்டது. 1991ம் ஆண்டு கடைசி ராஜ்தூத் 350 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.

 ராஜ்தூத் 175

ராஜ்தூத் 175

ராஜ்தூத் பிராண்டில் எஸ்கோர்ட்ஸ் நிறுவனம் 1962ம் ஆண்டு முதல் 173சிசி எஞ்சின் கொண்ட பைக்கை தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.

இது நம்ம பைக்

இது நம்ம பைக்

ஆங்கில எடிட்டர் ஜோபோவின் ராஜ்தூத் பைக்கை படத்தில் காணலாம். 5 ஆண்டுகளுக்கு முன் பல்சர் டிஸ்க் பிரேக், ஃபோர்க்குகள் மாற்றப்பட்டன.

ரேஸ் வெர்ஷன்

ரேஸ் வெர்ஷன்

ஜோபோவின் ராஜ்தூத் ஆர்டி 350 ரேஸ் மாடலை படத்தில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2013, 15:52 [IST]
English summary
India cricket captain MS Dhoni, who loves motorbikes, on Thursday, released pictures of his first bike.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+