ரூ1.7 கோடி காரில் கையெழுத்து போட்ட தோனி, வைரலாகும் வீடியோ! இப்ப காரோட மதிப்பே வேற!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி (MS Dhoni) அவரது ரசிகரின் பிஎம்டபிள்யூ 740i (BMW 740i) சீரிஸ் காரில் தனது ஆட்டோகிராப் போட்ட வீடியோ (Viral Video) சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். தோனியின் கையெழுத்து இருப்பதாலேயே இந்த காரின் மதிப்பும் அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சொந்த ஊர் ராஞ்சி. இவர் வசிக்கும் பகுதியில் அபிஷேக் என்ற நபரும் வசித்து வருகிறார். அவர் தோனியின் மிகப்பெரிய ரசிகராக இருக்கிறார். இந்நிலையில் அபிஷேக்கிற்கு சொந்தமாக பிஎம்டபிள்யூ 740i சிரீஸ் கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த கார் அவரது வாழ்வில் மிக முக்கியமான விஷயமாக இருப்பதால் இதில் அவருக்கு பிடித்த தோனியின் கையெழுத்து இருக்க வேண்டும் என விரும்பினார்.

எப்படியோ தோனியை சந்தித்து பேசி இதற்கான சம்மதத்தையும் வாங்கினார். இதையடுத்து கிரிக்கெட் வீரர் தோனியும் இவர் காருக்குள் வந்து கையெழுத்து போட்டார் (Dhoni Signed BMW Car). இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தோனி இந்த காரின் பின்பக்க சீட்டில் ஏறுகிறார். காருக்குள் சென்றவர் பின்பக்க சீட்டில் அமர்ந்து கையெழுத்து போட தயாராகிறார்.
அவரது ரசிகர் அவரிடம் சில மார்க்கர்களை காண்பித்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கையெழுத்து போட சொல்லி கேட்கிறார். தோனியும் அதில் ஒரு மார்க்கரை தேர்வு செய்து காரில் எந்த இடத்தில் கையெழுத்து போடலாம் என பார்க்கிறார். அப்பொழுது பின்பக்க ஹேண்ட் டிரஸ்டுக்கு பின்னால் உள்ள பகுதியில் உள்ள ஒரு லெதர் ஷீட்டில் கையெழுத்து போடுகிறார். பின்னர் அவர் காரிலிருந்து பத்திரமாக வெளியே வருகிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து இந்த பிஎம்டபிள்யூ 740 ஐ கார் தற்போது விலை உயர்ந்த காராக மாறிவிட்டது. இந்த காருக்கான விலை இந்த கையெழுத்து காரணமாக அதிகமாகி விட்டது என்று எல்லாம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனி ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அவர் செய்த இந்த செயல் அவரது எளிமையையும் அவரது குணநலத்தையும் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தோனி கையெழுத்திட்ட இந்த பிஎம்டபிள்யூ 740 ஐ காரை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 1.7 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 12.61 கிலோ மீட்டர் மைலேஜ் தான் தரும் என கூறப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 7 விதமான நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. அதில் தோனி கையெழுத்திட்ட இந்த கார் பிளாக் சபையர் மெட்டாலிக் நிற காராகும்.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2998 சிசி 6 சிலிண்டர் ஆன்லைன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 375 பிஎச்பி பவரையும் 520 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பி56 டர்போ சார்ஜ்டு இன்ஜினாக இருக்கிறது.

இந்த இன்ஜின் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.4 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்ட இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 நபர்கள் பயணிக்கும் 4டோர் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 5391 மிமீ நீளமும் 1950 மிமீ அகலமும் 1544 மிமீ உயரமும் கொண்ட காராக இருக்கிறது.
இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஓவர் ஸ்பீடு வார்னிங், லேண்ட் டிபார்ச்சர் வார்னிங், எமெர்ஜென்சி பிரேக் லைட் பிளாசிங், பஞ்சர் கிட், முன்பக்க விபத்து வார்னிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங்,ஹைபீம் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராபிக் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இதுபோக 7 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங் பொருத்தவரை இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் இருக்கிறது. இதுபோகில் ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், சிஸ்டம் ரைட் ஹைட் அட்ஜஸ்ட்மென்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரன்சியல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த காரின் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் தான் பொருத்தப்பட்டுள்ளது.
இப்படியாக இந்த கார் அதிக விலை மதிப்பு கொண்ட அதே நேரம் அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசு வசதி நிறைந்த காராக இருக்கிறது. அதேநேரம் கிரிக்கெட் வீரர் தோணியிடமும் இதேபோல ஏகப்பட்ட கார்கள் உள்ளன. அவரிடம் ஃபெராரி நிறுவனத்தின் 599 ஜிடிஓ என்ற கார் இருக்கிறது.
இந்த கார் அதிகபட்சமாக 335 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட 660 எச்பி இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இதுபோக கஸ்டமைஸ் செய்யப்பட்ட நிஸான் ஜோங்கா காரையும் அவர் வைத்திருக்கிறார். இந்த காரில் 4.0 லிட்டர் பெட்ரோலின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இது போக அவரிடம் பல சொகுசு கார்களும் உள்ளன. அதன்படி ஆடி க்யூ7, மிட்சுபிஷி பஜிரோ எஸ்எஃப்எக்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ 2, லேண்ட்ரோவர் டிஃபெண்டர் 110, உள்ளிட்ட கார்களும் உள்ளன. இது கார் ஓட்டுவதை அப்போது நம்மால் சமூகவலைத்தளங்களில் காண முடிகிறது.
இதுபோக தோனி பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவரிடம் கவாசைக்கு நிஞ்சா ஹெச்2, சுஸூகி ஹயாபுஸா, யமஹா ஆர்டி 350 மற்றும் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் ஆகிய பைக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் ஜாவா 42 பாபர் பைக்கை ரூ2.25 லட்சம் கொடுத்து வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் வீரர் டோனி கார்,பைக் மீது அலாதி பிரியம் கொண்டவர் இவர் பலமுறை பொது சாலைகளில் பைக் ஓட்டி செல்வதை நம்மால் காண முடிந்தது. இவர் தனது ரசிகர்களுக்காக தற்போது ரூபாய் 1.7 கோடி மதிப்பிலான காரில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். தற்போது இவர் கையெழுத்து காரணமாகவே இந்த காரின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









