ராயல் என்பீல்டு பைக்கில் ஹாயாக வலம் வந்த தல டோனி.. சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தல டோனி, ராயல் என்பீல்டு பைக்கில் ஹாயாக வலம் வந்த வீடியோ, போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தல டோனி, ராயல் என்பீல்டு பைக்கில் ஹாயாக வலம் வந்த வீடியோ, போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் டோனி, கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடினார். தற்போது இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

மகேந்திர சிங் டோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், அவர் இந்தியா திரும்பி விட்டார். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம், குடும்பத்துடன் சிம்லா கிளம்பி விடுவது தல டோனியின் வழக்கம். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அழகிய மலைவாசஸ்தலம்தான் சிம்லா.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரும் அதுதான். தற்போது கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு கிடைத்துள்ளதால், வழக்கம்போல குடும்பத்துடன் சிம்லாவுக்கு, 'வெகேஷன் டிரிப்' கிளம்பி விட்டார் தல டோனி. அவரது மனைவி சாக்ஸி, செல்ல மகள் ஜிவா ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

டோனிக்கு பைக், கார்கள் என்றால் கொள்ளை பிரியம். அதிலும் பைக்குகள் என்றால் சொல்லவே வேண்டாம். மற்ற பைக் ஆர்வலர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, வித்தியாசமான மற்றும் அரிதான பல பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார் டோனி.

இந்த சூழலில் அழகிய நகரமான சிம்லாவுக்கு சென்றுள்ள டோனி சும்மா இருப்பாரா என்ன? தனது ராயல் என்பீல்டு பைக்கை எடுத்து கொண்டு அப்படியே ஒரு டிரிப் கிளம்பி விட்டார் டோனி. அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள், தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

டோனியுடன் அவரது நெருங்கிய நண்பரும், ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவருமான அருண் பாண்டேவும் பயணித்துள்ளார். ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை டோனி தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான், டோனியின் ராயல் என்பீல்டு ரைடு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
விடுமுறையில் சிம்லா சென்றிருந்தாலும், டோனி தனது தொழில்ரீதியிலான கடமைகளையும் சரியாக செய்து வருகிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் சிம்லாவில் சில நட்சத்திரங்களுடன் இணைந்து, விளம்பர ஷூட்டிங் ஒன்றிலும் நடித்துள்ளார் தல டோனி.

டோனி திடீரென பைக்கை எடுத்து கொண்டு, சாலையில் அப்படியே ஹாயாக டிரிப் அடிப்பது ஒன்றும் புதிதல்ல. சென்னை நகர சாலைகளில், பல முறை டோனி பைக்கில் வலம் வந்துள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Rhiti Sports
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








